Saturday, August 2, 2025

Meditator

 Meditator 

"Different thoughts emerge from various meditation practices. The core truth is that five minutes of regular breathing exercises can control one's mind immediately. The body responds to external stimuli, and subsequently, the soul calms down within a few minutes. With constant practice, we observe that the breath becomes internalized. The notion that heartbeat and pulse rate decrease is a misconception; instead, the entire system starts operating under the soul's command, which functions from a transcendent level. Sometimes, moving objects appear slower due to the different rotational speeds of brain wave patterns..  soul is different .. concentration never shifts from the top angle of the eyes... We notice the  shadow part of the  universe linked in our physical body... Moments reflect the movement of energies, while periods manifest as glimpses on the inner visual screen. Sometimes, it is possible to perceive three periods simultaneously on this inner screen without closing one's eyes. Therefore, it is advisable for meditators to practice keeping their eyes open when they begin to sense the movement of energy within the soul, as distinct from the physical body.

"After several years of meditation, an individual may notice a reduced need for sleep. Internal mental processes may engage in dialogue and argument with various thoughts, preparing responses for others. Initially, this phenomenon might be attributed to a disorder or age-related factors. However, due to the effects of meditation, the mind becomes merged with the soul, and the individual may not recognize that their thoughts are being influenced by an external soulful presence. The brain of the individual becomes dormant, acting as a standby mechanism for the meditator. Certain astrologers and fortune tellers can access the past and future by tapping into this merged soul state. Questions posed by others are answered by the soul, rather than the mind. These occurrences represent the soul's subtle influence on the mind. The breath circulates throughout the entire body, receiving signals from external sources through a singular tapping point. Meditators strive to locate and access this tapping point, which marks the termination of energy pathways."

Friday, April 18, 2025

நீல நிறம்

 நீல நிறம்

காலத்திலும் அதன் வெளியிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா செயல்களும் கால வரையறைக்குள், அடங்கும் அல்லது அடங்குவதில்லை என்பதை புரிந்து  கொள்வதாலேயே தலையிடுவதில்லை..

அவனைப் பார்க்க அவன் வீட்டிற்கு வருகிறவர்கள் முதலில் காண்பது  சுவற்றில் நீல நிறத்தில் பூசப்பட்ட  வானமும் கோள்கள் நட்சத்திரங்கள் நீல நிறத்தில்  பூசி இருப்பதை காணலாம்... அதை வைத்து அவன் உங்களுக்குப் போக்கு காட்டிப் பேசி கொண்டிருப்பான் ... நீங்கள் கண நேரம் மனத்தோடு இருந்தால் உங்களை அவனால் படிக்க முடியாது... அதனால்  வருகின்றவர்களை வேறு திசை காட்டி திருப்பி  அவர்களைப் படித்து அறிந்துக் கொள்வான்... காலத்தால் அது பயனில்லை என்று பிரயோகிப்பதை கைவிட்டு விட்டான்.... பார்க்க வந்தவர் அவனை ஜோதிடரா நீங்கள்? என்று கேட்டார்... அவன் அதை மறுத்தான்... தனக்கு சோதிடம் தெரியாது என்றான் .... படிக்காமல் எப்படி நீங்கள் கிரகங்களையும் கோள்களையும் கணித்து சொல்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார் ....  சிரித்தான்...நிறைய கேள்விகளுக்கு இப்படி தான் சிரித்து வைப்பான் ... அவனுக்கு அதைப் பற்றி உண்மையாகவே தெரியாது... புகழ் பெற்ற சோதிடர் ஒருவர் அவனுக்கு கற்று கொடுக்கிறேன் என்று சொல்லி .. சொல்லாமல் தவிர்த்து விட்டார் ...பல்லி சத்தம் வெளியே இருந்து வருவதை கூர்ந்து கேட்பான்... மிக தூரத்தில் ஒலித்தால் கூட அதை அவனால் கேட்க முடியும்... குழந்தைகள் அழுவதை உடனே தெரிந்து விடும் அவனுக்கு ... அவன் இருக்கும் குடியிருப்பில் பெண் குழந்தைகளாகவே பிறந்தது ... எதற்கு என்று ஒரு நாள் யோசித்தான்   யூகிக்கவில்லை ... பயற்சி செய்தால் கை கூடும் என்று அதை விட்டு விட்டான்... அகங்காரம் பிடித்தவன் போல் தன் செயல்களில் காட்டினான்....ஐந்து இளையராஜா பாட்டுகளை ஒரு சேர பாட வைத்து ஒரே நேரத்தில் கேட்கும் பழக்க முடையவன் ...  பார்த்து சொல்வீர்களா? என்று கேட்டார்... அவன் சரி  என்றான் ... 

