மாயாவி
காலை 3.15 மணிக்கு சலங்கை ஒலி கேட்டு விழித்துக் கொண்டான்..... படுக்கையில் படுத்துக் கொண்டே கண் விழித்துப் பார்த்தான். சலங்கை ஒலி தூரமிருந்து நடந்து அவன் அருகில் வரை வந்து நின்று மீண்டும் திரும்பி தூரம் சென்றது.....வருவதும் போவதுமாய் இருந்தது....ஒரிரு நாட்களாக சலங்கை ஒலி சத்தம் கேட்டு கொண்டிருந்தது......அவன் கவனிக்காமல் அதை விட்டு விட்டான்....எழுந்தமர்ந்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.....காதை கூர்மையாக்கி இங்கே அங்கே கேட்க முயற்ச்சித்தான்......வெளியிலிருந்து வந்த விளக்கு வெளிச்சம் வீட்டின் ஹாலில் கிச்சன் வரை வெளிச்சமாக பரவியிருந்தது... ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .... மாய உலகமிது ......மாயத்தின் உச்சமல்லவா இது.... சொரூபங்கள் மாயத்தை உருவாக்குகின்றன.. அருவமான பரம்பொருள் உருவ வடிவம்கொண்டு வெளியேறி வருவதேன்.என்று யோசித்தான்....மொபைலை எடுத்து நேரத்தைப் பார்த்து......காலை வணக்கம் என்று மெஸேஜ் அனுப்பினான்.... கட்டிலில் அமர்ந்து கண்மூடி காதை திருப்பிக் கொண்டு ஒலி வரும் திசை நோக்கி கவனம் கொண்டான்... பிறகு கேட்கவேயில்லை...தவம் தொடங்கியதுமே சலங்கை ஒலி நடந்து பக்கத்தில் வந்து மீண்டும் திரும்பி சென்றது. ஒரிருமுறை பின்னர் அதன் சத்தம் நின்றுப் போனது......பிரக்ஞையில் ஏன் அது மறைகிறது என்று தெரியவில்லை..... பேரனுபவத்தை முழுமையாக மறுதலித்து ஒளி இழந்து சிதறுகிறது என்று நினைக்கிறான் ....
இவன் ஒரு பொறுக்கி .....தன்னை இயற்கையின் பருப்பொருளில் தன்னை அசையாமல் கிடத்தி கொண்டதாக நினைத்து கொள்பவன் ....அன்பே , டியர் அத்தான், டார்லிங் என்று கூப்பிட சொல்வான்.....அவனை நம்ப கூடாது.... அவன் தாடி மயிருடன் அசிங்கமாய் திரிபவன்.அவனுக்கு தெரியும் எந்த பெண்ணுக்கும் பிடித்த எதும் தன் தாடி மயிரில் இல்லை என்பது .. இருந்தாலும் காதல் மொழிகளைப் பேசிக் கொண்டே இருப்பான்..... ,பெண்கள் அவனை முட்டாள் என்று நினைத்து ஏமாற்றி யபடியே பேசுவார்கள் .....சில நேரம் இரவு முழுக்க விடிய விடிய கூட பேசிக் கொண்டிருப்பான்.....விடிய விடிய மெஸேஜ் செய்து தொடர்ந்து வருவான் .....அவர்களை பருப்பொருளில் வைத்து சாரமெல்லாம் தேடுவான்...அவனை ஏமாற்றுவதாக பல பெண்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் காலத்தில் தீயவர்களை நகர்த்தி கொண்டு போய் அறியா குழியில் தள்ளி விடுவான்...
இவன் ஏகாந்தமாக இருப்பவன்... தன்னுள் அடங்கி இருப்பவனின் கட்டுபாட்டில் இருப்பதால் பயப்படுவான் ... அவனை யாரும் நம்ப கூடாது....நல்ல நாளில் கூட பல் விளக்காமல் வீட்டில் பூசை செய்யுமிடத்தில் லுங்கி கட்டிக் கொண்டு திருநீர் எடுத்து மகளுக்கு பூசும் போது ஒளி கிளம்பி கையெல்லாம் பரவி மறைதலை உடல் அதிர நின்று பக்கத்தில் பார்ப்பான்.....வலது பக்கத்தில் தெய்வம் நின்றிருக்கும் .தெய்வங்களைப் பார்த்து சிரிப்பதை வழக்கமாகி கொண்டிருந்தான் .தெய்வ ஒளி இவன் முகத்தில் துப்பி விட்டது.....
