கடவுளை கண்ட கணங்கள்
இறைவெளியை அடைய வேண்டிய தேடல் யோகத்தில் போய் முடிகின்றது. அதைக் காணும் முயற்சியில் மனத்தை அறிந்துக் கொள்ளக்கூடிய தெளிவு பிறக்கிறது.
அண்ட சராசரங்களை கட்டியாளும் மிகப் பெரிய படைப்பான இந்த பரந்த இறைவெளியை உள்ளுக்குள் புரிந்துக்கொள்வது என்பது படைப்பின் சக்தி எத்தனை ஆற்றல் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
பிரபஞ்சங்களை உள்ளுக்குள் கணக்கிடுவது என்பது யோகத்தால் நிகழும் ஆற்றலால் விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தை அண்டவெளியை உள்ளுக்குள் வாங்கி உள்ளொளியாக அளவு கோலாக நகர்த்திச் செல்லும் திறமை யோகிகளுக்கு சர்வ சாதாரணமாக வருவதை நான் பல முறை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
இதை வேறு மாதிரியாக மிக எளிமையாக புரிந்துக்கொள்ளலாம். ஓரு வீட்டின் வரைப்படத்தினை உள் வாங்கிக் கொண்டோமேயானால் அதை கட்டி முடித்த வீட்டினை நேரில் பார்க்கும் போது அதை ஒப்பு நோக்க அறிந்தோமானால் ஒரு செ.மீ. மனதுக்குள் உள்ள படிவத்தின் படி நேரில் பத்து மீட்டர் அளவுள்ளதாக மனது புரிந்துகொள்கிறது.
அறிவியலை கொண்டு விவரிக்க முடியாத இயலாதவாறு படைப்பான அண்ட சராசரங்களை படைத்தவன் நம்மை யொற்றி படைத்ததுடன் மட்டும் கலந்து விடுமாறு செய்கிறது. அதற்கு அப்பால் என்னவென்பதை அதனுடன் கலந்து விட்ட பிறகு இந்த விரிந்த பிரபஞ்சத்துடன் ஒட்டி ஓடுவதற்கே இயலுமே தவிர அதற்கு அப்பால் ஒன்றுமில்லை என்ற உணர்வுடன் யோகிகள் தங்களை படைத்தவனுடன் கலந்தேயிருக்கிறார்கள். அதற்கு அழிவேது.
கர்மாக்கள் அது அதனுடைய நேர் கோட்டிலிருந்து பிறழாமல் இயங்கிக் கொண்டயிருக்கிறது. யோகிகள் அதன் உள் சுற்று பாதையில் அதனுாடே பயணம் செய்தவண்ணம் பிரபஞ்சத்தை அதன் வாயில் வரையில் பயணித்து ஒன்றி கலந்துவிடுகிறார்கள். அதை அவர்கள் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் நாம் அதைக் கற்றுக் கொள்வதில்லை ஆகையால் கர்மாக்கள் கழித்தாலொழிய பயணிக்க இயலாத வண்ணம் நேர்கோட்டில் பயணம் செய்கிறோம்.
கடந்த காலத்தை அறிவியல் மீட்டு கொண்டு வருவதில்லை காரணம் இந்த பிரபஞ்சத்தை பின்னோக்கி செலுத்த இயலாத காரணத்தால் அதன் தன்மை வருங்காலத்திற்கு வேகமாக முன்னோக்கி இயங்கிய வண்ணமே உள்ளது.
ஆனால் யோகிகள் காலத்தைக் கடந்து நிலையில் முக்காலத்திற்கு இடையே பயணிக்கின்றதனால் அவர்கள் பிரபஞ்சத்துடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்கிறார்கள். பல படிகள் கடந்து அறிய கூடிய ஆற்றல் யோகிகளுக்கு வந்துவிடுகிறது. இதை குருநாதர்கள் பலரிடம் கேட்டிருக்கிறேன்.