ஒரு முறை தான் அதை திறந்து  காண்பிப்பேன் .. அதில் நீங்கள்  எல்லாவற்றையும் கேட்டு கொள்ள வேண்டும் ... மீண்டும் உங்களுக்கு அது திறக்காது என்று மெல்லிய ஓசையில் அவரிடம் சொன்னான் ... அவர்க்கு இவன் என்ன சொல்லவருகிறான் என்று புரியவில்லை.... புத்தகத்தை காட்டி நீங்களே படித்து கொள்ளுங்கள் என்று படிக்க  சொல்வார்களே... அதைப் போலவா?  வருகிறவர்களை குழப்பி அனுப்புவான் என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறார் .... பணத்தை துச்சமாக மதிப்பவனான இவன் ... அதனால் ஒரு சேர திமிர் அகங்காரம் எல்லாம்  அமைந்துள்ளது என்று மனத்திற்குள் திட்டினார் ... ஜாதகத்தை டீ பாயில் வைத்து விட்டு அமைதியாக இவன் பேசுவதை கேட்க ஆரம்பித்தார் ... சமுதாயத்தில் நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் ... தன்னை மதிக்காத இந்த ஆளிடம் வந்து இப்படி நிற்க  வேண்டியதாகி விட்டதே என்று எண்ணினார்..

வீட்டில் இருந்த நீல வண்ணத்தில் வரைந்திருந்த நட்சத்திரம் கோள்களையுடைய அந்த  சுவரை காண்பித்து  .. இப்பொழுது உங்களுக்கு கால சக்கரம் மாதிரி இருக்குது இல்லையா ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சூசகமாக சிரித்துக் கொண்டே அவர் கண்களைப் பார்த்தான் .

அவனுடைய  கரு விழியில் நட்சத்திர கோளங்கள் தீ பந்தங்கள் எரிவதை அவனின் இரு கண்களிலும் படம் ஓடுவதை போன்றிருப்பதை பார்த்தார் ... 

என்னிடம் ஜாதகம் கேட்க வந்தீரா? என்றான் ... அவரால் தன் உடம்பை அசைக்க முடியாத நிலையில் பதில் சொல்ல முடியவில்லை... தானும் அந்த நீல சுவரும் ஒன்றுப் போல மாறுவதை கண்டு அதிர்ந்தார் ... தன் இதய துடிப்பு குறைந்து கொண்டே வந்து நின்று விட்டதை உணர்ந்தார் ...

தன் அக நெருப்பை கணலாக ஏற்றி எண்ணத்தை பருப் பொருளாக மாற்றி அதை தனி தனி உருவங்களாக உருவெடுக்க வைத்து அடுத்தவர் கண் முன் உதிக்க செய்வதில் நிபுணராக உள்ள குருவிடம் இருந்து வந்தவனிடம்  ... ஜாதகம் சொல்ல சொல்லி சிக்கிக்  கொண்டார்... குருவின் தீயை அவன் வெம்மை படுத்தி அந்த நீல நிற சுவற்றில் கண்ணுக்கு தெரியாத கருப் பொருளாக படைத்து வைத்திருக்கிறான் ... அந்த ஓவியம் படமாக வரைந்து பூசி பதினான்கு வருடம் முடிந்தது ... அண்ட சராசரத்தை தட்டையாக விரித்து நீல சுவற்றில் பரப்பி வைத்திருக்கிறான்... சில சமயங்களில் நட்சத்திரங்கள் அவன் வீட்டின் வரவேற்பறையில் புழுங்குவதை பார்த்து அதனூடே  கை விரல்களைக் லென்ஸ் போன்று குவித்து ... அதில் தன் அப்பாவை தேடுவான்... விடியலில் சூரிய ஒளி வீட்டின் வரவேற்பறையில் விழும் போது அவன் நின்றிருந்த கணத்தில் மறைந்துப் போவான்... தற்கணம் வாய்க்கும் ...