"மணி புறா பால்கனியில் வந்து நின்று கொண்டு இவனைப் பார்த்தது......ஆல கால விஷத்தை குடித்தும் உயிரோடு நின்றிருப்பது இயற்கை ஒரு பெரும் மாயையில் .... நானும் புறாவும் ஒன்றாக நின்றிருந்தோம்..... மாயையின் விஷத்தை நானும் அருந்திவிட்டு நிற்பதை மோப்பம் பிடித்தாயோ .... ஓடிப் போ .....உன் மாய சிறகை நான் அறிவேன்......என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று வாய்விட்டு சிரித்தான்......சூட்சுமம் வழியாக மீண்டும் மீண்டும் நமது பிரக்ஞை ஓடிக்கொண்டே இருந்தது..... மேல் வீட்டு பால்கனியில் இருந்து மலரொன்று தினம் ஒன்றாக அவன் பால்கனியில் விழுகின்றது....ஒத்த மலரொன்று பால்கனியில் விழுந்துக் கிடப்பதை தினம் பார்க்கிறான்...... அதை எடுத்து விளக்கருகில் வைப்பான் ...படைத்தவனும் நீயே ..... விழ வைத்தவனும் நீயே... விஷப் பூவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்.....என்று கடவுள் தலையிலேயே கட்டி விடுவான்.....
விபரமறிந்த பெண்கள், குறி சொல்லும் பெண், தன்னை போகியாக பாவித்து பிதற்றும் பெண், சாமியாடி என்று பலர் இவனிடமிருந்து சக்தியால் கடந்துவிடலாம் என்று இவனை பின் தொடர்ந்து வந்தவண்ணமே இருந்து இவன் மாய வலை விரிப்பதை அறியாமல் மாய குழியில் விழுந்து விடுவார்கள்....அந்த மாய வலை இவன் இரக்கப்பட்டு எடுத்தாலொளிய யாராலும் விடுவிக்க இயலாது..... உருவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட வடிவமாக, நினைப்புக்கு எட்டாத எல்லையற்ற பரம்பொருளாக உருவெடுத்து நிற்பதை பார்த்து கொண்டே வருகிறான்.... அவர்களுடைய மன வலியை பார்க்க தெரிந்தவனாதலால் எல்லார் , நோக்கத்தையும் அறிந்து உன் பாவத்தை நீயே கழித்துககொள் என்று தள்ளி வைத்து விடுவான்... தாங்கள் சக்தி படைத்தவர்கள், குறி சொல்பவர்கள் , சாமி தங்கள் அகராதியில் இருப்பதாக நினைத்து கொண்டு இவனை ஏமாற்ற முயற்ச்சித்தார்கள் பலர் .... அவர்களை ஏளனமாகப் பார்ப்பான்..... இவன் அறிந்த நிலையில் நின்று இருபது வருடமாக ஆற்றிய அப்பியாசம் ..... தோற்றுவித்த மாய உலகை அப்படியே மாயாவியாக பார்ப்பவனை போய் சாமியாடிகள் தற்பெருமை கொண்டவர்களை அவர்கள் வழியலேயே சென்று எழ முடியாத குழியில் அவன் தள்ளியிருப்பதை கூட அறியாமல் இருப்பவர்களே பலருண்டு...... அவனை பின்பற்றி பணிந்தவர் தன்னை விட மேலான நிலையில் வைத்து பார்த்து அவர்களை மரியாதைக்குள் வைத்திருப்பான்.. கோயில் அருகே பைக்கில் கடக்கும் போது அதன் ஒளி வீதியெல்லாம் பரவி கிடப்பதை உணர்ந்து . கடந்து செல்வான் ..... உன்னை காண்கிறேன் தெய்வமே ..... விலகி நில் என்று பைக்கில் கடந்து செல்வான்.........ஒரு நாளில் அந்த ஒளியால் சிதறி கிடக்கும் சாலையில் நிற்கும் போது ஒரு ஆண் அவனருகில் வந்து அவனைப் பார்த்து உன் உயிரை இரண்டு முறை காப்பாற்றி இருக்கிறேன் என்று சொன்னவுடன் .. அதிர்ந்து ....எங்கே என்று கேட்டவன்... பதில் சரியாக சொல்லியவுடன்... ... அவன் பைக்கை விட்டிறங்கி அவரை