பஞ்ச பட்சிகள் என்ற ஆற்றலாகிய கலை யோகிகளுக்கு மட்டும் கைவரபெற்று இருப்பது அவர்கள் விரிந்த இந்த அண்ட சராசரங்களை கட்டி ஆள்கிறவர்களாகயிருக்கிறார்கள். இயக்கத்தின் திசையில் அவர்கள் பயணம் செய்தபடியிருப்பது பிரபஞ்சத்தின் முழுமையை உணர்ந்திருத்தலால் காலமாகிய பட்சிகள் அவர்களுக்கு தப்புவதில்லை. அவர்களை பிரபஞ்சம் உணர்ந்து கொள்கிறது. தவம் அதிகம் கூடும் காலங்களில் நான் சென்று பயணித்து அதன் திசையை கலைப்பது
நன்றாக உணர்ந்து வருகிறேன்.
மனமானது சுருங்கவும் விரியவும் மாறி மாறி வரும் காலத்தில் இயக்கத்தின் பிடியில் யோகிகள் விடுபடுகின்ற போது மனம் உடலை விட்டு பிரிந்து அண்ட சராசரங்களில் பயணத்திப்படியேயிருக்கிறது.
பிரபஞ்சத்தில் பயணம் செய்யும் காலத்தில் ஒளியுடும்புடன் திரியும் யோகிகளைப் பார்க்கும் தருவாய்க்குப்பின் அவன் பொய் பேசுவதில்லை. அவர்களைப் பார்த்துப் பயப்படுகிறான். சத்தமாகக்கூட பேச பயப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
பிரபஞ்சத்தில் இடையறாத தொடர்புள்ள தொடர்பற்ற எண்ணங்கள் நம்மால் நமக்கு சொந்தமான பகுதியில் சேர்த்து வைக்கப்படுகிறது. உருவாகியது மிக எளிமையானது. ஆனால் இருப்புணர்வோடோ விழிப்புணர்வோடோ செல்லமுடியாத பகுதியில் அடிக்கவைக்கப்பட்டிருக்கிறது. இறையுணர்வுடன் அணுகும் போது அது கரைந்து கொண்டே வருகிறது.
அது தன் நினைவுகளுக்கு எட்டாத ஓழுங்கு அமைப்பில் ஊகிக்கவே முடியாத உயரத்தில் அறிந்து அமைதி கொள்கிறான் யோகி அதன் விளைவாக பல காலம் தப்பிதம் செய்து வந்த முரணான காட்சிகளால் உண்மையறிந்து அமைதி கொள்கிறான். அதற்கு பிறகு பிரபஞ்சத்தை பற்றி பேச எந்த ஒரு அளவு கோலும் அவனுக்கு தேவைப் படுவதில்லை.
ஒலி ஒளி இயக்கமற்றதுடன் யோகி தன்னை மறந்து சமாதியில் சென்றுவிடுகிறான் எங்கும் பரந்து விரிந்த ஓம் என்ற மர்மத்துடன் மறைய கற்றுக்கொள்கிறான்.
தொடர்கின்றது………
தமிழ் அன்பர்கள் தொடர்ச்சியாக தமிழில் எழுதும்படி வற்புறுத்தியதால் இதை எழுத நேரிட்டது. ஒவ்வொன்றுக்கும் தொடர்பு அறுப்பட்டே வந்து முடியும்.
வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு சுருக்கிய பகுதி. குருவின் ஆசியில்லாமல் யாராலும் இதை இந்த பகுதியை அனுமானிக்க இயலாது
இது ஆங்கிலத்தில் வெளிவர உள்ள என் ஆராய்ச்சி கட்டுரையின் ஓரு பகுதி ஆகையால் நிறைய தவிர்க்கப்பட்டுள்ளது.
குருநாதர்களின் ஆசியால் இதை முடிவடையும் காலம் வரும்
இறையுணர்ந்தோர் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்த பகுதியில் கொடுக்கலாம் மற்ற மொழி அன்பர்களுக்காக
1 comment:
வாழ்க வளமுடன்🙂🙏
Post a Comment