நீங்கள் நீல நிற வண்ணத்தை கவனிக்கிறீர்களா என்று கேட்டான்... ? அவர் பேசாமல் அவனைப் பார்த்தார் ... அவரால் கண்களை கூட சிமிட்ட முடியவில்லை... சிரித்துக் கொண்டே உங்கள் வலப்புறம் இருக்கும் நீல நிற சுவரில் என்ன தெரிகிறது என்று மீண்டும் கேட்டான்... நேர்முக தேர்வு கேள்வி போல அதை திருப்பி திருப்பி கேட்பான்... அவர் நட்சத்திரங்களும் கோள்களும் உயிர்ப்பாக காண்கிறேன் ... என்றார் ... அது என்னருகே வருகிறது... எனக்கு மிக பயமாக தெரிகிறது என்றார் ... இப்பொழுது கண்ணை மூடி கொள்ளுங்கள் என்றான் அவன் .... கணத்தில் அவர்க்கு எல்லாம் மறைந்து விட்டது ... அவன் குரல் மட்டும் அங்கே ஒலித்தது ... அவர் இறந்து போன தன் தாய் தந்தையரை உயிரோடு  பார்க்கிறார் ... அவர்களிடம் பேசுகிறார் ... ஓ வென்று கண்ணீர் விட்டு அழுகிறார்....

நேருக்கு நேராக தன் வாழ்க்கையில்  நடந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார் ... இடது புறம் இருந்து கடந்த காலத்தில் ஆரம்பித்து  பின்னர்  நடுவில் வந்து நிகழ்காலத்தில் நின்று வலது புறம் திரும்பி எதிர்காலத்திற்கு சென்று அங்கே பார்க்க வேண்டிய காட்சிகளை நிகழ் காலத்தில் பார்த்து பரவசமடைகிறார் ... அவனை அந்த உலகில் தேடுகிறார் ... காணவில்லை.... கூப்பிடுகிறார் அவனை... நீங்கள் முடித்து வெளிய வாருங்கள் என்று அவன் குரல் கேட்கிறது ... அவர் கேட்க விரும்பிய ரகசியங்களை சம்பந்தப்பட்டவரை அழைத்தும் கேட்டும் பதில் பெறுகிறார் ... அவர்க்கு தன் இதயம் துடிக்கும் சத்தம் திரும்ப கேட்க ஆரம்பித்து விட்டது ... உடனே திரும்பி வாருங்கள் என்று அழைத்தான் ... அவர் வர மாட்டேன் என்று மறுக்கிறார் ... இன்னும் சிறிது நேரம் கொடு என்று மன்றாடுகிறார் ... வாழ்க்கை முழுக்க தொலைத்த உன் காலத்தைப் போன்று இங்கே உன் காலத்தை இருப்பு வைக்க முடியாது என்று கோபமாக பதிலளிக்கிறான் ...

பதற்றமோ பயமோ தேவையற்ற அச்சமின்றி கால சக்கரத்தை கை கொள்ள பல ஆண்டு காலம் முயற்சித்தான் .... மனம் குலைய வைக்கும் அளவில் தான் அது இருந்தது ... எதுவும் தன் அறிதலுக்கு அப்பாற்பட்டதல்ல என்ற கூற்று வெறும் பொய் என்பதை அறிந்தான்... உள்ளொளியால் மட்டுமே யதார்த்தை பார்க்க இயலும் என்று சொன்னான் ... யாரும் கேட்கவில்லை அவ்வொளி வர மற்றவற்றை நிற்க வைப்பது கடினமானது என்று காலசக்கரத்தில் ஏறி இறங்க போகும் போது புரிந்தது ...

