Saturday, August 5, 2023

சூக்குமம் 1

 நேரெதிர்  பால்கனியில் வசித்து வரும் வயதான பெண்மணி அங்கிருந்து என்னை கூப்பிட்டு ஊரிலிருந்து எப்ப வந்தீங்கன்னு கேட்டார்......

போன வாரம் தான் வந்தேன் என்றேன்.

காட்டிற்கு வேலைக்கு செல்லும் சமயங்களில்  ஆறு மாதங்கள் முழுவதும்  என் வீடு பூட்டியே கிடக்கும்..... விளக்கு எரிந்திருந்தால் மட்டுமே நான் வீட்டிற்கு வந்து இருப்பதாக யூகித்து .... பைக்கில் அமர்ந்தவண்ணம் கீழேயிருந்து மேலே பார்த்து விட்டு பால்காரர்  கூட பால் கொண்டு வந்து ஊத்தி விட்டு செல்வார். குப்பை கூட்டுகிறவர்கள் கூட ஒரு எட்டு முதல் மாடியில் வசிக்கும் என் வீட்டிற்கு வந்து விட்டு போவார்கள். நேத்து யார் அது புதுசாக சமைத்துக் கொண்டிருந்தது ..... என்று கேட்டார் 

 நண்பன்  கமிஷனராக டிரான்ஸ்பரில் இங்கு வந்து சேர்ந்திருக்கிறான்...... என்றேன்....

முன்னாடி கூட ரெண்டு பேர் உங்க கூடவே எப்போதும் இருப்பார்களே .....பல தடவை அவர்களைப் பார்த்து கையசைத் திருக்கிறேன்..... நீங்கள் குக் பண்ணும்போது ....எப்போதும் கிட்சனில் அவர்கள் பேசி சிரித்துக் கொண்டே இருப்பார்களே..... சில சமயங்களில்  சமையல் நீங்கள் செய்யும் போது உங்களைப் பார்த்து கிண்டலடித்து  சிரிப்பார்களே .... உங்கள் நெருங்கிய நண்பர்கள்..... இப்ப  அவர்கள் காணலையே .....ஏன் வரவில்லை .... எங்கே போனார்கள் ...... நடந்துக் கொண்டும் பேசிக் கொண்டும் பக்கத்து ரூமில் பல நேரங்களில்  உட்கார்ந்து இருப்பார்கள்... பால்கனிக்கு வரும் போதெல்லாம் என்னைப் பார்த்து சிரிப்பார்கள்......கை அசைப்பார்கள்.... நான் பேசினால் அவர்களுக்கு கேட்காது .... சைகை செய்வார்கள் ...

ஊரிலிருந்து திடீரென்று அவர்கள் வந்துப் போவார்கள்.... என்றேன் .....ஒரு சமயம் நீங்கள் விளக்கேற்றும் போது.... அவர்கள்  வேடிக்கையாக சிரித்த வண்ணம் தீயை ஊதி ஊதி அணைப்பார்கள்..... நீங்கள் பொறுமையாய் திரியை மீண்டும் தள்ளி  ஏற்றுவீர்கள்...... அவர்கள் பாத்திரத்தை தள்ளி விடுவதை கூட நீங்கள் ஏன் கண்டும் காணாமல்  இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை....? நேரில் பார்த்தால் சொல்லலாம் என்று இருந்தேன் .... அகப்படவேயில்லை. ....உங்கள் பக்கத்தில் வந்து இருபக்கமும் நின்று கொண்டு அவர்களிருவரும் நீங்கள்  சமைப்பதை வேடிக்கைப் பார்த்த வண்ணம் பேசிக் கொண்டிருப்பார்கள் .......நடுநடுவே கடைசி ரூமில் உள்ள பெட்டிகள் மேல் அமர்ந்து பேசிக் கொண்டு கையை வீசிய வண்ணம் எதோ பெரிய விவாதம் செய்வதை   பார்த்திருக்கிறேன்.....நீங்கள் விளக்கேற்றும் போது மட்டும் இருவரும் சிறுபிள்ளையாட்டம் அதன் அருகே நெருங்கி வந்து குனிந்துப் பார்ப்பார்கள் ..... நீங்கள்  கண்டு கொள்வதில்லையே ஏன் ?

