Wednesday, August 12, 2015

Vaasi Yogam /Vasi Yoga -7

Vaasi Yogam /Vasi Yoga -7
வாசியோகம்-7

நடக்கிலும் வாசி பாரு நாட்டமும் வாசி பாரு
முடக்கிலும் வாசி பாரு முனைசுழி வாசி பாரு
மிடக்கிலும் வாசி பாரு அறிவிலும் வாசி பாரு
திடக்குரு நாகை நாதர் திருநடஞ் செய்வாய் நெஞ்சே
கணபதிதாசர்

அறிவான கண்ணெதென்றல் புருவவாசி
அங்கத்திற் பம்பரம்போ லாடினாக்கால்
முறிவான பூட்டுடைத்துப் புருவமத்தி
மூக்கோடும் வாசியது நெற்றியேறில்
தெறிவான யிவ்வாசல் பத்தாம் வாசல்
சிறுவாசல் அறிவாசல் யோகவாசல்
குறியான மணிவாசல் குருவின்வாசல்
கோபுரவாசல் தெரிவா யானாற்பாரே
காகபுசுண்டர்

நில்லடா நிலையறிந்து கமலக்கண்ணை
நிசமான வாசியினா லண்டமேவி
நில்லடா அந்தநிலை சொந்தமாக
நின்றுமனக் கண்ணதனால் தன்னைப் பார்த்து
நில்லடலா நின் தேகம் சோதிபோலே
நின்றிலங்கும் புருவநடு உச்சிமீதில்
நில்லடா அந்தநிலை வாசி கொண்டு
நிரந்தரமுந் தன்வசமாய் நீதான் காணே.
அகஸ்தியர்

தள்ளுகின்ற வுறுப்பு வந்தால் கருவைக்கேளு
சாதகமாய் குண்டலிக்குள் வாசி வைத்துத்
தெள்ளுகிற பிராணாயம் பண்ணித்தீருந்
திரண்டொயுஞ் சிலம்பொலியுங் காணும் காணும்
நள்ளுகிற கண்டத்தே யங்கென் றுாணும்
நலம் பெரிய புருவமையந் திறந்து போகும்
அள்ளுகிற கனிபோலே யமிர்தம் வீழும்
அப்பொழுது காயசித்தி யறிந்து கொள்ளே
சட்டைமுனி


போகுமே வாசியென்ற  புரவி மட்டம்
பூரித்தால் வெகுவேகம் புகலப்போகா
தேகுதற் கிடம் பார்க்கும் எகிரியோடும்
ஏங்காமலுன் மனத்தை யுன்னா லுன்னை
வாகுடனே வலம் புரியின் சங்கை மெல்ல
வழுவாது இழுத்து நடுத்தம்பம் ஏற்று
சாகுபடிக் காரரைவர் சடுத்தம் செய்வார்
சமர்த்தாகக் கேசரம் சேர் கடினம்போமே
கோரக்கசித்தர்

 உண்மை யிப்படி யென்றுகந்து நீ வாசியைத்
தன்மை யிதென்று சார்ந்து செலுத்தினால்
சின் மயமாகி சிறக்குஞ் சிவயோகம்
நன்மை யிதெனவே நாட்டங்கள் கண்டிடே
சுழியினில் வாசி சுழன்று ருகாமலே
வழிதுறை கண்டு வாசியை யேற்றிடு
அழிபடு தேகமாதி நிலைத்திடும்
முழிநடு சிக்கென முன்னிலைப் பின்னே
மச்சேந்திரர்


பாட்டிலாத பரமனை பரமலோக நாதனை
நாட்டில்லாத நாதனை நாரிபங்கன் பாகனை
கூட்டி மெல்ல வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டக்காரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே
திண்ணமென்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணலன்புளன் புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணதிரே விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணியெங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பேனே
சிவவாக்கியர்


மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்
மணிவட்ட வாசியை வாரி யுண்போம்
வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்
வக்கிர சொப்பனத் தாண்டி விடுவோம்
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம்
பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம்
சிவ்வுரு வாகியே நின்றோ மென்றே
சீர்பாதங் கண்டு தெளிந் தாடாய் பாம்பே
பாம்பாட்டிச் சித்தர்


மருவையிலே ரவிமதியும் சுழிமுனை மூன்றும்
வாய் அதிர்ந்து பேசாதே மனதில் காணும்
அருவையிலே சகலமெல்லாம் ஒன்றுக்குள்ளே
அகண்ட பரிபூரணமாய் நிற்கும் கால்தான்
திருவையிலே பளிச்சென்று ஒளிதான் வீசுமே
திருவாகி வாசியென்ற இயல்தான் மைந்தா
பருபமுடன் ஆதார மூலம் பார்த்து
பக்திகொண்டு புருவமதில் பணிந்து நில்லே
காலங்கிநாதர்


வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல்
வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல்
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல்
திறமான பன்னிருவர் காக்கும் வாசல்
ஆடுகிற புலியாகி நின்ற வாசல்
அரகர சிவசிவா வாசிவாசல்
கூடுகிற முக்கோணப் பரங்க ளாகிக்
குறுகுமதி பெருகுமதி கூறொண் ணாதே
கருவூரார்


உண்மையாய் இதைபோல எளிதில் சித்தி
உத்தமனே மற்றொன்றில் இல்லையேதான்
பண்மையாம் பல்உயிராம் காலமெல்லாம்

