முதலில் தூங்கும் முறையும், கேசரி முறையில் உறங்குதலும் உள்ளது.....வாசி யோகம் பற்றிய குறிப்பு பிறகு தான் வருகிறது.....
பலர் பலவிதமாக செய்து கொண்டு தான் இருந்திருக்கிறார்கள்..... சில நாட்கள் மனப் போதையுடனே அங்கங்கே சுற்றி கொண்டேயிருக்கும்....... திடீரென்று வெற்றமைப்புடன் பேசா திருக்கும்..... அதன் பிறகே ஒருங்கிணைக்கப்படும்..... இந்த ஒருங்கிணைப்புக்கு தான் காலம் கூடுதல் நேரத்தை எடுத்து கொள்கிறது...
நான் செய்வது எனக்கே தெரியாது என்றிருப்பது ..... எதோ., அது பாட்டுக்கு நடக்கிறது என்று விட்டு ,அதன் வேலையை பார்க்க போய் விட வேண்டும் .... தாடி மயிர் வளர வளர சக்தி வட்டம் ஏகத்துக்கு குவிந்து பாயும்..... மனம் நாடாமல் பிறழாமல் கண்மூடி பழக்கமடையும் காலம் இவைகள்...
நீண்ட நாட்கள் கழித்து. தவம் செய்ய செய்ய .... சட்டென்று கிறக்கம் ஏற்படுவதும் , பின் அதை உள் வாங்க உடம்பும் மனசும் சிரமம் கூடலாம்....அது தப்பாக போயிடும் சமயங்களில் மட்டும்.... ரங்க ராட்டினத்தில் , தட்டாமலை சுற்றி விட்ட மாதிரி கிறக்கமாக கூட ஆகக் கூடும் ...
மனம் யோசிக்காமல் சில நாட்கள் அமைதியாக இருக்கும்..... அந்நாட்களில் நீங்கள் கண் மூடி காண்பதும்... தூக்கத்தில் விழித்து கொண்டு மன திரையில் ஒடுவதை பார்த்து கொண்டிருப்பதும் உண்மை என்று உணரா வண்ணம் நெருக்கி கொண்டே வரும் ... இள வயது நண்பர்கள் நெருக்கத்தில் சென்று பார்க்கும் பார்வை அது.... அவர் அருகில் நெருக்கி தெரிந்தது கொண்டு விடலாம்..... தாலி சரடு கூட தெரிய வரும்........ இங்கே கூர்ந்து கவனித்தல் இது.... மண்டைக்குள் புகையை ஊதி விட்டு ... பின் அந்த புகை கலைந்த பின் தெரியும் காட்சி போல இது அமைந்து விடுகிறது....
இதற்கும் ஒரு எல்லை உள்ளது..... மாட்டை கயிற்றால் கட்டி விட்டு ..எட்டி ஒரு தூணில் கட்டி போடுகிற மாதிரி.... கயிறுக்கும் கழுத்துக்கும் உள்ள தூரம் தான் மாடு மேய முடியும்.... இங்கு மூளையில் மனபாடம் செய்து வைக்கப்பட்ட பாடங்கள் உடன் சமன் செய்யும் மூளை..... அதற்கு அப்பால் மூளை தேடினால் ..மனது அங்கு வந்து நின்று கொள்ளும்.. பேசும்.... இதை தான் தேவதைகள் பேசும் என்று சொல்கிறார்கள்...
இது ஒரு வகையான குவிதல் பயிற்சி... மன உள பயிற்சி எல்லார்க்கும் வாய்ப்பதில்லை .... அது மனமற்று இருக்கும் போது ஏற்படுவது.... அல்லது உச்சத்தில் இருக்கும் போது ஏற்படுவது ..... அதற்கும் மன பயிற்சி செய்ய அங்கே தேவையிருப்பதில்லை ... ஆனால் இங்கே நாம் இருப்பதில்லை ... இது இரண்டிற்கும் உள்ள வேறுபாடு...
என்னுடன் இரண்டாம் வகுப்பு படித்த என் நண்பர்கள் , அவர்கள் தகப்பனார் பெயர் கூட ஞாபகம் இருக்கிறது.... அதற்கு காரணம் சிறு வயது முதல் அவதானிப்பது.... மனதில் இட்டு கொள்வது.....
இள வயது பெண் நண்பரின் வியர்வை மணத்தை கூட ஞாபகத்தில் அவதானிப்பது.... நிகழ்காலத்தில் அதை ஒத்த மணம் வரும் போது அங்கே மனம் தேடுகிறது..... மன அடுக்குகளில் அதை வைப்பதால் ..... தேடி தேடி அதற்கொத்த சம்பந்தமுள்ள நபர் எங்கே என்று தேடி சென்றடைகிறது.... நாய்கள் வாசம் பிடிப்பது போல பிரபஞ்சத்தில் பரந்து விரிந்து களம் அமைத்து கொள்கிறது.... மன குவிப்போ அல்லது எல்லைகளின் ஊடே படரும் காலத்தில் அந்த சம்பந்தப்பட்ட நபர் காட்சிகளாவோ அல்லது நிகழ்கால நிதர்சன சமயத்தில் இருக்கும் இடத்தில் இருக்கும் நபரோடு காட்சி கிடைக்கிறது....இங்கிருவருக்கும் நேர்கோட்டில் ஒரே காலத்தில் நிற்கிறார்கள்.... ஆனால் ஒருவர் மட்டும் தான் மற்றவரை காண்கிறார்.... மாயாவி போல் அங்கு நிற்கிறார் ....