அவர் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருப்பதை  பார்க்கிறான் ... அவன் எழுந்து அங்கேயும் இங்கேயும் அமைதியாக நடக்கிறான் ....மேற்கு பக்கம் மரகட்டை ஒன்று வைக்கப்பட்டுள்ளது ... அதை திரிசூலம் போல் கையில் ஏந்தி அவர் அமர்த்திருக்கும் சோபா வரை வந்து மீண்டும் நடந்து வரவேற்பரையில் அங்குமிங்கும்  நடக்கிறான் ... அவன் கண்களுக்கு நீல நிற சுவர் மறைந்து அண்ட சராசரம் தெரிகிறது ... கால சக்கரத்தில் நேரம் பார்க்கிறான் .... ஐந்து நிமிடம் ஆயிற்று என்று இரண்டு கைகளையும் உயர்த்தி விரித்து போதும் என்று சொல்லி நடந்து  கொண்டிருந்த கணத்தை நிறுத்தினான்  .... . கைகளில் ஏந்தியிருந்த மரத்தால் செய்யப்பட்ட கம்பை கொண்டுப் போய் ஓரமாக வைக்கிறான் ... அவர் இதய துடிப்பு சீராகி கண்களை திறந்து பார்க்கிறார் ... அவன் நின்று கொண்டு யாரிடமோ போனில் கவனமாக பேசிக் கொண்டு இருப்பதை காண்கிறார் ... தனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தம் இல்லாததது போன்றும் நடந்தேறிய காட்சிகளில் அவன் தற்கணத்தில் இல்லை என்பது போல் நின்றிருந்தான்.. எழுந்து சென்று அவன் கால்களில் விழுகிறார் .... அவன் இதை ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை... அவர்க்கு குடிக்க தண்ணியும் , காப்பியும் கொடு என்று சொல்லிவிட்டு மீண்டும் போனில் பேசிக் கொண்டே  சிரிக்கிறான் ....

ஆன்மா உணர்வதை தன் அனுபவத்தை  தகவலாக மாற்றி அந்த நீல நிறமுடைய சுவரில் அடக்கி வைத்திருக்கிறான் ... மனம் அமைதியுடையோர் அந்த நீல நிறத்தை தாண்டி உள்ளே செல்வர்... தன்னைப் பார்க்க வருகிறவர்களுக்கு அதையே பரீட்சையாக வைத்திருக்கிறான் ... பூமியில் எழும் அடிப்படை ஒலிகளை பிரபஞ்சத்தோடு ஒற்றி பார்க்க முயல்கிறான் .... அவனுக்கு உடைகளே தேவையில்லை...  உடையின்றி நிர்வாணமாக இருக்க முடிந்தால் அவன் இந்த உலகத்தின் மீது பற்றற்று போவான் அவனுக்கென்று ஒரு தோற்றம் உண்டு ... ஆழ்மனத்தில் எப்போதும் உண்டு.   அது மட்டுமே அவன் கண்களுக்கு தெரியும்... அவன் எந்த தோற்றத்தையும் உருவாக்கி வெளிவர கூடியவன்.. தற்கணம் என்று சொல்லப்படும் கணத்தில் அவன் அங்கு இருப்பதேயில்லை...  தனித்திருப்பதில் அவன் இருவராக இருக்கிறான் ...காலம் எப்பொழுதாவது தான் அவனுக்கு பணிந்து செயல்படும் ... கணத்தில் நிற்கும் போது அது பணியும் என்று ஒரு முறை கண்டான்... மீண்டும் அக்கணத்தை அவனால்  கொண்டு வர முடியவில்லை என்று அதை விடாமல் துரத்தி பிடிக்க முயல்கிறான்...

திசைப் பார்த்து செலுத்துபவனாக இருக்கிறான்.... செல்ல வேண்டியவர்களை மனோசக்தியால் அந்த நீல சுவரில் பதித்து வழி நடத்துகிறான் ...  அவர்கள் தான் செல்ல வேண்டும் என்று அவர்கள் அறியாமல் நிற்கிறார்கள் .. அதை மனப்பிறழ்வு நிலை .. தன் இயல்பை விட்டு ஒடுக்கி வைத்து கொண்டு சரியாக இருக்கிறோம் என்று பலர் சொல்வதை கேலி செய்கிறான்.