பார்த்தாலுங் கிட்டாது பாரிலில்லை
துண்மையாய்ச் சொல்உயர்ந்த வாசிதானும்
சுருதிமுடிந்து இடம்சுளுவாம் சூட்சுமமாகும்
வன்மையாம் வாதி சித்தர் ரிஷிகள் யோகி
வாசியைப் போல் சித்தியில்லை மறிந்து நோக்கே
போகர்

ஆண்டிருந்தோ மவுனத்தைச் சுழியினுள்ளே
யாடுகிற வழி மார்க்கம் வாசி பார்த்தேன்
பூண்டிருந்தேன் மனதையங்கே யோட்டிப் பார்த்தேன்
புருவமையத் தமர்திறந்து போனேன் மேலே
தாண்டிடும்போ தறுசபையுஞ் சுற்றக்கண்டேன்
சஞ்சரிக்க மாட்டமற் றவறி வந்தேன்
துாண்டினேன் விளக்கொளியைச் சூட்சங்கண்டேன்
சொற்கபதங் கை கொண்டேன் துயர்வென்றே
கொங்கணார்


கண்டதா ரையினி லுாதிடும் வாசி
கபாலத்தின் வழியதாய்ச் சென்று
கருவூலமாய்ச் சூழ்ந்து பின்னிடமாய்
கருதிவைத் ததுவொரு கடிகை
அண்டமும் வலமாய் ஆராதனையது செய்
தாக்கினை யிடகலை புரிந்து
அசவுமென் மேலாய் யடிபணிந்தருளி
அதுவொரு கடிகைதான் செபிக்க
மண்டல முழுவதும் பிரகாரத்தின் விசிதம்
மணி விளக் கதிக சோதியினிற்
மதியிருந்தோருமை கடவுளி னருமை
வாசி நின்றாடிய னேசம்
புலஸ்தியர்



தெரியாத ஞானவழி கண்ட பின்பு
சித்தமது ஏகாந்த வழியில் நில்லு
அரிதான ஆதார மூலந்தன்னில்
அன்பான அக்கினிதன் னாவிதன்னை
விரியாமல் முக்கோணச் சுவரில் நின்று
மேலான வாசிதனை மேலேயேத்திச்
சரியானபடி சொந்த மனையைக்கண்டு
சங்கையுடன் தானிருந்து தன்னைக்காணே
பிரும்மரிஷி

The above verses on vaasi yoga and practices were written by thirteen siddhars (Mahayogis). It’s a way of yoga practices to achieve their goal in this birth and alive for hundreds of years which is concluded in the record especially on their verses on medicines and meditations.
This has been already written in earlier posts. To understand the curvature of the space time one gets enlightened in the way where our yogis had carried out the yogic practices and attained Samadhi. In the earlier post, the motion of the bus related to the rotation of the earth and the human soul has been explained. It’s a part of gravity and it’s deeply connected with the motion of the earth. The deviation, slanting position of the yogi is pushed away from the rotation of the earth, when the motion is away from the gravity and the meditator tried to comes out from the bubble ball where here is quoted as coverage of the humans.
The vaasi yogi practice by maha yogis in Tamilnadu is the key way meditation for to attain and merge with the entire universe. The mahayogis has been connected to the universe and where ever I met the yogis from different parts, they say about these procedures and practices appear as the same and similar to the vaasi yoga practices.
The above verses by yogis are given to understand the importance of the procedures of vaasi yoga and its benefits to attain the end stage of Samadhi. It’s not initiation; it’s a direct practice which was followed by mahayogis of Tamilnadu. Some verses from above have indicated the rotation of the breath in the internal body. Some of the verses show about the “suzhumunai”- (tamil) Swerving. Some explained the disconnection of the births and Samadhi stages to reach the end of god.
Then the question easily arises why we follow the different types of yoga in these recent generations. Is it possible to attain the divinity? Is it capable to disconnect our millions of years on life continuation?. It may be the difficult practices of vaasi yoga and their strict rules and regulations, common people unable to follow and observe these type of advance practices. Hence, we started doing different types of simple pranayama as meditation taught in the city centres instead of doing the yogic practices. We lost the main object of study due to the practice of this type of pranayama.
Time and period is the one dimension; geometrically represents the instant in which occurs. It’s placed in time, the order of succession. Space is the order of existence.
By doing the vaasi practices the mahayogis attained Samadhi and alive for hundreds of years and written about medicines, Sastras and engraved the medicinal statues like palani. The making of medicinal statues in palani took 300 years to complete by Mahayogi Bohar. The space time of the yogis might have broken the gravity. The above verses explained on the tenth door of the human where they penetrate in to the universe instead of explained as nine doors for prolong period. The description of the sounds influenced on them internally as bell sounds. 
Then the meditator becomes long dead. They have been focused to the centre point of the humans similar to the centre point of the universe where the surface layer creates. Inceptions, I take to come from things outside me where the nature shows limited exposure what I should not touch the core of the universe as other tried to touch earlier. Vaasi yogis have capable to touch the almighty as early due to the pattern and systematic methods of practices for first hard and huge painful twelve years. Most of them are realized and disappear with the entrance of the universe and block the mobile call where it arises to make the call to you from people.
I tried to explain some of the hidden things in vaasi yoga which are mentioned in the above verses in the coming posts once all the other verses will be completed on vaasi yoga. The secret of the pranyama and the ojas by the mahayogis on vaasi yoga will be explained in the coming posts.


1 comment:

Vethathiri Maharishi - Anuradha Selvakumar said...

வாழ்க வளமுடன்🙂🙏