தலை வணங்கி கும்பிட்டு வணங்கினான். அந்த ஆள் ரோட்டை கடந்து திரும்பியே பார்க்கவில்லை
அவன் அம்மா தலைவிரி கோலமாய் சேலை கலைந்த நிலையில் கனவில் கண்டான்......தலத்திற்குள் தன் தாயை நிலை நிறுத்திக் கொண்டு.... வீட்டிற்குள் வந்த உருவத்தை தினம் தேடி தேடி கண்டடைய முயன்றான். ..... தினம் தினம் பருவெளியில் தேடி கொண்டே இருந்தான்.....யாரையும் அவன் நம்ப மாட்டான்.... கண்களால் காணாததை உண்மை என்று ஏற்க மாட்டாரன்.....
கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்க்காமல் பல வருடமாக இருப்பவன்.....உருவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பிரம்ம வடிவமாக, நினைப்புக்கு எட்டாத எல்லையற்ற பரம்பொருளாக உரு எடுப்பதை கண்டவனாக அதை இரகசியமாகவே வைத்திருப்பான்...
பெண்ணொருத்தி கழிவறையில் நின்று அழுவதை காண்கிறான்.. நினைவு கலையப்பட்டு ரோட்டில் நின்று கொண்டே அதை தொடர்ந்து காண்கிறான்..... ஒளி சிதறலால் தன் இடத்தின் சூரிய ஒளியை எடுத்துக் கொண்டு போய் அதற்கு ஒப்பான சூரிய ஒளி பரவும் இடத்தில் நின்று கொண்டு காணும் காட்சியின் இடத்திற்கு செல்ல முயற்சிக்கிறான். சிறுநீர் கழிக்க முடியாமல் கதவில் சாய்ந்து அழும் பெண்ணை அங்கே ரூபத்தில் கண்டான்.... அந்த உருவம் போல பல உருவங்கள் அவனுக்கு ஒற்றிருந்தன... அடிக்கடி கண்ணீர் விட்டு அழுவதும் மறைவதுமாக அந்த உருவங்கள் இருந்தன....
ஏன் எனக்கு கொண்டு காட்டுகிறாய் மாயையே .... அறுத்தெறிந்து அறுத்தெறிந்த வந்தவனாயிற்றே அவன். வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அகன்றிடுவான்.....
தான் தவத்தின் இறுதி கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக சில மாதங்களுக்குள் யூகித்து விட்டிருந்தான்...
நின்று கொண்டே சிறு நீர் கழிக்கும் அந்த பெண்ணை பரவெளி எங்கும் சல்லடைப் போட்டு தேடுகிறான்... கிடைத்த பாடில்லை தேவையற்றவையை அவன் எப்போதும் தேடுவதில்லை ...... ஜெகத்தில் வியாபித்திற்கும் அந்த ஒளி மாயை கொண்டு இவனை இழுத்து சென்றது...... தானாக இவன் எதற்கும் செல்வதில்லை ..... தவத்தால் மாயையை தடுத்து நிறுத்தி தனக்குள் வைக்க முயற்சித்து வெற்றி பெற்றான்......
குளித்துக் கொண்டிருக்கும் போது உணர்வெழுச்சி ஏற்பட்டு விரிந்த காட்சியில் அந்த பெண் அழும் காட்சி ஒளி விடுவதும் சிதறுவதும் அடுத்து அடுத்து தோன்றுவதும் மறைவதுமாகிறது......