Wednesday, September 18, 2024

பரம்பொருள் 5

வருடம் கடக்க மனம் அமைதி அடைகிறது ..... அது பயத்தை உருவாக்குகிறது .... அம்மையப்பன் என்பது பாதையில் வரும் ஒரு நிலை.... சிக்கலான மன அடுக்குகள் இடையே கடந்து வரும் போது அம்மையப்பனையும் கடந்து போக வேண்டியிருக்கிறது ..... அதைத் தாண்டி   போனால் நமக்கு என்ன இருக்கிறது .....ஒன்றுமில்லை .... பெருவாரியான மக்கள் இங்கே நின்று தான் பேசுகிறார்கள்... கேட்கிறார்கள்.... நான் எழுதினால் பேசினால். இவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா  என்று கேலி செய்கிறார்கள் ....... இயற்கையை ஆட் கொள்ளவும் அதை அரவணைப்பிற்குள் தக்க வைக்க தான் அம்மையப்பன் இருக்கிறார்கள் என்று காட்டினால் எல்லோரும் ... அதை ஆமோதித்து ... சரி என்று ஏற்றுக் கொள்கிறார்கள்..... ஆகையால் இப்படியே போய் கொண்டே இருக்க வேண்டியது தான் .... எவ்வளவு காத்திருப்பு எத்தனை காலம் என்று கேட்டதற்கு ...... அதற்குள் தானே இருக்கிறாய் எதற்கு இத்தனை அவசரம் என்றாகிறது ..... தகவல் வரவில்லை காத்திரு என்று மட்டும் பதில் வருகிறது ..... தேவாமிர்தத்தை பருகி கொண்டு இருக்க... உனக்கு எதற்கு கசப்பு .... என்கிறது ..... இடியானதும் மின்னலையும் நாக்கில் இறக்கி ... அப்படியே சப்பி ருசிப் பார்த்தால் ... வெறும் உப்பாக கரிக்கிறது ..... கடலை ஒரு கையளவு அள்ளி வாயில் உறிஞ்சுவது போல் இருந்தது .... அதை துப்பி விட்டுப் பார்த்தால்  மஞ்சள் பூக்களாக பூத்திருப்பது ஆச்சரியத்தை தருகிறது ..... இயல்பு தானே ..... உப்பின் மகிமை அறிய முழு கடலையும் உள்வாங்கி . கொள்வதற்கு தானே...எதற்கு கிரிவலம் சுற்றுகிறார்கள் என்று தெரிகிறது .... அம்மை அப்பனை தான் இவர்களைச் சுற்ற விட்டிருக்கிறார்கள்... மலையே சிவனாக இருக்கும் போது.... அண்டத்தை கேட்ப்பானேன் .... வயிறு முழுக்க காற்றை நிரப்பாமல் இருக்க வேண்டும் ..... அது ஆகாயம் ஊடே உன்னிடம் பதில் சொல்லி தூங்க விடாமல் செய்கிறது ... சமயங்களில் பயங்கரப் பசி எடுக்கிறது .... நன்றாக சாப்பிட்டு சுற்ற வேண்டி வருகிறது ..... இன்று வானத்தில் வரும் மழை  துளி நமக்கானது.... எத்தனை சூட்சுமமான உலகை படைத்த இறைவன் புலன்களுக்கு எட்டாத சிருஷ்டியை நம்மெதிரில் உலவ விட்டிருப்பதாக நாம்  நினைக்கிறோம் .... காண்பதற்குள் மறைந்து விடுகிறது.... புரிந்துக் கொள்வதற்குள் மறந்தும் விடுகிறது.... இது முட்டாள்தனமாக கூட இருக்கலாம்..... மறைவதும் மறந்து போவதும் இயற்கைக்குள் இயக்கநிலை செய்கையே. நிறைவடையாத இந்த உடம்பில் எத்தனை சக்கைகளை ஏற்றிக் கொண்டே இருப்பது....