Monday, August 29, 2016

பிரகஞ்சை

தீ பிடிக்கும் மரத்தில் பறவைகள் கூடு கட்டுவதில்லை

புதிய கருத்ததுக்களை கேட்கும் போது மன எழுச்சிக் கொள்ளாமல் இருப்பதாலயே மனம் விரிவடைந்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதன் உள்ளுணர்வுகள் நம்மை பிரபஞ்சத்தின் நடு மையத்தில் வைத்து விட்டு சென்றுவிடுவதலைய குறிக்கின்றது. அக்காலத்தில் பறந்து சென்று பார்ப்பதற்கும் மிக அருகில் கொண்டு வந்து பார்க்க ஏதுவாகயிருக்கும்.
ஐந்து மாதங்களுக்கு முன் அழைப்பு ஒன்று வந்தது. உலகம் போற்றும் மகா யோகியின் ஜுவ சமாதியை புதுப்பிக்கும் பணியில் நான் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு வந்தது. முதலில் வந்து பார்த்துச் செல்லுமாறு யோகிகள் சொன்னார்கள். அன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு பசிக்கவேயில்லை. துாக்கமும் இல்லை. மகிழ்ச்சியும் பயமும் மாறி மாறி பெயர்ந்து வந்த வண்ணமிருந்தன. இந்த கழிசடையை போய் தேர்வு செய்வானேன் என்று இருபத்தினான்கு மணி நேரமும் யோசித்தவண்ணமே இருந்தேன். மயக்கத்தில் ஆழ்ந்த மனிதனைப் போல நான் பிரகஞ்சையின்றி உலவி வர ஆரம்பித்திருந்தேன்.
கட்டுமான இஞசினியரை அழைத்துக் கொண்டு சென்று அளவெடுத்துக் கொண்டு வந்து பின்னர் பெங்களுரில் மார்பிள் பார்தது பின்னர் அதை உடைத்தெடுத்து புது கற்கள் பதித்து முடிப்பதற்குள் எத்தனையோ பிரச்சனைகள். நாற்பது ஆண்டுகள் பழைமையான சமாதியை புதுப்பித்தல் என்பது சாதாரண விஷயமல்ல என்பதை ஆரம்பித்த பிறகே எனக்கு புரிய ஆரம்பித்தது. நான் பணக்காரன் அல்ல அதனால் அதை செய்வது கடினம் என்பதால் பின் வாங்கினேன். பின்னர் பலரும் பல கருத்துக்கள் சொல்வது சொல்லி வருவதென்பதை கேட்டு மிரண்டுப் போனேன். நண்பர்கள் சிலர் உதவி செய்தார்கள். சிலரிடம கடன் பெற்று அதை ஒருவாறு செய்து முடித்தோம்.
நடுவில் எனக்கு தலைக்கனம் வந்து வி்ட்டதை அறிய ஒரு சின்ன நிகழ்ச்சி நடந்தது. முடியும் தருவாயில் கீறல் விழுந்ததையறிந்து அதை மாற்றி தர பெங்களுர் வந்தேன். ஆணவம் அன்றே விழுந்தது. கடன் வாங்கி என் கைகளால் அந்த கல்லை பெற்று அதன் அருகே சென்று அதை அணைத்து கொண்டேன். என் குருநாதரை வேண்டி நின்றேன். இத்தனை வருட தவம் அந்த கல்லின் முன் விழுந்து வணங்கியது.
முடிந்தப் பின் இங்கு வந்தப்பிறகு கறைகள் வந்தைமையை வருத்தமடைய வைத்தது. முழு சமாதியையும் மாற்றி கொடுக்கிறேன் என்று மானசீகமாக வேண்டி வந்தேன். அந்த மயக்கம் இன்னும் எனக்கு கலையவில்லை. குருநாதரை ஒட்டியே செயல்கள் நடந்து வருவதை உணர்ந்த வண்ணமே இருக்கிறேன். இப்பிறவி எடுத்த பெரும்பயனை அடைந்தேன்.
            அறிவில்லாமல் அலைந்துக் கொண்டிருக்கிறேன். ஞானத்தைப் பற்றி பேச ஒன்றுமேயில்லை என்னிடம். மாதங்கள் போனதால் பதிவுகள் பதிய இயலவில்லை. உலகில் உள்ள என் மனத்தினுள் குருவின் அருள் தங்கும் இடம் இருக்குமா என்ன.
தத்துவமும் மெய்யாஞனமும் தர்க்கரதீயாக வாதாட இயலாமல் போயிற்று. கூட்டுக்குள் ஒளிந்து கொண்டு விடுகிறேன். வெளியில் மேய்வது திரும்ப கூட்டிற்கு வருவது என்று சுற்றளவில் செல்ல ஆரம்பித்திருக்கிறேன்.
அமைதியாக இருப்பதே மேல் என்ற எண்ணம் வந்தப்பிறகு பதிவுகள் பதித்து எனக்கு எல்லாம் தெரியும் என்றுக் காட்டுவதற்காக போடவேண்டிய அவசியமில்லை என்று விட்டுவிட்டேன். என்னைச் சுற்றி நடந்து வரும் அந்த காலசக்கரத்தை கைப்பற்ற பல வழிகளில் முயற்சி செய்து தான் பார்க்கிறேன். ஒரு பார்வையில் தெரிகிறது மறு பார்வையில் மறைந்து கொள்கிறது. பிரபஞ்சம் எழுந்து வரும் பொழுது அதை ஒரு பாதைக்குள் அணைக்க முற்படுவது துாக்கத்தை வரவழைக்கிறது தொடர்ச்சியாக
அறியாப்படாததை அறியப்பட்ட என் கைக்குள் கொண்டு வர மெனக்கெட வேண்டியிருக்கிறது.
எனக்கு பிரகஞ்சை இருந்தால் தானே பிரகஞ்சமலாவிய பெருநிலையை உணரவும் அறியப்படவும்.