நாம் வழிப்பட்டு கொண்டிருந்த
அத்தனை தெய்வங்களும் .....அதன் உருவமைப்பு பெற்ற பிம்பங்களும் மற்றும் எந்தவொரு எழுச்சி நிலைப்
பெற்ற ஆன்மாக்களின் , உருவங்களும் அதன் பின்னர் வரும் மாயம் கொண்ட பிம்பங்கள் அடங்கிய
காட்சியமைப்புகளும், ஒளி மற்றும் ஒலிகளும் ... அதன் பிறகு அங்கிருந்தும் அதனின்றும் தோன்றுவனவையாவும்.....
அனைத்தும் ஒருங்கே பெற்ற நம் மனத்தினுடைய , மனத்தின் உள்ளே அமைக்கப்பட்ட , அமைந்திருக்கும் ஆசைகளும் , எண்ணங்களின்
புறவெளிப்பாடுகளே, மனத்தினால் உருவாக்கப்பட்ட, உருவகிக்கப்பட்ட எந்த வொரு வெளியில் வரும்
அமைப்பும்.....அதனின் போலியான தோற்றங்களேயாகும். ஒவ்வொன்றும் அதன் ரூப அமைப்போ, உருவமோ, அதனின் சக்தியடக்கமோ, இருப்போ இல்லாத வெறும்
சூன்யமான வெறுமை என்ற உண்மையை உணரப்பட்டவுடன், அந்த சூன்யமான யிடத்திலிருந்து தன்முனைப்பில் வெளிப்படும் ஒளி ஒலி உணர்வில் தவம்
இயற்றுபவர் அதுனுள் சென்று மெதுவாக மறைந்து போகிறார். ....இந்த உண்மையை புரிந்து
கொள்வதில் மட்டுமே முடிவு நிலைக்கு வருகிறது என்பதனை யோகம் செய்கிறவர் தன்னை அறிந்து கொள்ளும்
நிலை பெற்று வருகிறார் என்பதை உணர தொடங்குகிறார்..