அவனுள் இருந்து அந்த யோகி கண்ணீர் விட ....ஈரம் சொட்ட துண்டணிந்து கழிவறை விட்டு வெளியே வந்து அங்கேயே நின்றான்..... பொறுக்கி தன் முன் அமர்ந்திருப்பதை கண்டு அமைதி கொள் என்றான்......இவன் பிரம்மத்தை கண்டவன் ..... கைகளில் கொடுத்து ஏந்தி பார்க்க சொல்லி அறிந்தவன்...... பரம்பொருளில் நிற்பவன் தீயாய் ஒளி பிளம்பாய் வெளிவராமல் காத்திருப்பான்..... கருணையே உருவானவன்....அவன் வந்துவிட்டால் அந்த விஷயம் முடிவிற்கு வந்து விடும்..... அல்லது முடிவு பெற்றதாகி விடும்.... அவனை
யாரென்று தெரியாமல் அதே பெண்கள் அவனை ஏமாற்ற முயன்று தோற்றும் போனார்கள்... அவன் ஒளியாய் மாறி திரிந்தான் .பலர் அவனால் வாழ்க்கையை திரும்ப பெற்றவர் உண்டு.....
தன் குருவை மட்டுமே வணங்குபவன்....ஜெகத்தில் அசையாமல் இரு என்று குரு அவனை கண்டிப்பார்..... யார்க்கும் உதவாதே என்பார் ....அவனிடம். அறிவது அறியாதிருப்பது இரண்டும் ஒன்றாக ஒடுங்கி குருவின் முன் மண்டியிட்டு வணங்கினான்...... இறுதிவரை வாக்கை காப்பேன் என்றான்...அவன் .மாய சித்திகள் .குரு வீட்டின் வாசலில் நின்றிருந்தது
கண்விழித்துக் கொண்டே பகல் முழுவதும் தூங்கிக் கொண்டே இருக்க ஆரம்பித்தான்......இந்த பெருந்தூக்கம் எங்கிருந்து வந்து தன்னை ஆட்கொண்டது என்று தெரியவில்லை....
இவன் அலுவலகத்திற்கே தெய்வம் ஒன்று வந்து இவனிடம் பேசியது ஆச்சரியப்படுத்தியது..... தெய்வம் ஒருவர் மேல் ஏறி நின்று பேசியது...... தன்னைப் பார்க்காதே என்று கண்கள் சொக்க நின்றிருந்தது.... தன் முன் நிற்பது தெய்வமல்லவா தெய்வமாயிருந்து மனிதர் மேல் ஏறி வருபோது எப்படி குழந்தை போல ஆகுகிறார்கள் என்று நினைத்து அதன் கண்களை ஊடுருவி பார்த்தான்....
தெய்வம் இவன் வட்டத்திற்குள் வந்திருக்க கூடும் ....அதன் ஒளி எங்கும் பரவி பரம் பொருளான வனை வெளியே நிறுத்தி கண்களுடே பார்த்தான்...அருவமான பரம்பொருள் உருவ வடிவம்கொண்டு வருவதன் ஒளி அகன்று மெதுவாக தவழ்ந்து செல்வதை பார்த்துக் கொண்டிருந்தான்.....இப்போது ஆராய்ச்சியாளன் அங்கு இல்லை .....அவனிருந்தால் தன்முனைப்புடன் கேள்விகள் கேட்பான்.....வீடு வந்து காலணி கழட்டிக் கொண்டிருக்கும் போது கண்ணீர் வழிந்தது .....மாய ரூபம் ஆராய்ச்சியாளன் முன்னர் உட்கார்ந்திருந்தது......உடல் சில்லிட்டு போனான்.
குளித்து முடித்து தவம் செய்ய வருவேன் ..... போய்விடு என்றான்.... போய் ஒளியில் சேர்ந்துக் கொள் என்றான்......பரம்பொருள் சென்று விட்டது.
