Saturday, November 18, 2023

பரம்பொருள் 4

 பெங்களூர் போத்தீஸ் துணி கடை இருக்கும் மெயின் ரோட்டின் நடுவில் டிராபிக் காரணமாக ஆட்டோ டிரைவர் எங்களை  இங்கேயே இறங்கி கொள்ளுங்கள்... அங்கிருந்து  நடந்துப் போகுமாறு சொன்னார்...... மகள் விசேஷத்திற்கு பட்டு சேலை எடுக்க வேண்டி போத்திஸ் துணிக்கடை போனால்... அதைச் சுற்றி  எங்கும் கூட்டமான கூட்டம் ..... தீபாவளி பண்டிகை வேறு....நானும் மனைவியும்  பிளாட்பாரம்  மீது ஏறி நடந்து போய் கொண்டு இருந்தப் போது ....எதிரே இரண்டு பக்கமும் இரண்டு குழந்தைகளையும் பிடித்து கொண்டு நடுத்தர வயது பெண் ஒருவர் தன் கைகளில் போத்திஸ் துணி கடையின் ஒரு கட்டை பையை தூக்கியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்.... அவர் நடந்து வந்து கொண்டிருந்தபோதே  அவர் மகன் சட்டென்று  நின்று ... தான் கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை திறந்து அதிலிருந்து சிறிது குடி நீரை அங்கிருந்த கேட்டின் வாயிலில் வைத்திருந்த  அரை கவளம் நீர் நிரம்பியிருந்த ....மண் கவள சட்டியில்  வாட்டர் பாட்டிலில் இருந்து நீரை அதில் ஊற்றி நிரப்பினான் ....அந்த தாய் அவனை இழுத்துப் பிடித்து திட்டி கொண்டே எங்களை கடந்துச் சென்றார் . .... நாய்கள் தண்ணீர் குடிக்கும் அம்மா என்று அந்த சிறிய பையன்  கன்னடத்தில் விவாதம் செய்துக் கொண்டே எங்களைக் கடந்துச் சென்றான்  ...அவனைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக இருந்தது... அந்த தண்ணீர் கவளம்  நாய்கள் நீர் குடிப்பதற்காக தான் வைக்கப் பட்டிருக்கிறது என்று அவனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது? .... மாய ரூபி அவனருகில் வந்து நீர் நிரம்பி வழிந்த கவளத்தை குனிந்துப் பார்த்ததை மாயாவி பார்த்துக் கொண்டே வந்தான்..... நீர் நிரம்பின அளவை மாய ரூபி அளவெடுத்து பார்ப்பதுப் போல தண்ணீரை தொட்டு தொட்டு பார்த்தது.....அந்த பையனுக்கு இந்த வயதிலேயே இப்படியெல்லாம் உதவி செய்யனும்னு தோன்றுகிறதே.... இப்படி இவன் இருந்தால் எதிர்காலத்தில் உங்களை மாதிரி பைத்தியமாகி விடுவான் என்று என்னை மனைவி சாடினாள்.... எப்படி இது போன்ற எண்ணங்கள் அவனுக்கு உதித்தது என்று கேட்டாள்..... அது அவன் பிறவி குணம்.....பிறவியெடுத்து வருவதே அதற்கு தானே .... உயிர்களை பார்க்கத் தானோ என்று திரும்பி அவர்கள் போவதை பார்த்தேன் ...அவன் அதில் நீர் ஊற்றும் போதே ...மண்கவளம் அருகில் நின்றிருந்த மாயரூபி உடல் குலுக்கி தலையை முன்னும் பின்னும் முதுகை  வளைத்து  மகிழ்சியாக சிரித்தது .... கண்டடைந்து விட்டதை அறிந்த சந்தோஷத்திலா ? .... அந்த தாய் அவனைப் பிடித்து இழுக்கும் போது அவன் கைகளில் இருந்து வாட்டர் பாட்டிலிலிருந்த நீர் சிதறி பிளாட்பாரம் மீதும் தெளித்தது..... அந்த கேட்டின் வாயிலில் நின்று உள்ளே பார்த்தால் .... அது ஒரு பாழடைந்த பழைய கோவில் :உள்ளே சிறிய  கதவு தாழ்பாள் போட்டிருந்தது ....சிலை என் கண்களில் தென்படவில்லை .... உள்ளே இருட்டாக இருந்தது..... அதை தாண்டி சிறிது தூரத்தில் போத்திஸ் துணி கடை தெரிந்தது..... உள்ளிருக்கும் கடவுள் இந்த சிறிய பையனிடம்  மட்டுமே தண்ணீர் ஊற்ற சொன்னதா? கோடிக்கணக்கில் மக்கள் அதை கடந்து சென்றிருப்பார்கள்..... யார்க்கும் அப்படி தோன்றவில்லையே ..... சிலர்க்கே அந்த வாய்ப்பு அளிக்கப் படுகிறது...... பிரபஞ்சம் முழுமைக்கும் தேவையானதை அதுவே எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்கிறது.... தோப்பிலிருந்தாலும் அந்த சிறிய பையன் தனி மரம் தானே என்று நினைத்துக் கொண்டே... போத்திஸ் துணி கடை வாயிலை வந்தடைந்தோம்....

