Tuesday, February 24, 2026

மகாலிங்க மலை தென்காசி

 

20 வருசம் முன் இந்த மலைக்குப் போயிருக்கிறேன்.... தென்காசிக்கு கிழக்கில் இருக்கிறது... அப்ப படிகள் பாதையெல்லாம் கிடையாது.... முட்களும் புதர்களும் பாறைகள் இடையில் அடர்ந்து கிடந்தது... மலை உச்சியில் மிக வயதான, நடக்க முடியாத கிழவர் ஒருவர் பாறையின் மீது அமர்ந்திருந்தார்...  எப்படி மேலே ஏறி வந்தீர்கள் என்று கேட்டதற்கு... பதில் சொல்லவில்லை.... கையில் கம்பு ஒன்று வைத்திருந்தார்... என் கையில் இருந்த நீர் பாட்டிலையும் ... சிறிது பணமும் கொடுத்தேன்.... அதற்குப் பிறகு இப்ப தான் இந்த மகாலிங்க மலை வீடியோ பார்த்த பிறகு ... மக்கள் எதற்காக அங்கே போகிறார்கள் என்று தெரியவில்லை.... இறை வழிபாடு என்பது வேற சித்தர் வழிபாடு வேற என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்... சித்தர்களை வழிப் பாட்டு முறையால் அடைய இயலாது... அந்த பாறை மேல் சக்கரை பொங்கல் இருக்கு... எடுத்து சாப்பிடு என்றார் அந்த கிழவர்... சிறிய வாழை இலையில் பொங்கல் ஆவி பறக்க அங்க வைக்கப்பட்டு இருந்தது.... இதுப் போன்ற சித்துக்கள் செய்பவர்களை வாழ்க்கை முழுக்க பார்த்து வருகிறேன்.... தென்காசி பெரிய கோவிலைச் சுற்றி நிறைய சித்தர்கள் சமாதி அடைந்துள்ளனர்...  பழைய பேருந்து நிலையத்தில் பக்கத்தில் கூட ஒருவர் சமாதி உள்ளது.... இந்த முறை அவரை கடக்கும் போது என்ன இப்படி கண்டமேனிக்கு சமாதி அடைந்திருக்கிறீர்களே என்று நினைத்துக் கொண்டேன்.... வாசி யோகம் செய்து வரும் காலத்தில்...இது போன்ற சித்துக்களை குருநாதர்... அவரை பார்க்க வரும் மக்களை பயமுறுத்த இப்படி சித்துக்கள் செய்வதை கண்டிருக்கிறேன்.... பள்ளியில் படித்துக் கொண்டிருந்த  மகனை  அழைத்து சென்ற போது அவனுக்கு எந்த சாக்லெட் பிடிக்கும் என்று மஞ்சள் பை ஒன்றில் கையை விட்டு  எடுத்துக் கொடுத்தார்.... இவையெல்லாம் அடர்த்தியான அணுக்கள் கூட்டை சிதைத்து அதை நீர் நிலைக்கு திருப்பி உருமாற்றி கொடுப்பது... என் மனைவி இதெப்படி சாத்தியம் என்று என்னிடம் கேட்டார்.... இயற்கையை கை கொள்ள வேண்டும்.. அதற்கு இருபது வருடமாவது ஆகும்... இந்த மனித உடம்பு உணவுகளால் நிரம்பி உள்ளபடியால் அதை கொஞ்சம் கொஞ்சமாக காற்றால் நிரப்பி வரும் போது ஒரு காலத்தில் அது இயக்கமற்ற நிலைக்கு சென்று அமர்ந்து விடும்...  அன்று மலைக்கு  மூன்று பேர் நாங்கள் சென்றிருந்தோம்... அதில் இருவர் பாதை மாறி சென்று விட்டார்கள்... ஒருவர் கேரளாவை சேர்ந்த புகழ் பெற்ற மாந்திரீகர்.... மற்றவர் வேறு பக்கம் சென்று விட்டார்... காலமும் நேரமும் அழைத்தாலொழிய நம் இஷ்டபடி நமக்கு எதுவும் வாய்க்காது ... அது இறை கைகளில் கூட இல்லை...இப்படியே மூட பழக்கங்களை பழகிக் கொண்டே போனால் மனத்திற்குள் எப்படி ஒடுங்குவது .... ஓர்மைக்கு ஒருவனாக தான் பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும் .... மனதிற்குள் ஒடுங்கியிருக்க பழகி விட்டால் உடைகளே பாரமாய் ஆகி விடாதா.... மனத்தை பயமுறுத்தி கலைத்து கொண்டே இருந்தால் தேடுபவன் தன்னுள் ஒளியை காண்பதை தவிர்த்து புறத்தில் சுமையை தூக்கி அலைபவனாகிறான்.... பிராப்தம் இருப்பவனே கடந்து சென்று தன்னுள் வீற்றிருக்கிறான்.  அதற்குப் பிறகு யாரையும் பொருட்டாக நினைப்பதேயில்லை.... தேவைப்படுவதேயில்லை.

No comments: