தமிழ்நாட்டில் திருவள்ளுவர் திருத்தணி வெளிப்புற சாலையில் ஜெயராம சுவாமிகளின் சமாதி அமைந்துள்ளது. யோக சித்தியின் வெளிப்பாட்டை உணர்த்த வேண்டி அமையப் பெற்ற ஒரு நிகழ்வை பற்றிய சிறு பதிவிது.
ஜெயராம சுவாமிகளின் குரு அனுமந்ந சுவாமிகள். சமாதி சாலையில் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஜெயராம சுவாமிகளின் சமாதி அமைந்திருக்கிறது. ஜெயராம சுவாமிகள் 1917-ஆம் ஆண்டு சமாதியனாா். குரு அனுமந்த சுவாமிகளே தன் சீடர் ஜெயராம சுவாமிற்கு சமாதி வைபவம் நடத்திவைத்தாா். குருவின் கைகளால் சமாதி வைக்க பெற்ற பாக்கியத்தை சீடர் பெற்றாா் .
கடந்ந 15.08.2012- ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை(National High way) சாலையை விரிவுப்படுத்துவதற்காக(JCP) கொண்டு ஜெயராம சுவாமிகளின் சமாதி அமைய பெற்றிருந்த இடத்தை அகற்ற வேண்டிய சூழ்நிலை வந்தது. சமாதி பற்றிய விவரம் அறிந்த பெரியோர்கள் மற்றும் அதை வழிப்பட்டு வந்த பொதுமக்கள் சிலரும் காலை10மணி முதல் மாலை வரை, பொறுமையாக சுவாமிகளின் தேகத்தை (உடல்)தேடினா். இறுதியாக சுவாமிகளின் தேகம் கண்டுபிடிக்கப்பட்டது. சமாதி வைக்கப்பட்ட போது அவர் தேகம் எப்படியிருந்ததோ அதே நிலையிலேயே அவரை யோகமர்ந்த நிலையில் கண்டெடுத்தார்கள். அதிகாரிகள், ஊா் மக்கள் அனைவர் முன்னிலையில் சுவாமி தேகத்தை வெளியே கொண்டு வந்தார்கள் . 1917 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட இந்த சமாதி சுமாா் 95 ஆண்டுகள் ஆகியும் சுவாமிகளின் தேகம் யோக நிலையில் பத்மாசன போட்டப்படியே எந்த மாற்றமில்லாமல் இருந்திருக்கிறது. இந்த அதிசயத்தைக்கண்டு ஊா் மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பின்னர் அவர் தேகத்தை வெளியே கொண்டு வந்து ஊா்வலமாக எடுத்து சென்று, புதியதாக சமாதி வைபகம் வைப்பது போல் எல்லாவிதமான சடங்குகளை செய்யப் பெற்று எதிா்புறம் அமைந்துள்ள அவர் குரு அனுமந்த சுவாமிகளின் சமாதி சன்னதி அருகே இரவு 10: மணி அளவில் சமாதி வைக்கப்பட்டது. அன்று வெயில் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. சுவாமிகள் சமாதியில் இருந்து வெளிய வந்தவுடன் சுமாா் இரண்டு கி.மீ பரப்பளவு வரை மழை பெய்திருக்கிறது. ஆதாரபூா்மான இந்நிகழ்ச்சியை ஊா் மக்கள் கண்டனர்.
இப்பதிவு யோகத்தின் உச்சநிலை பற்றியும், மகான்கள் அடைந்த தரிசனத்தை யாவரும் அறிந்து கொள்ள வேண்டியும், அதன் உண்மை நிலைகளை உணர வேண்டி இங்கே பதிவிட்டது, சரியான யோக பயிற்சியை தேர்ந்தெடுத்து , தமிழ் நாட்டில் பல்லாயிர வருடம் பின்பற்றி வருகின்ற இத்தகைய எளிய முறை யோகப்பியாசமே சிறந்தது என்பதை அறிந்து , அதை பின்பற்றி மேன்மையடைவீர்களாக. புகைப்படம் கிடைக்கவில்லை. வந்தவுடன் இதனுடன் இணைக்கிறேன். திருவள்ளூா்−திருத்தணி (பை பாஸ்) சாலையில் ஆற்காடுகுப்பம் என்ற ஊரில் மெயின் ரோட்டில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது.
2 comments:
om NAMASIVAYA SIVA SIVA SIVAYANAMA
வாழ்க வளமுடன்🙂🙏
Post a Comment