அம்மை யப்பன் வந்த பிறகு தேவதீர்த்தம் நாக்கில் விழ வைத்தார்கள்.... கடலில் இருந்து எத்தனை நீர் எழும்பி மேகமாய் மாறி மழையாய் இடியாய் மின்னலாய் இந்த பூமியில் பொழிய மாதவம் செய்தவர்களல்லவா நாம் ..... அதை ஆகாயமாக பருக தான் இத்தனை வருடம் தவம் செய்ய வேண்டி வந்ததோ..... என்ன சித்தர்கள் நீங்கள் ஏன் அதை மறைக்கிறீர்கள்.... தடுப்பை உருவாக்குகிறீர்கள்.. மறைத்துப் போக செய்கிறீர்கள்.. நீரையே களவுக் கொண்டு கயிலாய்த்திற்கு எடுத்துச் சென்று விடுகிறீர்கள்..... யார்க்கு கொடுப்பதற்கு சமாதிக்குள் அவற்றை வைத்துக் கொண்டு ஒளிந்துக் கொண்டீர்கள்.... உணர்ச்சியை புழிந்து விட்டு உணர்வை மனத்திற்குள் எழுப்பி விட்டீர்கள்.... நாம் தூங்காமல் பேசி கொண்டும் பாட்டு கேட்டு கொண்டும் மட்டுமே இருக்கிறோம் ..... மனமே இல்லாமல் உத்தரவுக்கு காத்திருக்கும் நாய் போல் நாம் ஆகி விட்டோம் ..... நீ போய் கொண்டே இரு என்று சொல்கிறீர்களோ .... தலை உச்சியில் ஓட்டை விழுந்து விட்டதா என்று தடவி பார்த்து கொள்ள வேண்டியிருக்கிறது ........ ஜாதகம் நாம் எழுதியது தானே..... அம்மை அப்பன் இல்லையே ...... பேரண்டம் காக்கும் எண்ணற்ற ரகசியங்களை குறி சொல்பவர் ஜாதகம் கணிப்பவர் எப்படி சொல்லிவிட முடியும்.... அம்மை அப்பன் அருளிருந்தால் பேரண்டத்தை உணர்ந்தவர் ஆகி விடுவோமே ..... நம்மை கடவுளாக நினைத்து கொள்வது இயலாத ஒன்று .... நிறைவின்மையை குறிப்பது அது..... அண்மையில் ஜீவாத்மா பரமாத்மா என்ற ஒன்று இல்லை என்று சொன்னதை அவர்கள் ஏற்கவேயில்லை ..... நாம் உப்பை தின்று வருவோம் ....மண் உப்பு நிரம்பிய உடம்பை தொடாதவாறு ஒளி எழும்பி நிறைத்திடுமாம் ....மாய வேலை ஒன்றிருக்கிறது .... பல உலகத்தில் எழும்பி நின்று மக்களை சிருஷ்டியை அண்டத்தை காலத்தை கடந்து நேரத்தை நிறுத்தி பார்ப்பது ... நேரம் அசைந்த வண்ணம் இருக்கிறது ... தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது ...அது உருவாகி தோன்றி விட்டால் நிறைவு தன்மை வந்தடைந்தது என்று நாம் அறிகிறோம் ...