தவமியற்ற, இயற்ற மனம் அதன் அடுக்குகளில் அங்கே இங்கே ஓடி தேடும்.... புகை போல மூடி மூடி கலையும் போது ...புலன்கள் தனித்தே இயங்குகின்றன..... என்று அறிய வரும் போது .. அதை விட்டு விலகி வந்து விடுகிறார்... சிரமம் போன்று இருக்கும் காலங்கள்
மூளைக்கு பயிற்சி தேவை ... மனத்துக்கு மட்டும் ..நாம் தான் பயிற்சியை நடையை மாற்றி .அதன் வழிச்சலோடு செல்ல பாதையமைத்து காண்பிப்பது போல இருப்பு அது ....
மனத்தை நாம் கட்டுபடுத்த முடியாது .... நாம் அதன் அடிமையாய் மாறிப் போனது போல் நடிக்க ஆரம்பித்த பின் .... அந்த மனம் பேச முயற்ச்சிக்கும்... வழி நடத்தும்.... ஒரு நேரம் கடவுளாக பேசும், தேவதையாக நிற்கும், எந்த உருவம் வேண்டுமானாலும் அது உருவெடுத்து கொண்டு திசைகள் தோறும் மாறி மாறி காட்சிப்படுத்தும் ...... பூலோகத்தில் ஒரே நேர் கோட்டில் பிறந்த மனிதர்கள் வெவ்வேறு கடவுளை உருவெடுத்து காண்பது ... மற்றும் அங்கே நிற்பதும் கூட இந்த உணர்வில் இருக்கக் கூடும்...உணர்வற்ற உணர்வு.....
என் தனிப்பட்ட கருத்து இது...
..மனம் தான் எல்லாம்...... அல்ல... அது ஒரு வேலி.... நம்மை பூட்டியிருக்கும் அரண்... அதனை உடைத்தெறிந்து.... அங்கிருந்து மூளையால் தொடர்பு கொள்ள இயலாத இடமொன்று உண்டென்றால் அது மனமல்ல ... மனம் அண்ட சராசரங்களில் வியாபித்திருக்க கூடியது.... அது மூளையை கிரகிக்க கூடியது..... உடம்பு தன்னிச்சையாக இயங்குகிறது என்று நான் நம்புகிறேன்..... குடித்து விட்டால் கூட மூளையால் வேலையொன்றும் செய்ய முடியாது.... அப்போதும் மனம் இயங்குகிறது.... அதை தொட கூட முடியாத கால அலைவரிசையில் இயங்கலாம்.... அந்த வெறும் போதை பெரும் இறையை அடையாது...... அடைய இயலாது என்று நம்புகிறேன்...செயலற்று இருப்பதை அந்த தளம் என்று நம்புகிறவர்கள்... இயக்கமற்றிருப்பதை காண்கிறேன்.... ஆனால் உண்மையொன்றும் அதுவல்ல.
கலையயறிந்தவனுடைய கலையை தொட கூட முடியாது ... கிரகிக்க இயலாது..
அங்கே அவன் மிக தீவிரமாக ஆழ்ந்த மனத்தோடு தேடிக் கொண்டும் . நொடிகள் தோறும் உணர்ந்தப்படியும் இருக்கிறான் .....கனவற்று துயிலுவதால் ஏற்படும் அமைதியிது.... எந்த ஆன்மீக குறியீடும் அங்கே வேலை செய்வதில்லை .... அடிப்படையே தன் முட்டாள் தனம் மீதே பயணித்து வந்ததை அறியாமல் போகவில்லை.... காலம் கண்கட்டும்..
காலவெளி தளத்தில் நடந்து கொண்டிருக்கும் போது. நடக்கின்ற கால சக்கர நேரத்தை அறிந்து கொள்கிறான்.... அதை புரிந்துக் கொள்ளலாம் என்று கூட சொல்ல வரலாம்....உதாரணமாக செருப்பு அறுந்து விட்டது ..... ஒன்று வாங்க வேண்டும் என்று நினைவலைகள் நேர்கோட்டில் வரும் போது ...செருப்பு வாங்கி கொள்.. என்று கம்பெனி காரனே நம்மை கேட்காமலேயே பரிசு கூப்பன் ஒன்று. தங்களை வந்து சேரும் போது குழப்பமடைய கூடும்.... கால வெளி பயணமிது.... குடி நீர் பாத்திரம் எங்கே என்று வீட்டில் சண்டையிட்டு கொண்டிருந்து விட்டு துணிக்கடை சென்று வாங்கிய துணிக்கு பரிசாக ... குடிநீர் பிளாஸ்க் ஒன்று பெறும் போது ... ஸதம்பித்து நிற்கும் ...காலமே மன.கால வெளி காலம்.... இந்த அடுக்குகளில் அயர்ச்சி ஏற்ப்படாத வண்ணம் இருக்க பழக வேண்டும்.... நாம் இங்கே ஒன்றுமேயில்லை என்று.. இந்த பால்வெளியில் ஒன்றி குறுகியிருக்கும் போது எல்லையில்லா இந்த கால சக்கரம் நம் பாதையை ஒடுக்கியாள்வதை அறிய வரலாம்.. அங்கே வாஞ்சையோடு பேரன் போடும் ...மகத்துவமாய் அங்கே இயற்கையோடு ஒத்திசைவு ஏற்ப்பட்டதை கண்டடைந்து விடுவதால் .. மிகப் பிராமண்டமான அண்ட சராசரங்களோடு ஒப்புவித்து அலையோடு நின்று கொள்ள வேண்டியதாயிருக்கிறது ...
ஒன்றுகொன்று முரணான காலத்தால் இயங்கி வந்த காலம் முடிந்து இயக்கமற்ற காலத்தோடு ஒன்றி மகத்தான காலமாக்குகிறது
புத்தாண்டு வாழ்த்துக்கள்