Tuesday, October 15, 2013

கடவுளின் துகள்கள்

கடவுளின் துகள்கள் 2
யோகத்தில் பிரகஞ்சையுடன் விழித்திருப்பதே தவத்தின் ஆரம்ப படிகளாகும். அகம் விரிவடைய விரிவடைய காட்சிகள் மறைந்த வண்ணமே இருக்கின்றன. பேரறிவுடன் தொடர்புக்கொள்ள தவத்தின் சக்திகள் அனைத்தும் பிரயாசனபட்டு சோர்ந்து விடும்பொழுது காண்கின்ற காட்சிகள் யாவும் கனவுகளாக மனப்பிரழையை பிரமையை தோற்றுவிக்கிறது. தான் சித்த சுவாதினம் அற்றவனாக யோகி உலாவவேண்டியிருக்கிறது. குடும்பத்தி்ல் கோபத்தை காட்ட வேண்டி தவிர்க்க முடியாத சூழ்நைிலைகள் உருவாகி கொண்டேயிருக்கின்றன.
மனம் பயணத்தை ஆரம்பிக்கும் பொழுதே பால் வெளி தன் செல்களை குவித்துக் கொள்கின்றன. பிரவேசிக்க முடியாத இடைவெளி என்று பொய்யான ரூபங்களை காட்டி ஏமாற்றி தள்ளிவிடுகிறது. இவையே அணுக்கள் என்று பல முறை ஏமாந்து தவத்தில் கீழே விழ நேருகின்றது. காலத்தை கடப்பதற்கே உடலின் செல்கள்  எல்லாம் முழு வீச்சில் உலாவி சோர்ந்து விழுந்து விடும் போல் சோர்வை உருவாக்கின்றன.
ஆற்றல் வெளியில் பிரேவசிக்க முழு பலத்தையும் பிரயோகிக்க வேண்டி வருமோ என்று மனம் பிரகஞ்சையில் மறைந்து கொள்கிறது.  பிரபஞ்சத்தின் முடிவின்மையை சந்திக்கின்ற பொழுது மனம் சந்தேகத்தை கிளற ஆரம்பித்து விடுகின்றன. இது உண்மையா அல்லது மனம் நமக்கு போக்கு காட்டுகின்றதா என்று அறிவு ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. இதனால் நேரம் ஒடிவிடுகின்றது.
மனித பிரபஞ்சையுடன் இருப்பது போலவே பயணம் மேலோங்கி சென்று கொண்டேயிருக்கிறது. ஆனால் மனம் செயலற்றதாகி தாங்க முடியாத பாரமாகிய பிரபஞ்சத்தின் சுமையை தன் மேல் சுமக்கின்றன. இந்த இருப்பை உடலால் உணர முடியாததா என்ற சந்தேகங்கள் வளர்ந்து வளர்ந்து நகர்கிறது
இயக்கமற்ற நிலையை வேதாத்திரி மகரிஷி இதை தான் சொன்னாரோ என்கிற சந்தேகங்கள் பல முறை தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன. உடலால் நுகர முடியாதைதை மனம் அறிவது மிக சிரமமே என்ற கோட்பாடு பொய்யாகி போனது. வெளிப்படுத்த முடியாத பிரகஞ்சையை மானுடப்பிரகஞ்சையால் உணர்ந்துக்கொள்ள முடிகின்ற பெரும் அவஸ்தையிது.
அகத்தை உணர வேண்டி தவத்தை கலைக்க எடுத்த முயற்சிகளெல்லாம் வீணே. தவம் பால்வெளியில் புகுந்து கொண்டால் அது தன் இஷ்டபடியே பயணிக்கிறது. முடிவில்லா பயணமாக ஆரம்பிக்கிறது.
இருப்பை வெளிக்கொண்டு வருவது உடல் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. பிரபஞ்சத்தின் மகா சக்திகள் உடலை இயக்க நிலையில் எப்பொழுதும் வைக்கின்றன. உடல் சார்ந்த சக்தியை இருக்க கூடிய இருப்பை துாக்கிச்செல்ல இயலாமல் போகின்றன. மனம் கத்திக் கொண்டேயிருக்கிறது. சூக்கும பயணத்தின் அதிர்வுகள் மனம் உணர்ந்துக்கொண்டு அண்டவெளியில் பிரவேசிக்கன்றன.
சித்தர்கள் இவ்வெளியில் மானுட பிரகஞ்சையோடு மனத்தை விரித்து துகள்களாக அண்ட சரசாரங்ளை கட்டியாளும் இந்த இயக்கமற்றநிலைகளில் மிக பிரமாண்டதான இந்த பிரபஞ்ச சக்திகளத்தினுள் எப்பொழுதும் உருவெடுத்துக்கொள்கிறார்கள். தங்கள் இஷ்டம் போல் பரந்து விரிந்து மறைந்துயிருக்கிறார்கள். பல சமயங்கிளில் அதை மனப்பிரமை என்று வேற்றுப்படுத்தி அறிதலே இருப்பு நிலைகளை கடக்க எளிதாகிறது
யோகி மயக்கநிலையை கடந்து கொண்டேயிருக்கிறான். பெரும் கஷ்டத்துடன் நடக்கின்ற செயல்கள் அவைகள். பால்வெளியில் நிகழ்கின்ற அனுபவங்கள் மனத்தை மயக்கமுற செய்கின்றன. இறைவனின் இருப்பை அறிந்துக்கொண்டவுடன் மீண்டும் மீண்டும் பயணிக்க முயற்சிக்கின்றன.

