Saturday, October 8, 2022

ஆகாய நீர்

ஆகாய நீர்- 1

 

வெள்ளை காகிதம் என்பது உயிர்....அதில் கருப்பு புள்ளியிட்டு கவனித்தால்.... நொடிகளில் அது காகிதத்திற்குள் அங்கும் இங்கும் ஓடி .... ஒரு படியில் மறைந்து விடும்..... தொடர்ச்சியாக யோகப்பியாசம் செய்கிறவர் .....அந்த பேப்பரை எடுத்து பார்த்தால் கருப்பு புள்ளி தெரியாது..... அப்படி தெரிந்தால் .... செய்கிறவர் கண்கள் மேல் நோக்கி நகர்ந்து செல்லவில்லை என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள்......மாய உலகம் .... இந்த மாயை சூழ நம்மை சுற்றி வரும்...... மாயை பல வகைகளில் மறைந்திருக்கும்..... அதற்குள் ஒன்றி செல்லவும் அதை கைக்கொள்வதுமே கருமமே கண்ணாக பெரும்பாடு படுகிறார்கள்...... சமீஞ்சைகள் வெளியே இருந்து தான் வருகிறது......பல வருடம் முன்பு சொன்னப்போது சிரித்தார்கள் .... மூளை கூட வெளி சமிஞ்சைகளால் உட்படுத்தப் பட்டிருகிறது.... உடலில் உள்ள ஒரு இடம் மூலம் அவரவர் காலத்திற்கேற்ப்ப ஆற்றலை அதை கிரககித்து கொள்கிறது ...... நாம் வானில் அல்லவா இருக்கிறோம்... வானத்தின் மேலே உடம்பும் உயிரும் இருப்பது எதற்காக இந்த மாயை துரத்தி பாய்கிறது ..... அந்த துகள் உடம்பெல்லாம் முன்பும் பின்பும் ஓடி வெளியேறி நிற்கிறது..... அந்த கர்த்தா எங்கிருக்கிறார்.... ஆற்றல் முழுவதும் எதை கட்டுப்படுத்துகிறது ..... பாதரசம் வாய் வழியே துப்பி எடுத்து வீசி எறிந்து விட்டு..... உயிரும் பாதரசமும் ஒன்றிபிணைத்து கொள்கிறது .....திருப்பி எடுத்து உடம்பிற்குள் சேர்க்கிறது... உடம்பு பாதரசத்தை வெளியிட நீர் கழித்து சேர்த்து வைக்குமா இந்த மண்......லிங்க ரசமா இது.....வாங்க முடியாத விலை வெளியில் ..... கழிவில் தங்க துகள் வருகிறதா என்று கழிவிடத்தில் பார்த்து விட்டு மூடவும் .... இயற்கை வெப்பத்தை தாங்காத இந்த உடம்பு..... நாக்கில் கங்கா ஜலத்தை மூன்றே சொட்டு விட்டு கண்கள் வழியே பார்த்தால் சூரிய கதிர்கள் உள்ளில் பாய்வதை தெரியாமல் தவிட்டு பானைக்குள் ரசமணியை போட்டு பானை முழுவதும் பஸ்பமாகி போய் விட்டது..... தூக்கிக் கொண்டுபோய் ஆற்றில் கொட்டிவிட்டு வந்தார்கள்......சமாதியின் உள் இருந்த குருவை எழுப்பி ஏன் இப்படி இயற்கை எதிர்ப்பாகவே இந்த மாயை நம்மை அழைத்து செல்கிறது.....மீண்டும் சமாதி குழிக்குள் உள்ளே போய் விட்டார்...... இயற்கை சாராம்சம் மிக பெரிய பொக்கிஷும்.....இந்த மருந்துகள் , பஸ்பம், பாஷாணம் எல்லாம் உடம்பில் உருவாகும் ஆற்றல் எடுத்து கொண்டு ஒப்புமை கொள்ள ஞானம் சக்தியால் அணுவை பிசைந்து வாய்க்குள் தள்ளி விட உடம்பெல்லாம் ஆயிரம் நரம்புகள் மின்சாரம் பாய்வதை போன்று கண நேரம் மறைந்து கழிந்தது..... எதை சுகிக்க இந்த மெய்யுணர்வால் மட்டுமே அடைவது.......