அவன் உண்மையை வேறு உலகிற்கு எடுத்துச் சென்று பொய்யைப் போல விவரிப்பான்.... அவனை நம்ப கூடாது ..... மாய குழியில் தள்ளி விடுவான்.....நடந்ததை வேறிடத்தில் நடந்துக் கொண்டிருப்பதுப் போல சொல்வான் ..... ஆராய்பவனும் தேடுபவனும் ஒரே ரூபத்தில் ஒன்றாகவே சென்றுக் கொண்டிருப்பார்கள்.....என்றுமே. மாய சித்திகளை பயன் படுத்த மாட்டான் அவன்... அதை ஆராய்ந்து அதை பிடித்து மூலம் நோக்கி நகர பார்க்கிறான்.....உருவம். இல்லாதது அருவமாக உள்ளவை எல்லாமே தாமே..... நான் இல்லை என்கிறான்
அவனுக் கெதிராக இருந்தோரை எல்லாம் உலகம் காவு கொண்டது ...... அவனுக்கு கொடும் செயல் புரிந்தவர் மண்டை பிளந்து இறந்ததை அவன் கண்டான்..... யாரையும் சபிக்க மாட்டான்..... உலகம் அதன் பால் வந்ததில்லை ..... இந்த உலகத்தில் அவனும் விரிந்து வியாபிக்க செய்திருந்தான்......மனவெளியில் அமைந்திருந்த உலகில் இவன் ஒற்றை பேரிருப்பில் இருந்து வந்தவனை லூசு என்று சிலர் கூப்பிட்டதை கேட்டு சிரித்த வண்ணமே இருந்தான்.....
உளக்குறீயீட்டில்
இருந்து அமுது கொண்டிருந்த பெண்ணை தேடி தேடி எடுத்து பார்க்க முயற்சித்தான்......பருவெளி மனிதர்களில் தேடி கொண்டே வந்தான்......ரூபங்களில் எனக்குக் காட்டுமாறு சொன்னான்
பெண்மணிக்கு இரண்டு முட்டிகளும் உடைந்து குப்பற விழுந்து மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்திருக்கிறார்கள் என்றார்கள் ......நடக்க இன்னும் ஒரு வருடம் ஆகுமாம்...... அவனுக்கு இரக்கமேயில்லை..... நடுவில் பருவெளியில் நடுவில் நிற்பவனுக்கு ஏதும் சொந்தமில்லை .... சோகங்கள் அவனை சேரவேயில்லை.....மனம் ஓயாமல் ஒருவாரம் பேசி கொண்டேயிருந்தது .....நிறுத்து என்றால் உள்ளிருப்பவன் வந்து விட்டால் தர்மத்தின் நியாயம் பக்கமே நிற்பான்....
நட்சத்திரம் ராசி இவையெல்லாம் பருவெளியில் வேலை செய்வதில்லை..... காலத்தில் முழுவதுமாய் நிற்கிறான் போலும் ...ஒன்றிருக்கு ஒன்றில் மாறி மாறி போகிறான்..... காலத்தை கடந்து காலத்திலேயே பல இடங்களில் உரு கொள்கிறான்... மாயாவி அவன்.. "எதுவுமே என்னுடையதல்ல இவற்றில் எதுவுமே நானல்ல... இவற்றில் எதுவுமே என்னுடையது அல்ல என்பான்.....மாயாவி
3 comments:
வாழ்க வளமுடன்
Illusionist - 1
At 3.15 in the morning, he woke up to the sound of a thump..... He woke up while lying on the bed. The salangai sound walked from a distance and came close to him and then came back and went far away….it kept coming and going….Salangai had been listening to the sound for a couple of days….he ignored it and left it….it got up and walked around. He looked completely…..He sharpened his ears and tried to hear here and there…..the light of the lamp from outside was spreading like light in the hall of the house till the kitchen….be careful….with the world of magic……isn’t this the height of magic? .... Forms create magic.. Intangible material is coming out in form. He thought.... took the mobile and checked the time. He focused on... Then he didn't listen... As soon as the penance began, the salanga sound came to the side and went back again. After a couple of times its sound stopped……Prajna doesn't know why it disappears….He thinks that the experience is completely negated and the light is lost and dissipated….
