எங்கா
எட்டாம் வகுப்பு படிக்கும் வருடத்தில் மூன்று திபெத்தியர்கள் எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார்கள்... மூன்று நாட்களில் மனக் குவிப்பது, தவம் செய்வது, தூக்கம் என்பதை ஒவ்வொரு மாணவர்க்கும் கற்று கொடுத்தார்கள்... முதல் நாள் வீட்டிலிருந்து ஒரு கர்சீப்பும், ஒரு பூ ஒரு பென்சில் கொண்டு வருமாறு சொல்லியிருந்தார்கள் ... சிறவர்கள் எல்லாம் வரிசையில் நின்றிருந்தோம்... என் முறை வந்தது.... ரோஸ் பூவும், பழைய கர்சீப் ஒன்றும் கொடுத்தேன்.... பென்சிலை வாங்கி அந்த கர்ச்சீப்பில் என் பெயரைக் கேட்டு எதையோ எழுதினார்கள்... என் கைகளை எடுத்து தன் கையில் வைத்து கொண்டார் ஒருவர் ... மற்றொருவர் அருகே வந்து என் காதில் காற்று மாதிரி எதையோ ஊதி.... எங்கா என்ற வார்த்தையை ..இரண்டு மூன்று முறை சொன்னார்கள்.... ஒரு பெண்ணும் அவர்களுடன் அமர்ந்து அதைப் போன்றே எல்லார்க்கும் சொல்லி கொடுத்தார்.... இது மந்திரம்... இதை யாரிடமும் நீங்கள் சொல்ல கூடாது என்று கண்டிப்புடன் சொன்னார்கள்... தனி தனியாக சொல்லி கொடுத்து அமர சொன்னார்கள்.... சில நிமிடங்கள் கண்ணை மூடிக்கொண்டு மந்திரத்தை உச்சரிக்குமாறு சொன்னார்கள்.... ஐந்தாவது முறை சொல்லும் போதே கண்கள் மேலேறி சொறுகிக் கொண்டது.... செம தூக்கம்னு என்று நினைக்கிறேன் ... மத்தியானம் சாப்பிட்ட சாம்பார் சோறாக இருக்கும் போல...
எழுப்பி விட்டார்கள்... உட்கார்ந்துக் கொண்டே எப்படி தூங்கியிருக்கிறேன்... வீட்டிற்கு சென்று அம்மாவை கடிந்து கொண்டேன்... சோத்தை சாப்பிட்டு பள்ளியில் ஒரே கிறக்கமாகி விட்டது.. .இரண்டாம் நாள் மதியம் வகுப்பிற்கு அவர்கள் மூவரும் வந்திருந்தார்கள்.... கண்ணை மூடி மனசுக்குள் எங்கா என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறு எல்லோரையும் சொன்னார்கள்... முன்தினம் போன்றே ஐந்தாவது நிமிஷத்தில் கண்ணை சொக்கி தூக்கம் பற்றிக் கொண்டது.... ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் பார்த்து கொண்டோம்... சிரித்துக் கொண்டோம்.... தூக்கம் வந்தால் தூங்குமாறு சொன்னார்கள்... எனக்கு சொல்லாமலேயே கண்ணை சுழற்றி தூக்கம் பற்றி கொண்டது.... எல்லோரையும் விழிக்குமாறு சொன்னார்கள்... யார் யார்க்கு என்ன கனவு வந்தது என்று கேட்டார்கள்.... எனக்கு நடந்து செல்கிற பெண்கள் கனவில் வந்ததால் சொல்லிக்கிற மாதிரி இல்லை.... சொல்லாமல் மறைத்து விட்டேன்... மூன்றாம் நாள் மதியம் எங்கள் வகுப்பிற்கு வந்தார்கள்.....கண்ணை மூடிக்கொண்டு தவம் செய்ய சொன்னார்கள்... ஒருவர் அருகில் வந்து நெற்றி பொட்டில் எதையோ செய்தார்... திடீரென்று நெற்றி பொட்டில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.... கனலாக எரிந்தது போல தெரிந்தது... உடம்பெல்லாம் பரவி விரிந்து .... ஜன்னல் வழியே நான் வெளியே சென்று .... அழகான மாணவிகள் செல்வது எல்லாம் தெரிந்தது.... கண்ணை திறந்து பார்த்தேன்... மூவரும் எல்லா மாணவர் நெற்றியிலும் விரல் வைத்துக் கொண்டே சென்றார்கள்..
