Monday, August 31, 2020

இருப்பு

 இருப்பு 


உலகில் எதுவும் நிலையானதோ , சாரமானதோ இல்லை ..... எண்ணங்கள் மாறி கொண்டேயிருப்பவை.... வயதேற ஏற  அவைகள் வேறு மற்ற தோற்றுத்திற்கு மாறி கொள்கின்றன..... வேலை நிமித்தமாக ஒரு மாத காலம்  கேம்பில் தங்கி இருக்க நேரிட்டது .... இடது  கண்ணில் இமையில் கொழவியோ,.. அல்லது  தேனி யோ எதோ ஒரு  பூச்சியொன்று கடித்து விட்டது... கண் இமைகள் மூடி கொண்டன.... அரை கண்ணில் பார்க்கும்படி ஆகிவிட்டது.... பிறந்த நாளன்று கூட ஒன்றரை கண்ணில் தான் கேக் வெட்டினேன்...... போட்டோவை பார்த்தேன்.... அதனால் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன்.... கண் சிகிச்சை க்கு போகலாம் என்றால் ...கொரனா பயத்தினால்  மருத்துவமனைக்கு கூட போக முடியாத நிலை.... ஒரு வார காலம் ஒன்றரை கண்ணில் தான்  சுற்றி திரியும் படி ஆகிவிட்டது..... உடல் குறைபாடு என்பது பெரும் கஷ்டம்.... அதனினும் வலி வந்தால்.. அதை  தாக்குபிடிப்பது பெரிய விசயம்....... பல வருடம் முன்பு..... ஒரு முறை.... கொஞ்ச நாட்கள் என்னால் பேச முடியாதபடி செய்யுங்கள்.... அல்லது காது கேட்காதபடியாவது  செய்யுங்களேன் என்று கேட்டேன்.... காரணம்..... சண்டை வந்தால்..காது கேட்டால் தானே கோபம் வரும்..... வாய் பேச முடியாதபடி போய் விட்டால்.... எல்லார்க்கும் நல்லதாயிற்றே.... அதற்கு அவர் பதில்  சொன்னது.... உடம்பில் குறைபாடில்லாமல் இருப்பதே ஆசீர்வாதம் இல்லையா ?...... அதை பேணி காப்பதே நம் கடமை.... அத விட்டு என்ன முட்டாள்தனமான பேச்சு இது..........இல்லையென்றால் .தவம் எப்படி  எளிதில் கை கூடும் ..... கண்கள் காயம் பட்டவுடன் சாதாரணமாக பார்க்க கூட முடியவில்லையே ... எதுவும் சாரமானதில்லை எனக்கு.... நிலையற்றிருக்கும் போது  சாரமானது எப்படி கைகூடும்.... ஒட்டாமல் இருப்பது என்பது .... போக பழக,  வந்துவிடும் என்று வருடம் பல போனது தான் மீதம்..... மனம் ஒத்து இணக்கமாக சென்றால் ...அது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது..... மனபிறழ்மை வருவதற்கு வாய்ப்புண்டு..... இணங்காமல் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும்.... வாழ்வதனில் பொருத்தி போகாமல் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்த பிறகு, பல வருடம் பழகிய மனத்தை கழுவி வைக்க நேரமில்லாத தோற்றத்தை காண்பித்து நம்மை ஏமாற்றி வேறு பக்கம் திருப்பி வைக்கும் ..... இருப்பு மட்டுமே  அப்படியே இருக்கும்.... மாறாதது ..இனங்காத மனம் இருப்புக்கு நெருக்கமாகி தன்னையே இயல்புருக்கு என்று கருதுகிற அளவிற்கு வந்து விடும் என்று வருடங்கள் ஆன பின் புரிகிறது.... அல்லது சாத்தியமாக்கிறது.... இரண்டும் ஒன்றே ..வெறும் மாயம் தான்...... சூரியன், நிலவைப் போல் மறைந்து மறைந்து.அதுப்பாட்டிற்கு  வந்து போய் கொண்டே தான் இருக்கும்.... வராமல் இருக்காது...... இங்கே இந்த கணத்தில் ... வணங்கி நில் என்கிறது இயற்கை .... எப்படி வரப் போகின்ற  கனவை தீர்மானிக்க முடியாதோ அது போன்று தன் இருப்பை .உணர சாத்திய கூறே யில்லை ..... இப்படியும் எடுத்து கொள்ளலாம்....... கனவில் உலாவி வர கூடிய இடம் எது என்பதை இருப்பு  மட்டுமே  தீர்மானிக்கும்...... அந்த இடம்,  அங்கே சென்ற இருப்பு மட்டுமே  யோசிக்க, வெறும்  மனமே இல்லாமல் வெற்று மனத்துடனே இருக்கிறது....... மனம் வெளியேறியவுடன்  அது  கட்டுப்படுத்தபடுகிறது ..... இருப்புக்குள் வந்தவுடன் தீர்மானிக்க அங்கே  மனமே இல்லை..... சிலர் குரலை கூர்ந்து கவனித்து  வரும் போது ...இன்னும் நெருக்கி  அதை காதில் கேட்கும் போது ... இருப்பை விட்டு கட்டாயமாக  வெளியேற்றி விடுகிறது.... ஒட்டுறவு ஏற்பட கூடாது என்பதில் விழிப்பாக இருக்கிறது இருப்பு.....

கட்டுபடுத்த நினைக்கிறவன் கட்டுபடுத்த படுகிறான் என்பது போல் இருப்பில் இருக்கும் போது அமைதியாக கண்டு கொள்ள மட்டும்  வேண்டுமே ஒழிய .... நெருங்கி தொட்டு பார்த்தால் என்பதை.. அது  எட்டி தள்ளி விடுகிறது...... மரணித்த தந்தையார் குரலை கேட்கும் போது கூட  விழிக்காமல் இருப்புக்குள் இருக்க வேண்டும்.... தொடர்ந்து வரும் சம்பாஷணைகளை கேட்க பார்க்க இருப்பதோடு சரி...... மீறி எத்தனித்தால்.. ஒட்டுறவை துண்டித்து விடும்..... மெதுவாக இயல்புக்கு வந்து உருவகத்தை உருவாக்கியவன் பார்க்க ஆரம்பிப்பான்..... கனவை நாம் தீர்மானிக்க முடியாது....


மதியம் அடிக்கிற வெயிலில் நுழைந்து  இளமை கால வெயிலில் நிற்பது போன்று காலம் உருவகப்படுத்தி நிற்கிறது...... அது மறைந்து நிகழ்கால வெயில் காலத்திற்கு அது வந்து விட்டால் தான்  ...திரும்பவும் பைக்கை ஓட்டி செல்லலாம்..... அங்கே காலம் மாறாமல் நின்றிருந்தால் ஒழிய ..... மீண்டும் பைக்கை நிகழ்காலத்திற்கு ஓட்டி வர  முடியாது....மூளையால் செய்ய முடியாத கால மாற்றம் இது..... மனமது இருப்புக்குள் இருந்து கொண்டால் காலம் மாறி மாறி உருவெடுக்கும்