He is a prude.....who thinks himself immovable in nature's theme....calls him dear, dear Athan, darling....do not trust him....he is an ugly man with a beard and hair... ..he knows that there is nothing in his beard that any woman likes.....yet he keeps talking love languages..... ,girls fool him into thinking that he is a fool and talk like that.....even at night and dawn. He keeps on talking…..he keeps on sending messages at dawn…..he keeps them in focus and looks for the essence….he moves the bad guys and throws them in the pit of ignorance at a time when many women think that they are cheating on him….
He is a solitary person... He is afraid because he is under the control of the one who is contained within him... No one should trust him... Even on a good day, he would not brush his teeth at the place of worship at home, tie him up and take holy water and anoint his daughter, and when the light comes out, his hands spread and his body trembles, he stands by the side and watches. ....the deity is standing on the right side.......He used to laugh at the deities.The divine light spat on his face.....
"Mani Pigeon came to the balcony and saw him... standing alive drinking the poison of the plant in a great illusion of nature... Me and the pigeon were standing together... I smelled the poison of the illusion and stood there... ran away. Go …..I know your magic wing…..He laughed with his mouth that he could not do anything to me…..through Sutsuma again and again our prajna kept running…..from the balcony of the upper house one flower one day at a time It falls on his balcony....Every day he sees a similar flower falling on the balcony......he picks it up and puts it near the lamp...you are the creator.....and you are the one who made it fall...even if it is a poisonous flower, accept it..... God will tie that on his head.....
Illusionist - 3
The yogi shed tears from inside him....he came out of the washroom in wet clothes and stood there.....he saw the patient sitting in front of him and said to calm down....
He is the one who has seen the Brahman..... He has given it in his hands and known it... He is the one who stands in the Supreme
He will wait for the fire and light to come out.....
If he comes then the matter will come to an end…..or will be concluded….to him
Without knowing who the same girls tried to deceive him and lost... He turned into a light and wandered...
Many have had their lives restored by him….
He who worships only his Guru....the Guru will reprimand him saying that he should not move in the world.....don't help anyone....to him
Knowing and not knowing both came together and knelt down before the Guru... He said that he will keep his word till the end... He was standing at the door of the Guru's house.
He started to wake up and sleep throughout the day.
I don't know where this sleepiness came from.
He was surprised when a deity came to his office and spoke to him.....the deity stood on top of him and spoke...... his eyes were closed saying that he should not look at him....isn't it a deity standing in front of him? He looked into its eyes.
The god may have come into this circle...its light spread everywhere and he stood out and looked with his eyes at the transcendental forest...the intangible transcendental taking shape
He was watching the light slowly creeping away…..the researcher was not there now…..if he was there he would have asked questions arrogantly…..when he came to the house and took off his shoes, tears flowed….the mystical figure was sitting before the researcher.. ....He got chills.
I will come to do penance after taking a bath.... he said go.... go and join the light.... he said.
The Supreme is gone.
He will take the truth to another world and describe it as a lie….don’t believe him…..he will throw him into the pit of magic…..he will tell what happened as if it happened somewhere else…. ...ever
He doesn't use magic siddhis... He examines it and grabs it and tries to move through it.....image. He says that the non-existent is all that is immaterial…..I am not
All those who were against him were protected by the world.... He saw the one who had done such a cruel thing to him and died with a split skull..... He would not curse anyone.... The world had never come from it.... In this world he had expanded and spread. ……
In the world located in the mental space, he was laughing when he heard that some people called the person who came from a single residence as Lusu.....
He tried to look for the woman who was intoxicated from Ulakureet...
He kept searching among the people of the desert... He asked them to show me in forms
They said that the lady had broken both knees and had been treated in the hospital ....... It will take another year to walk...... She will not die yet.. He said... He has no mercy..... He who stands in the middle of the desert does not own anything. ...sadness never joins him.....
My mind was talking non-stop for a week.
Nakshatra Rasi does not work in space..... He seems to be standing in time... He is changing from one to another..... He is passing through time and forming in many places in time... He is illusory.. "Nothing is mine, none of these is me. .None of these are mine.....Illusionist
Post a Comment