திரும்ப கண்கள் தானாக மூடிக் கொண்டன... மீண்டும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால் யாருமில்லை... எழுப்பினார்கள் ... யார் யார்க்கு என்ன கனவு வந்தது என்று கேட்டார்கள்... ஏதேதோ மாணவர்கள் சொன்னார்கள்... அவர்கள் சொல்வதை மூன்று திபெத்தியர்களும் கவனமாக கேட்டு கொண்டனர்...என்னிடம் ...இன்று நீ தூங்கவில்லை ... எங்கு சென்றிருந்தாய் என்று கேட்டார்கள்... முதல் மாடியிலிருந்து எப்படி கீழே வந்து ரோட்டில் செல்லும் ஆட்களை பார்க்க முடியும் என்று அப்போது தான் யோசனை வந்தது ... வெளியில் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டாம் ... தனியாக இருக்கும் போது மட்டும் செய்யவும்... வெளியில் சென்றால் திரும்பி விட வேண்டும் என்றார்கள்... எனக்கு பக்கென்றது... அவர்கள் போன பிறகு பக்கத்து நண்பன் என்னிடம் .. என்ன மந்திரம் சொன்னார்கள் என்று கேட்டான்... சொல்ல மாட்டேன் என்றேன்... அவன் தன் மந்திரம்... "எங்கா" என்றான்... எனக்கும் அதே தாண்டா என்றேன்... பின்னர் வகுப்பு முழுவதும் ஒருவரை ஒருவர் கேட்க்கும் போது எல்லார்க்கும் எங்கா என்றே சொல்லி சென்றிருக்கிறார்கள். பின்னர் சில மாதங்கள் எப்போதாவது எங்கா எங்கா என்று சொல்லி பார்ப்பேன்... தூக்கமான தூக்கம் வரும்...
அவர்கள் தங்கள் சக்தியை அதிகரித்து அந்த வார்த்தையை உபயோகிக்கும் போது இழையில் இணைந்து விடுகிறோம்... அது ஒரு வார்த்தை ... உள்ளிருந்து உள்ளுக்கு செல்வதால் கண்களுக்கு பின்னாடி உள்ள உயிரானது வெளியில் கிளம்பி ஜன்னல்வழியே சென்று ரோட்டில் சென்று கொண்டிருப்பவர் எதிர்பட்டிருக்கலாம்... அந்த பெண்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள்... நான் நினைவில் சென்று அங்கு நிற்கிறேன்... அவர்கள் கனவில் வந்தவர்களா ... அல்லது நான் விழித்து இருக்கிறேனா என்று பல காலம் கழித்து யோசித்தேன்... ஆழ்ந்த தூக்கத்தில் இது நடப்பதுண்டு .... நான் குறட்டை விடுவது பாசமயங்களில் எனக்கு கேட்கும்... பேசிக் கொண்டிருப்பவரிடமோ பார்த்து கொண்டு இருப்பவரிடமிருந்து விலகாது.... மனம் அங்கு நிற்கிறது.... நான் இருப்பதாக நினைத்து கொண்டிருந்தேன் ....மனம் வேறாக பார்த்துக் கொண்டு இருக்கிறது...
கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ நாம் சென்று திரும்பும் காலம் என்ற ஒன்று இல்லை. நினைவு ஆற்றல் அதன் முழுமை அல்லது ஒரு பகுதியாக கூட அங்கிருப்பதில்லை. நாம் இப்போது கடந்த காலத்தைப் பற்றி நினைத்து கொண்டிருக்க முடியும். எப்போதாவது மட்டுமே நாம் கடந்து வந்த இடத்திற்கு சென்றிருக்கிறோமா என்பது தெரியவில்லை... நாம் அறியாமலேயே அந்த விளக்கு திபெத்தியர்களால் ஏற்றப்பட்டு தொடர்ந்து என் வாழ்க்கையில் வந்து கொண்டிருப்பதை நான் அறியாமலேயே இருந்தேன்... காலம் நம்மை கடந்து செல்வதிலிருக்கும் போது எதிர்காலத்திற்கு காலத்தின் கோடொன்று தொடர்பாக ஊடே நகர்கிறது. இப்போது அது எவ்வளவு காலம் நம்மோடு தொடர்ந்து நீடிக்கும். யங்கா என்ற வார்த்தை எதை கொண்டு வந்தது.... இப்போது இந்த இரண்டு இடங்களுக்கு இடையில் நாம் இருப்பதே இல்லை. மனதின் வரம்பு நிர்ணயிக்க படாததால் அதன் மூலம் நாம் பார்த்த காட்சி, அனுபவித்த காட்சி ஒரே நேரத்தில் காண கிடைப்பதில்லை... அது எக்காலமாக நாம் அக்கணத்தில் இருந்தோம் என்பதை கொண்டு காட்சி படுத்துகிறோம் .... மனம் எப்போதும் பிரதிபலித்து கொண்டே செல்கிறது.... எல்லாம் உடம்பினுள் இருந்தே வருகிறது... டப்பியில் அடைத்து வைத்து வருடங்கள் கழித்து திறக்கும் போது அதே உணர்வெழிச்சியுடன் அந்த காட்சி கிடைக்கிறது.... இது காலத்தின் பல பரிமாணம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம் ...
சீனர்களின் அக்கு பிரஷர் கலையை கற்க நேர்ந்தது.... அந்த வார்த்தை இரண்டு காலங்களுக்கு நடுவே கொண்டு செல்லும் என்பதை பல காலம் தேடலில் இருக்கிறது.... நாம் எங்கும் தோன்றுவதில்லை .. பிரதிபலிப்பதில்லை, நடுவில் நின்று காலத்தை பார்த்து கடந்து கொண்டே இருக்கிறோம்... தவமியற்றும் போது திபத்தியர்கள் மனத்திற்குள் தோன்றாமலிருந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது... அவர்களும் வந்து விட்டால் நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கிய காலம் இன்னும் பிடிக்கும்....