எனக்குத் தெரிந்தால் தானே நான் கண்டுக் கொள்வதற்கு ...... சனி ஞாயிறு தினங்களில் பகல் நேரத்தில் கடைசி ரூமிலிருந்து யாரோ எட்டிப் பார்ப்பதுப் போல தெரியும். .... தெரியுது நல்லா தெரியுது .....நடத்துங்க ..... சந்தோசமாய் இருங்கள் என்று சொல்வேன்..... பல சமயம் இரவில் இருளில் அவர்கள்  நகர்ந்து செல்வதை கண்டும் காணாமல் போய்விடுவேன் ... எதோ அவர்கள் .வேலையை கவனமாக பார்ப்பது போல , பிஸியாக இருப்பதுப் போன்றே பல காலங்களில் பார்த்ததுண்டு .... எதோ முக்கிய வேலை செய்வார்கள் போல என்று நினைப்பதுண்டு..... அப்படி என்ன பிஸி இவர்களுக்கு .... மாற்றலாகி வந்து ஆரம்ப காலங்களில் இந்த வீட்டில தூங்கும் போது என் மேல்  பெண் ஒருவர் படுத்திருப்பதுப் போல உணர்ந்து விழித்துப் பார்ப்பேன்......கண்களைத் திறக்காமல் அவரை  தள்ளி விட்டதுண்டு.....  ஒத்தைல நான் இருப்பதால் கூட இப்படி  நடக்கலாம்..... அல்லது அவர்கள் இருக்கும் இடத்தில் நான் வந்து சேர்ந்திருக்கலாம்.... சிறு குழந்தையொன்று தன் கால்களைக்  குறுக்கி என் அருகில் படுத்திருந்ததை ஒரு முறை கண்டு திகைத்து விட்டேன்.... நான் உறங்கும் போது அவர்கள் உறங்குமிடத்திற்கு செல்கிறேனா .....ஒரு சிறு குழந்தை தாய் என்று வரிசையாக படுத்திருக்கிறார்கள்.... யாரிவர்கள்? .... எதற்காக இங்கு நான் தங்கியிருக்கும் இடத்தில்  குடி இருக்கிறார்கள்? என்னைப் போல இவர்களும் வேலைக்குப் போவார்களா? ...பைக் ஓட்டுவார்களா? சாப்பிடு முன் என் சாப்பாடு தட்டில் முதல் உருண்டையை  எப்போதும் அதற்காக வைப்பேன்.... யாராக இருந்தாலும் தட்டில் இருந்து  எடுத்து தின்று விட்டு போவார்களா? சண்டே அன்னைக்கு கறி குழம்பு சாப்பிடும்போது கூட கறி துண்டுடன் சோறுருண்டை தட்டில் வைப்பதை தின் பார்களாஅவர்கள் அசைவம் உண்பர்களா? இந்த உலகத்தில் அவர்கள் வேலை என்னஎன்னதான்  செய்து கொண்டு இருக்கிறார்கள்...... நான் பார்ப்பதுப் போல அவர்களும் என்னைப் பார்ப்பார்களா ? எதாவது செய்தி பரிமாற முயன்றுக் கொண்டே இருக்கிறார்களா? தவம் இயற்றும் எல்லார்க்கும் இதை கைகூடி வரப்பெற்றவர்களா... கட்டிலின் கீழே என் கால்களுக்கு அருகில் உருவம் ஒன்று அமர்ந்திருப்பது போன்று காட்சி இப்போது உண்டானது..... இந்த இயக்கம் எதை நடத்துகிறது..... இயக்கமற்ற ஆற்றலில் நான் தூக்கத்தில் இருக்கிறேனா என்று பல சமயங்களில் சந்தேகம் ஏற்பட்டதுண்டு.....

