இத்தகைய மந்திர ஜெப முறைகளால் மக்கள் இதில் உழன்று மூழ்கி மரணித்து விடுகிறார்கள்... இதை அடைவது என்பது சாதகனின் முழு அர்பணிப்பும் உடல் சார்ந்த சோர்வு மட்டுமே மீதம் இருக்கிறது... அடைந்தவன் இதை தள்ளி வைத்து அதை அடுத்து கடந்து மேலே சென்று விடுகிறான்... பரவெளி வசப்பட்டு விடுகிறது.... சாதாரண மக்கள் அறியாமல் இதை எதோ பெரிய வாழ்க்கை தேவைகளை கொண்டு வரும் என்று... இதன் உண்மை அறியாது ... மந்திர ஜெபம் செய்து மணி உருட்டி எந்திரம் மேல் அமர்ந்து பூசை என்ற ஒன்றை புறவெளியில் செய்து மடிகிறார்கள்... பேசா மந்திரம் என்பது மறைத்து வைக்கப் பட்டதாகவே இருக்கிறது .. நடைமுறையில் இல்லாமல் போனதால் அகவெளியில் கொண்டு சென்று இருப்புக்குள் சேர்த்து வைத்து விடுகிறார்கள். அறியாத மக்கள் பஜனை பரிகாரம் கோவில் என்று அலைக்கழித்து பயனுமின்றி மனசோர்ந்து அலைக்கழிக்க படுகிறார்கள்.. தவறாக வழிநடத்தி செல்கிறார்கள். என்று சொல்வதுண்டு.... மக்கள் கவனமாக இதை அணுகி மனம் உணர்ந்து வெளிவந்து விட முயற்சிக்க வேண்டும் ...
நம் சாஸ்திரத்தில் 17 பிறவிகள் இருக்கிறது என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்... ஜாதகத்தில் எத்தனைவது பிறவி என்று கணிக்கலாம்.. மனித பிறவி எடுத்த பின்பு ... மீண்டும் உயிர்களாக பிறக்க முடியாது.... பாபநாசம் சாமியின் சிஷ்யர் ஒருவரிடம் பேசும் போது ... அவர் குரு சர்ப்ப லோகத்தில் இருக்கிறார் என்பதாக சொன்னார்... நான் யார் என்று அறிவதை விட ... நாம் எங்கிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதே சிறப்பு .... நாம் யார் என்று அறிய ஒரு முயற்சியும் தேவையே இல்லை... தகுதிக்கு ஏற்ப எண்ணற்ற உயிர்கள் நம்மை சுற்றி இருக்கின்றன... மந்திரம், சூனியம் ஏவல் பில்லி என்று அதில் சிக்கி தவிக்க கூடாது... அதை எண்ணி பயப்பட கூடாது... ஜோசியர்கள் பூசாரிகள் மந்திரவாதிகள் சொல்லும் பரிகாரங்களால் பிறவி கர்மாவை ஒன்றும் மாற்றி விட முடியாது.... அதை நம்மிடம் இருந்த விலக்கிக் கொள்ள நிலை எய்தியவர்கள் வர வேண்டும் ... இறையை தாண்டி மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியாது.... மதம் சான்ற நம்பிக்கைகளால் உழன்று போய் விட கூடாது... கண் முன் நடந்து கொண்டிருப்பது எல்லாம் செயல்கள்... அதை மாயை என்கிறார்கள்.... ஊர் சுற்றி கோவிலுக்கு சென்று வரலாம்... அதனால் நடந்து கொண்டிருப்பதை நிறுத்த முடியாது.... தவம் இயற்றுவது என்பது மனத்தை நிறுத்துவது... அவ்வளவே ... மனம் காட்சிகளை உருவாக்கிக் கொண்டே செல்லும் ... அத்தனை பேரும் மனத்தை நிறுத்துவதற்கு தான் பயிற்சி கொடுக்கிறார்கள்... ஒன்பது ஓட்டையும் மண்டையில் தான் இருக்கிறது ... பத்தாவது ஓட்டையை குருவே திறக்கிறார் .... அதற்கு தகுதியை உருவாக்கி கொள்ளவே பயிற்சி செய்கிறோம்... நான் யார் என்று அறிய வேண்டும் என்று தெரியாதவர்கள் சொல்கிறார்கள்...