தன்னிலையை மறந்து ஆடிகொண்டிருக்கும் அவர்கள் நம் ஒத்திசைவை விட்டு வெகு தூரம்
இருப்பது போல் காணப்படுகிறது. தமிழ் ஆடி மாதங்களில் தென் தமிழ்நாட்டில் அமைந்த
சுடலைமாடன் போன்ற பல கோவில்களில் சாமியாட்டம் ஆயிரமாயிரம் வருடங்கள் தொடர்ந்து
நடைபெற்று கொண்டிருக்கிறது.
தனியாக ஒரு இடத்தில அமர்ந்து வருடம் முழுவதும் குறி சொல்வதை பல இடங்களில்
பார்த்திருக்கிறேன். அவர்கள் சொல்வதும் தன்னிலை மறந்தும் மறக்காமலும் நம் மனித மன
ஒத்திசைவுக்கு வந்து சொல்வதை பார்த்திருக்கிறேன். அவர்கள் மாட தேவதைகள், ஜக்கம்மா போன்ற சிறிய
தெய்வங்களை தங்கள் மனதிசைவுக்கு ஒற்றி சொல்வார்கள்.
அறிவியலின் எந்த தளத்திலும் இதை ஆராயதக்க விரிவான
ஏளிய கோட்பாடுக்களோ அதன் இயக்கத்தின் வெளிபாடுகளின் கட்டளைகள் எங்கிருந்து
பெறபடுகின்றன என்பதை தெரிந்து கொண்டலொளிய அதன் அடுத்த கட்டத்தை நகர்ந்து பிடிக்க
முயலலாம். அந்த உருவகத்தை புற அல்லது அக வெளிபாடவென்பது குரிய நிலையை வரையறைக்குள்
கொண்டு வர கடினம் என்பது ஏன் கருத்து.
சிறு பையனாக நான் பார்த்து பயந்து போன எங்கள்
கிராமத்தில் கோவில்கொடையில் ஆடும் சாமிமார்களின் ஆற்றல் இந்த பிரபஞ்சத்தின் உள்ள
மானுட மனம் சற்று இணைந்து அதனுடன் ஒன்றி கண்களை மூடி எங்கும் வியாப்பதிருக்கும்
அதே ஆற்றலுடன் வெளிய பரவியிருக்கும் மனித மனத்தை படித்தறிந்து சொல்லுதல் என்று
புரிந்து கொள்ள தான் வேண்டும்.
1 comment:
வாழ்க வளமுடன்🙂🙏
Post a Comment