 

Sunday, January 16, 2022

இருப்பு 5

 காட்டுயானையை  பிடித்து யானை பாகன் எப்படி அதை தன்வயப்படுத்தி கட்டுப்படுத்தியும் பயிற்சியளித்து படிபடியாக  வளர்த்தெடுக்கிறாரோ அதுப்போல் கெளதம புத்தர் தன் படிநிலை பயிர்ச்சிகளால் மனித மனத்தை பக்குவபடுத்திய நிலையை அடையச் செய்கிறார் என்று மஜ்ஜிம நிகாயம் சொல்கிறது......

மனித மனம் தன் லயப்படுவது எப்போதும் நடந்துக் கொண்டேயிருக்கிறது .... நாம் அதை கவனிக்காமல் எதோ நாமே நமக்கு தேவையானவற்றை செய்து விட்டதாகவே நினைப்பில் இருக்கிறோம்...அப்படி வந்து போகும் போது அதை தவற விடுவதாலேயே  அது தன் இஷ்டப்படி அமைத்துக் கொள்ள கிடைத்த இடங்களில்  அமர்ந்துக் கொண்டு மனத்திரையில் தன்  படத்தை ஒட்டி கொண்டேயிருக்கும்...இது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பொருந்தும்..... மனமது காட்டுவதை மட்டும் நாம் பார்க்க துவங்கிவிட்டால் அது வேற திசை பார்த்து போக ஆரம்பித்து விடும்....... பின்னர்  தூரம் போய் விட்டால் அத்துடன் நிகழ்ச்சி முடிந்தது..என்று நாம் புரிந்து கொள்ள முடியும்...... அந்த படம் பார்ப்பதற்க்கு  நாமே மூளையால் தொடர்பு ஏற்படுத்தி  கொடுத்து புது படம் பார்த்துக்கொள்ளவும் அந்த நிகழ்ச்சியை நம் இஷ்டப்படி உண்டாக்கி  பார்க்கும் போது அங்கே சக்தி விரயம் ஆகிறது.....காலம் நேரம் அங்கேயிருக்கும் போது உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி சரியாக இணைந்து கொள்ளாது ...... பஞ்ச பட்சிகள் தவறாக போகும் இடம் என்பது இந்த இடத்தில் இயங்கும் காலம் நம் வயப்படவில்லை என்பதனை அறிய நேருகிறது.......

மனம் உருவாக்குதலுக்கு அண்ட சராசரம் அப்படி இணைந்து செயல்படுவதால் மட்டுமே நம் உடம்பும் கூட அதன் இயக்கநிலைக்கு சென்று விடுகின்றது.... வெறும் .படம் பார்ப்பது அண்ட சராசரத்தை தான் என்பதை சிறிதளவு நம் மூளைக்கு அறிய வைக்க முடிந்திடுமானால் பிற்பாடு அதுவாகவே தானாக நமக்கு இது வேண்டாம் என்று நம் கட்டுக்குள் வந்து விடும் என்பது ஒரு இயக்காற்றல்.....மனித மூளை மனத்தின் தொடர்பை அறிய நேரும் காலத்தைதான் ஞானம் என்கிறார்கள் என்று நினைக்கிறேன்..... இரண்டுக்கும் நடுவில் ஒரு மனிதனால் நீண்ட காலம் நிற்க முடியாது..... தன்னை கடந்து செங்குத்தாக திரியும் செயலும் நிகழ்ச்சிகளை பார்த்திருப்பது ஒருவர்க்குக் களைத்துப் போய் விடுகின்றது .....மனம் ஒரு முக பயிற்சியை செய்வதை  விட அதே மனத்தால் அது எங்கே தொடர்பு கொள்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்து புரிந்து கொண்டால் தவம் செய்ய வேண்டியிருக்காது. ..

தினமும் செய்யும் மன பயிற்சிகள் மனத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி அதை காலியாக வைத்திருக்க செய்யும்...... தவம் செய்து வர அந்த வெற்றிடம் பெரிதாக பெரிதாக மனம் பேசுவது குறைத்து கொண்டே வரும். .... பின்னர் மனத்திடம் கேள்வி கேட்டால் ...எப்படி கம்யூட்டர் பைல்களை தேடுகிறதோ அதை போன்று அது காலசக்கரத்தில் நின்றுக் கொண்டு தேடி எடுத்து விடை சொல்லும் போது நாம்  அது  பதில் அளிப்பதாக சொல்லி வருகிறோம் ......அதற்கும் காலம் தேவைப்படுகிறது இயக்க ஆற்றல் நின்று தேடுவது ஒரிரு நிமிஷங்கள் மட்டுமே. ....இதற்குப்  பல வகை பெயர்கள் இட்டு அழைத்து வருகிறார்கள்....இதுவே தேவதைகளின் குரல் என்று பெரியவர்கள் அதனை வெவ்வேறு விதமாக மண்ணிற்கு ஏற்ப்ப  பெயர்கள் இட்டு  கூப்பிடுகிறார்கள்..... அதற்கொரு எல்லையுண்டு.அந்த எல்லையை அவற்றால் கடந்துச் செல்ல முடியாது .... பறவைக்கும் சிறகுகள் வலிக்கும்.......