உச்சகட்டம் என்பதே இல்லை என்பதை மனம் உணர்ந்துக்கொண்டு சிரித்துக்கொள்கிறது. மனம் அடிவாங்கியதுப்போல் கூப்பாடு போட்டுக்கொண்டேயிருக்கின்றன. பெரும் தவிப்பை இது தினம் தினம் உருவாக்கிறது. எல்லையில்லா மானுட பிரகஞ்சையுடைய தவிப்பேயிது.

General
அகம் விரிவடையாதவர்களே அடுத்தவருடைய பல்லாண்டு உழைப்பை உரிந்தெடுப்பவர்கள். இவர்கள் ஆன்ம பலமற்றவர்கள். குருவின் பலமறியாதவர்கள் அவர்தம் பிரகஞ்சையில் வாழைாதவர்களும், ஆசிர்வாதம் பெற இயலாதவர்களும், குருவின் பால் முழுமையான அர்ப்பணமும் பக்தியும் பயமற்று இருப்பவர்களே, இத்தகைய பிரதியெடுப்பவர்கள். குருவால் எது உணர்ந்து சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவற்றை ஏற்று முழுமையாகக் கடைப்பிடிப்பதே தவத்தின் பாதையாகும்
என் உயிரை பரப்பி அதன் மேல் என் சொற்களை தடவி வைத்திருக்கிறேன். என் வார்த்தைகளை வேண்டுமானால் பிரதியெடுத்து தங்கள் பெயரை போட்டுக்கொள்ளலாம். ஆனால் உயிரை குருநாதறன்றி மற்றொருவர் திருடயிலாது. நாளடைவில் அது அதன்பால் கொண்டு சென்றுவிடும். களவுக்கு இயற்கையின் முன் பதில் கூற வேண்டிய நிலைகள்.
மனம் ஊனமுற்றவர்களே இத்தகைய செயல்களை செய்வர்.
எல்லாம் இறைசெயலே.

Readers are requested to give the genuine comment on other people’s blogs and face book which ever posts come across and noticed the posts were copied from my blogs.  
Some of the People whoever never touched the internal path of guru blessings can steal my words from the posts in my blogs. This quality discloses that they have not been blessed by the great masters and it exposes the absence of soul expansion internally and intuitionally. This enhances about them and how their guru taught as yoga as individual discipline.
It’s my own words in all my writings, but it has been written as empty words through my soul all over the posts. Anyone can write their name and depredate the words from my posts but it’s irresistible to grasp my soul on all the words in every post which I was spread over and blessed by the great masters. They may answer to the nature when it brings in front of them to the almighty which was hauling up from others accordingly.
People who have mentally handicapped in this material world can able to do these types of copy writings.

Its gods wish now. 

2 comments:

Unknown said...

Been reading this blog for some time, it was excellent and thank you very much and I am an eager person to read

spiritual and siththargal said...

its close to completion stage and some of the blogs and face book materials whoever copied from my writings makes me to slow down the posts.