Saturday, November 18, 2023

பரம்பொருள் 4

 பெங்களூர் போத்தீஸ் துணி கடை இருக்கும் மெயின் ரோட்டின் நடுவில் டிராபிக் காரணமாக ஆட்டோ டிரைவர் எங்களை  இங்கேயே இறங்கி கொள்ளுங்கள்... அங்கிருந்து  நடந்துப் போகுமாறு சொன்னார்...... மகள் விசேஷத்திற்கு பட்டு சேலை எடுக்க வேண்டி போத்திஸ் துணிக்கடை போனால்... அதைச் சுற்றி  எங்கும் கூட்டமான கூட்டம் ..... தீபாவளி பண்டிகை வேறு....நானும் மனைவியும்  பிளாட்பாரம்  மீது ஏறி நடந்து போய் கொண்டு இருந்தப் போது ....எதிரே இரண்டு பக்கமும் இரண்டு குழந்தைகளையும் பிடித்து கொண்டு நடுத்தர வயது பெண் ஒருவர் தன் கைகளில் போத்திஸ் துணி கடையின் ஒரு கட்டை பையை தூக்கியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்.... அவர் நடந்து வந்து கொண்டிருந்தபோதே  அவர் மகன் சட்டென்று  நின்று ... தான் கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை திறந்து அதிலிருந்து சிறிது குடி நீரை அங்கிருந்த கேட்டின் வாயிலில் வைத்திருந்த  அரை கவளம் நீர் நிரம்பியிருந்த ....மண் கவள சட்டியில்  வாட்டர் பாட்டிலில் இருந்து நீரை அதில் ஊற்றி நிரப்பினான் ....அந்த தாய் அவனை இழுத்துப் பிடித்து திட்டி கொண்டே எங்களை கடந்துச் சென்றார் . .... நாய்கள் தண்ணீர் குடிக்கும் அம்மா என்று அந்த சிறிய பையன்  கன்னடத்தில் விவாதம் செய்துக் கொண்டே எங்களைக் கடந்துச் சென்றான்  ...அவனைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக இருந்தது... அந்த தண்ணீர் கவளம்  நாய்கள் நீர் குடிப்பதற்காக தான் வைக்கப் பட்டிருக்கிறது என்று அவனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது? .... மாய ரூபி அவனருகில் வந்து நீர் நிரம்பி வழிந்த கவளத்தை குனிந்துப் பார்த்ததை மாயாவி பார்த்துக் கொண்டே வந்தான்..... நீர் நிரம்பின அளவை மாய ரூபி அளவெடுத்து பார்ப்பதுப் போல தண்ணீரை தொட்டு தொட்டு பார்த்தது.....அந்த பையனுக்கு இந்த வயதிலேயே இப்படியெல்லாம் உதவி செய்யனும்னு தோன்றுகிறதே.... இப்படி இவன் இருந்தால் எதிர்காலத்தில் உங்களை மாதிரி பைத்தியமாகி விடுவான் என்று என்னை மனைவி சாடினாள்.... எப்படி இது போன்ற எண்ணங்கள் அவனுக்கு உதித்தது என்று கேட்டாள்..... அது அவன் பிறவி குணம்.....பிறவியெடுத்து வருவதே அதற்கு தானே .... உயிர்களை பார்க்கத் தானோ என்று திரும்பி அவர்கள் போவதை பார்த்தேன் ...அவன் அதில் நீர் ஊற்றும் போதே ...மண்கவளம் அருகில் நின்றிருந்த மாயரூபி உடல் குலுக்கி தலையை முன்னும் பின்னும் முதுகை  வளைத்து  மகிழ்சியாக சிரித்தது .... கண்டடைந்து விட்டதை அறிந்த சந்தோஷத்திலா ? .... அந்த தாய் அவனைப் பிடித்து இழுக்கும் போது அவன் கைகளில் இருந்து வாட்டர் பாட்டிலிலிருந்த நீர் சிதறி பிளாட்பாரம் மீதும் தெளித்தது..... அந்த கேட்டின் வாயிலில் நின்று உள்ளே பார்த்தால் .... அது ஒரு பாழடைந்த பழைய கோவில் :உள்ளே சிறிய  கதவு தாழ்பாள் போட்டிருந்தது ....சிலை என் கண்களில் தென்படவில்லை .... உள்ளே இருட்டாக இருந்தது..... அதை தாண்டி சிறிது தூரத்தில் போத்திஸ் துணி கடை தெரிந்தது..... உள்ளிருக்கும் கடவுள் இந்த சிறிய பையனிடம்  மட்டுமே தண்ணீர் ஊற்ற சொன்னதா? கோடிக்கணக்கில் மக்கள் அதை கடந்து சென்றிருப்பார்கள்..... யார்க்கும் அப்படி தோன்றவில்லையே ..... சிலர்க்கே அந்த வாய்ப்பு அளிக்கப் படுகிறது...... பிரபஞ்சம் முழுமைக்கும் தேவையானதை அதுவே எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்கிறது.... தோப்பிலிருந்தாலும் அந்த சிறிய பையன் தனி மரம் தானே என்று நினைத்துக் கொண்டே... போத்திஸ் துணி கடை வாயிலை வந்தடைந்தோம்....