அதிலும் பல அடுக்கு கட்டுமானங்கள் உள்ளன என்பததை மனது படிபடியாக அறிந்து கொள்கிறது .... கட்டுமானங்களிடையில் தேடி எடுப்பது மனம் எந்த டிகிரியிலும் திரும்பி பார்ப்பதற்குரிய பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே அது வசப்படும்.... ஒரு திசையில் பார்ப்பதென்பது எல்லாவற்றையும் தேடும் போது எது தேவையோ அது எங்கிருக்கிறது என்று அண்ட சராசரங்களில் தேடுவது ஒரு வேலையாகி இருக்கலாம். .....அங்கே தேடிக் கொண்டிருப்பது நம் மனமல்ல என்பதை இங்கே படிக்கும் போது மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்..வேண்டுகோள் வைப்பது மட்டுமே மனமாக அங்கே நிற்கிறது. தேடி எடுத்து கொடுப்பது அங்கே தனி இயக்கம் செயல்பட்டு அந்த இயக்கமற்ற ஆற்றலில் பார்க்க மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது....... அங்கே நாம் எதையும்  செய்து விட முடியாது.  "தவறுகளை திருத்திக் கொள்ளலாம் என்ற மனப்பிரமையை மட்டுமே ஏற்படுத்தும் எதோ ஒன்று நம்மை கட்டுப்படுத்துகிறது என்று தவறுதலாக புரிந்துக் கொள்ளக்கூடாது அங்கே நாம் தான் அதன் ஊடுருவியலில் இருக்கிறோம்..... சில விஷயங்களை செய்து முடிக்கவோ  செய்யவோ அங்கே போய்  நிற்க நாம் பல ஆண்டு தவம் செய்த ஆற்றல்  தேவைப்படுகிறது .... திடீரென்று சாதகன் கருமை நிறமுடைய காளியை பார்த்ததால் புத்தி பேதலித்து விட்டது என்று கிராமங்களில் சொல்வது இதைப் பற்றி தான்..... எண்ணிய எண்ணம் அதை ஏற்கனவே அறிந்திருந்த மனம் உருவாக்கி வைத்திருந்த காளியின் பிம்பம் அங்கே ஒத்துப் போகவில்லை. சராசரங்கள் உருவெடுத்து அவனுக்கு காண்பிக்கும் போது பயந்து விடுகிறான்... உடைகளோடு பார்த்த தன் காளியை சர்வ தரிசனமாக நேரில் பார்க்கும் போது ஏற்கனவே குறைவான வேகத்தில் இயங்கி கொண்டிருந்த இதயம் தன் படப்படப்பை குறைத்து விடுவதால் மூளை அதை சரிவர யோசிக்காமல் தடுமாறுகிறது..... அதனாலேயே பயிற்சியில்லாமல் வெளிப்புற பூசை வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு .... மந்திர ஜபங்கள் சரியான பாதையை அடையாது என்பதற்கு இதுப் போன்ற நிகழ்ச்சிகளை உதாரணமாக வைத்துக்கொள்ளலாம்...

ஜபம் செய்வோர் தாங்கள் நினைப்பது நடக்கிறது என்று நினைப்பது தவறானது..... அது தங்களை வேறு எங்கோ இட்டு செல்கிறது என்று கவனத்தில் கொள்ள வேண்டும்..... புத்தர் அந்த இறுதி படிநிலையில் இருந்துக் கொண்டே அதை கடந்தவராக நாம் அறிந்து கொள்ள முடிகிறது..... உலகம் முழுக்க ஒரே நேரத்தில் எல்லோருடைய கண்ணெதிரேயும் பிரவேசிக்கக்கூடிய ஆற்றல் அவரிடம் மட்டுமே இருந்தது.... நின்றுக் கொண்டே பிரசவித்த போது குழந்தை மண்ணில் விழாமல் தேவர்கள் ஓடி வந்து அதை தாங்கி பிடித்த பெருமானே நின்றார்...