மாலை அலுவலகத்திலிருந்து வீடு வந்தவுடன் குளித்து விட்டு வந்து குடிக்க டீ  போடுவேன்..... என் வசதிக்காக பாத்திரங்கள் வைக்கும் தளத்திலேயே மனைவி கொடுத்துனுப்பிய சிறிய விளக்கொன்றை வைத்து தீபம் ஏற்றி வந்தேன்  .....அப்படியே லுங்கியை வரிந்து மடித்து கட்டிக் கொண்டு விளக்கேத்தி வைத்து கும்பிட்டுக் கொள்வேன்...... இருளும் கருப்பும் விளக்கேற்றினால் தங்காது என்று பெரியவர் சொல்லியிருந்தார்..... இப்படி தான் இறைவனைக் கும்பிட வேண்டும் என்ற முறையெல்லாம் பின்பற்றுவதில்லை..... பல பொங்கல் தினங்களில் குளிக்காமல் லுங்கியுடனே மகன்  மகளுக்கு திருநீர் இட்டிருக்கிறேன் .....

 வெளியில் இருந்து பார்க்கும் இந்த பெண்மணி கண்களுக்கு  எல்லாம் தெரிந்திருக்கிறது.....எனக்கு இன்னும் அவர் வகையான வயது ஆகவில்லை .... இதெல்லாம் எனக்கு எந்தவொரு பயமும் பதட்டமும் ஏற்பட்ட தில்லை .... பசியும், துயரத்தின் உச்சியில் இருந்து வந்தவனுக்கு பயம் எப்படி ஏற்பட்டு விட முடியும்.... அப்படியே வந்தாலும் அவர்களை கட்டியணைத்துக் கொள்வேன்..... என்னைப் பார்த்து அவர்கள் திகைத்துப் போகலாம்..... பல ஆண்டுகள் காடுகளில் மலைகளில் ஒத்தையில்  சுற்றியலைந்த வண்ணமே இருந்ததால் பல கருப்புக்கள் என்னிடம் நட்பு பாராட்டலாம்..... கிராமங்களில் குடியிருக்க கிடைத்த வீடுகள் பொதுவாக கொலைகள் /தற்கொலை செய்த வீடுகளில் தான் பொதுவாக கிடைத்தும் அதில் தங்கியிருந்து வந்தேன்..... கடவுள்கள் மனிதர்கள் மேலேறி வரும் போது சிறிய குழந்தையைப் போன்று   இருப்பார்கள் .....பாவனை கூட சிறிய பிள்ளைகள் போன்று உருவத்தில் காணப்படும் ... அவர்கள் சாமியேறிய பாவனை பெறும் போது அருகில் சென்று  உரையாடி சரியான பதில் பெற்றதுண்டு ..... நான் சாமிநான் சாமி ..... நீ என்னிடம் அப்படி கேட்காதே என்று சொன்ன பெரிய  சாமியாடிகள் திளைந்திருக்கும் போது சொன்னதுண்டு..... நமக்கு வாக்குக் கொடுத்தால் எந்த காலத்திலும் அழிப்படாமல் ஜெகத்தில் வியாபித்து அதைக் காப்பாற்றி கொண்டே வந்த பேயும் கடவுளும் சொன்னது சொன்னபடி நிற்கும் ....

 

2 comments:

Vethathiri Maharishi - Anuradha Selvakumar said...

வாழ்க வளமுடன்

Vedha said...

Subtle -1b
When I come home from the office in the evening, I take a bath and make tea for my convenience. The elder had said that the blackness will not stay even if you light the lamp..... This is how we don't follow the method of bowing to the Lord..... On many Pongal days, I have bathed my son and daughter without taking a bath.....
The eyes of this woman who looks from outside knows everything.....I am not yet of her age....I have never felt any fear or anxiety....Hunger, how can one who comes from the height of misery have fear....just like that. I will embrace them even if they come like that…..they may be shocked to see me…..many blacks may be friendly with me because of years of wandering in the jungles and mountains….houses found in villages are usually houses where murders/suicides have taken place. I stayed in it when I got it….Gods are like little children when men come up….even the sinners are seen in the form of little children…when they get the habit of preaching, I went near them and conversed with them and got the right answer…..I Sami, I am Sami ..... You told me not to ask you like that when the big Samiyadis were soaked..... If you promise us that it will not be destroyed at any time and what the devil and God who have been spreading in the world and protecting it will stand as they said ....