Wednesday, November 8, 2023

பரம்பொருள் 3

 பரம்பொருள் 3

தெய்வம் ஏற்றம் பெற்றவர்... அவன் எதிரே  ஆக்ரோஷத்துடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது அவனுக்கும் அவர்க்குமிடைய  இரண்டு அடி இடைவெளியே இருந்தது... அவர் முகம் மற்றும் கைகள் எல்லாம் சிவந்த நிறமாக பரவி  மாறி விட்டிருந்தது. கண்கள் சொறுகி கொண்டே  அவனைப் பார்த்து கனத்த  சத்ததுடன் பேசினார்..... அந்த சத்தம் கர்ஜனைப் போன்றே இருந்தது.....  ஹால் முழுக்க அந்த சத்தம் பரவி எதிரொலித்தது.... என்னைப் பார்க்காதே என்று தன் கைகளைக் கொண்டு முகத்தை மறைக்க முயற்சி செய்தார்.   அவனை விட்டு தள்ளி நிற்க முயற்சித்தார்....இருளுக்குள் பரவி இருக்கும் தெய்வங்கள் எல்லாம் எதற்காக ,எதைச் சொல்வதற்காக  இத்தனை தூரம் வந்தார்கள் என்று அவனால் அங்கே உணர முடியவில்லை..... தெய்வத்தை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.... அருகிலிருக்கும் அறைகளில் இருந்தவர்கள் அலறல் சத்தம்  கேட்டு  ஒடி வந்தார்கள்..... அவனுக்கு மன எழுச்சி ஏற்பட்டு உடம்பெல்லாம் சிலிர்த்து நின்றது... தெய்வத்தை அங்கே  தெய்வமாக கண்டான் .... இரண்டடி இடைவெளியில் ஒளி வெள்ளம் கொண்ட மாயசொரூபி முன் அவன் தன்னை மறந்து அங்கேயே நின்றிருந்தான் . பருப் பொருள்களின் இடையிடைய போய் மனம்  சொருகி கொண்டது.... உடம்பில் ஊர்ந்து ஊர்ந்து அவன் தலையின் இடப்பக்கமாக செல்லும் அந்த ஓட்டத்தின் உணர்வுகள் ஊர்ந்து செல்வதை கவனித்தான்.....மனித உடம்பை எதற்காக எடுத்து கொண்டு  பேசுகின்றன என்று யோசித்தான்....  எல்லா மனித உடம்பையும் எடுப்பதில்லையே .... அது ஏன்? ..... ஆட்கள் வந்தவுடனேயே நின்றிருந்த  தெய்வம் ....அவர் உடம்பிலிருந்து வெளியேறிப் போய் விட்டதை கவனித்தான்  .... சொறுகி நின்ற கண்கள் சரியாக  நேராக அவனைப் பார்த்தன......வந்துப் போன தெய்வத்தின் அடையாளமே அவர்க்கு  இல்லை என்பதை தெரிந்து கொண்டான் ....பலர்  எதற்கு இவர் இப்படி கத்தினார்? என்று கேட்டார்கள்..... தெரியவில்லை என்று சொன்னான்...  இவர் காலையிலிருந்து எங்கும் உட்காரவேயில்லை. உடம்பு சுகமில்லையா என்று அவரையே கேட்டார்கள்.....இவர் இங்குமங்கும் நடந்துக் கொண்டேயிருந்தார் என்று கூட்டத்திலிருந்த ஒருவர் அவனிடம் சொன்னார்...அவர் உள்ளே சென்று சபை முழுக்க ஆட்கள் நிரம்பியிருந்தவர் மத்தியில்  அமர்ந்துக் கொண்டார். பின்னர் மேடையில் ஏறி சிலருடன் அமர்ந்தவர் அங்கிருந்து அவனை பார்த்தவுடன்  அவர்க்கு முன்பிருந்ததைப் போன்று முகம் மெல்லாம்  சிவந்தது....போகும் போது  ஒருவரிடம் நின்று எதோ பேசினார்.....அவனைக் கடந்து நடந்து செல்லும்போது சொல்லிவிட்டேன் என்று சொன்னார்.....மாலை அவன் பைக்கில் ...அந்த புகழ்பெற்ற ஆலயத்தைக் கடந்துச் செல்லும் போது .... சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள அந்த கோவிலின் மேலிருந்து ஒளி கீழே இறங்கிப் பரவி  மெயின் ரோடு வரை பரவி கரைந்து கொண்டு இருந்ததை கவனித்தான் .... எதற்காக அவனை தேடி அலுவலகம் வரை வர வேண்டும்..... எதைச் சொல்ல அந்த தெய்வம் தேடி வந்ததேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே கோவிலை கடந்து சென்றான்..... 🌿