இன்று குருவின் சமாதியை பார்த்து வந்தேன்.....உங்கள் இஷ்டப்படியே அங்கே சமாதி அமைந்துவிட்டது.
கார் வாங்கிவிட்டேன் என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். கேட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை. நீங்கள் எனக்குச் சொன்னதெல்லாம் என் வாழ்வில் பிசகாமல் நடந்தது. இனியும் நடக்கப் போகிறது.
யோகப் பயிற்சியை வெளிக்காட்டாமல் இருப்பதற்கே நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். அதுதான் வித்தையின் வலிமை.
நீங்கள் சமாதி அடைந்த பிறகு, என்னைச் சூழ்ந்திருந்த மாயை மேகம் போல விலகிப் போய்விட்டது. காலத்திற்குள் நான் நின்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
பிதாவின் ஆசியால் நீங்கள் எல்லாம் காலச் சக்கரத்தில் இருக்கிறீர்கள். வெளியே சுற்றும் காலம் வரும்போது என்னை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்குப் பிறகு என்னை வந்து பார்க்கும்படி பலரிடம் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். அது அத்தனை எளிதல்ல. என் சுமைகளை எல்லாம் நான் இறக்கி வைத்துவிட்டேன்.
இருண்ட ஆற்றலுக்குள் ஒளி ஊடுருவும் போது ஒரு சலனம் உண்டாவதாக உணர்கிறேன். இருப்புக்கு அங்கே எதுவுமில்லை.
நீங்கள் சொன்னது போலவே, காலத்தின் ஊடே வந்து என்னிடமிருந்த ஒரு பொருளை நீங்கள் எடுத்துச் சென்றுவிட்டீர்கள் என்பதை யூகித்துத் தெரிந்து கொண்டேன்.
அதை திருப்பி எடுத்து வர நான் முயற்சித்தேன் என்பதை நீங்கள் அறிந்திருந்தீர்கள்... குருவை மிஞ்சின சிஷ்யன் உலகில் கிடையாது.... என்னை நோக்கி எல்லாவற்றையும் நகர்த்தி விட்டீர்கள் . . . எல்லாவற்றிருக்கும் பருவ காலம் வருகிறது.... தானாக நடக்கிறது....
நான்காவது மற்றும் ஐந்தாவது பரிமாணம் என்பதும் இனண உலகம் என்பதும் ஒன்று தான்
இந்த பரிமாணத்தில் இருப்பது போல அப்படியே இருக்கும், நடக்கும் நிகழ்வுகள் சற்று மாறுபடும்
அந்த பரிமாணத்தில் சென்று முன் பின் பார்க்கலாம், எதையும் கொண்டு வர இயலாது, அந்த பரிமாணத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்தால் சக்தி அதிகமாக விரயமாகும்
நாம் பார்க்கும் கோணம் பச்சை நிறத்தில் தெரிய துவங்கும் போது மற்ற பரிமாணங்கள் தெரிய துவங்கும், படத்துடன் இதை ஒப்பிடலாம்
உடலுடன் தொடர்பில் இருந்து கொண்டே இதை செய்வதாகும். அந்த பரிமாணத்தில் நம்மை போல் மற்றவர்களும் பார்க்க வருவார்கள்.
நான்காவது மற்றும் ஐந்தாவது பரிமாணம் புலப்படுவதற்கான காரணம், நாம் சமாதி அல்லது மரணத்திற்கு வெகு அருகில் பயணிக்கிறோம் என்பதாகும். சிலரால் இதை காண முடிந்தாலும், அதன் இயக்கத்தை கை கொள்வது ஒரு சிலருக்கே சாத்தியமாகும்.
இதை தெரிந்து கொள்ள பலரும் பல்வேறு வகைகளில் முயற்சிக்கிறார்கள்
நம் அறையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடும் அறையை காணும் போது அதை முழுக்க காண முடியாமல் உள் கண்களை திறக்க முடியாமல் காண்பது உண்மையா என்று மீண்டும் பார்ப்பது நாம் பரிணாமத்தில் இருக்கிறோம் என்பது புலனாகிறது...
No comments:
Post a Comment