Wednesday, November 8, 2023

பரம்பொருள் 3

 பரம்பொருள் 3

தெய்வம் ஏற்றம் பெற்றவர்... அவன் எதிரே  ஆக்ரோஷத்துடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது அவனுக்கும் அவர்க்குமிடைய  இரண்டு அடி இடைவெளியே இருந்தது... அவர் முகம் மற்றும் கைகள் எல்லாம் சிவந்த நிறமாக பரவி  மாறி விட்டிருந்தது. கண்கள் சொறுகி கொண்டே  அவனைப் பார்த்து கனத்த  சத்ததுடன் பேசினார்..... அந்த சத்தம் கர்ஜனைப் போன்றே இருந்தது.....  ஹால் முழுக்க அந்த சத்தம் பரவி எதிரொலித்தது.... என்னைப் பார்க்காதே என்று தன் கைகளைக் கொண்டு முகத்தை மறைக்க முயற்சி செய்தார்.   அவனை விட்டு தள்ளி நிற்க முயற்சித்தார்....இருளுக்குள் பரவி இருக்கும் தெய்வங்கள் எல்லாம் எதற்காக ,எதைச் சொல்வதற்காக  இத்தனை தூரம் வந்தார்கள் என்று அவனால் அங்கே உணர முடியவில்லை..... தெய்வத்தை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.... அருகிலிருக்கும் அறைகளில் இருந்தவர்கள் அலறல் சத்தம்  கேட்டு  ஒடி வந்தார்கள்..... அவனுக்கு மன எழுச்சி ஏற்பட்டு உடம்பெல்லாம் சிலிர்த்து நின்றது... தெய்வத்தை அங்கே  தெய்வமாக கண்டான் .... இரண்டடி இடைவெளியில் ஒளி வெள்ளம் கொண்ட மாயசொரூபி முன் அவன் தன்னை மறந்து அங்கேயே நின்றிருந்தான் . பருப் பொருள்களின் இடையிடைய போய் மனம்  சொருகி கொண்டது.... உடம்பில் ஊர்ந்து ஊர்ந்து அவன் தலையின் இடப்பக்கமாக செல்லும் அந்த ஓட்டத்தின் உணர்வுகள் ஊர்ந்து செல்வதை கவனித்தான்.....மனித உடம்பை எதற்காக எடுத்து கொண்டு  பேசுகின்றன என்று யோசித்தான்....  எல்லா மனித உடம்பையும் எடுப்பதில்லையே .... அது ஏன்? ..... ஆட்கள் வந்தவுடனேயே நின்றிருந்த  தெய்வம் ....அவர் உடம்பிலிருந்து வெளியேறிப் போய் விட்டதை கவனித்தான்  .... சொறுகி நின்ற கண்கள் சரியாக  நேராக அவனைப் பார்த்தன......வந்துப் போன தெய்வத்தின் அடையாளமே அவர்க்கு  இல்லை என்பதை தெரிந்து கொண்டான் ....பலர்  எதற்கு இவர் இப்படி கத்தினார்? என்று கேட்டார்கள்..... தெரியவில்லை என்று சொன்னான்...  இவர் காலையிலிருந்து எங்கும் உட்காரவேயில்லை. உடம்பு சுகமில்லையா என்று அவரையே கேட்டார்கள்.....இவர் இங்குமங்கும் நடந்துக் கொண்டேயிருந்தார் என்று கூட்டத்திலிருந்த ஒருவர் அவனிடம் சொன்னார்...அவர் உள்ளே சென்று சபை முழுக்க ஆட்கள் நிரம்பியிருந்தவர் மத்தியில்  அமர்ந்துக் கொண்டார். பின்னர் மேடையில் ஏறி சிலருடன் அமர்ந்தவர் அங்கிருந்து அவனை பார்த்தவுடன்  அவர்க்கு முன்பிருந்ததைப் போன்று முகம் மெல்லாம்  சிவந்தது....போகும் போது  ஒருவரிடம் நின்று எதோ பேசினார்.....அவனைக் கடந்து நடந்து செல்லும்போது சொல்லிவிட்டேன் என்று சொன்னார்.....மாலை அவன் பைக்கில் ...அந்த புகழ்பெற்ற ஆலயத்தைக் கடந்துச் செல்லும் போது .... சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள அந்த கோவிலின் மேலிருந்து ஒளி கீழே இறங்கிப் பரவி  மெயின் ரோடு வரை பரவி கரைந்து கொண்டு இருந்ததை கவனித்தான் .... எதற்காக அவனை தேடி அலுவலகம் வரை வர வேண்டும்..... எதைச் சொல்ல அந்த தெய்வம் தேடி வந்ததேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே கோவிலை கடந்து சென்றான்..... 🌿