ஜீவ சமாதி
யோகம் செய்யும் அன்பர்கள்
ஜீவ சமாதிகள் பற்றி அறியாமலும் அதன் உண்மையான சாரத்தை உணராமலும், சொல்பவர் பேச்சை கேட்டு,
அதை உண்மை என்று நம்பியும் முறைபடுத்தி
சொல்பவர் கிடைக்காமலும் அதன் வழி தேடாமலும் இருக்கும் குழப்பமயடையதலை ஒட்டிய,
அதன் இருத்தலை தவிர்க்க வேண்டியே
இந்த காணொளியும் புகைப்படங்களும் இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.
அறிய முடியாமைவாதி என்பது இவ்வுலகில் கிடையாதேன்பது அறிந்து
கொள்வதற்காக வேண்டியே இந்த பதிவுடன் புகைப்படங்களும்
காணொளிகளும்.
மூன்று ஆண்டுகள் கழித்து சிறிது நாட்கள் முன்பு எதிர்பாராமல் JCB இயந்திரம் வேலை செய்யும் நேரத்தில், சமாதி மீது தவறுதலால் இடித்துவிட்டதால் சமாதியின் மேல்
பாகத்தின் ஒரு பகுதி திறந்து கொண்ட சித்தவித்யார்த்தியின் சமாதி்யை பற்றி சிறிய பதிவிது.
தமிழ்நாடு திருச்சி மாவட்டம், திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள அந்தோனி தெருவில் அமைந்த சுவாமி சிவானந்தரை
பின்பற்றிய பிரம்மஸ்ரீ வேதவல்லி. அவர்களின் சமாதியின் அரிய புகைப்படங்கள் இவைகள்.
மகா யோகியும், வித்யார்த்தியின் உடலும் காண்கையில் அச்சமாதி அண்மையில் வைத்தது
போன்று அப்படியே நேரேதிர் தரிசனமாக உள்ளதை காணலாம். சித்த வித்தையின் பெரும்தரிசனம்
இவைகள். அதன் பெரும் மதிப்பை உணர்ந்து வித்யார்த்திகள் உயிர்களின் மேல் பெருங்கருணை
கொண்டு நித்திய கடமை ஆற்ற இதன் மூலம் நிகழ்வதைப் புரிந்துகொள்வதற்கும் அவரவரின் பிரக்ஞையைப்
அறிந்துகொள்வதற்கும் உரிய காலமாக உள்ளதையெடுத்து கொள்ள வேண்டும்.
தவறுதலாக உடைந்து போன பிரம்மஸ்ரீ வேதவள்ளி அவர்களின் சமாதி மீண்டும்
மூடப்பட்டது. திருச்சியருகில் உள்ள பிரம்மஶ்ரீ வேதவள்ளி அம்மையாரின் ஜீவ சமாதி அருகிலேயே
அமைக்கப் பெற்ற அவரது கணவர் பிரம்மஸ்ரீ சீனிவாசன் சமாதியும் அதன் மறுவோரம் உள்ளதை காட்டும்
புகைப்படங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
பிரம்மஸ்ரீ வேதவள்ளி அவர்கள் குழந்தை பருவம் முதல் ஞானப்பிதா
சிவானந்த பரமஹம்சர் அவர்களுடன் இருந்தவர் என்று காணொளி மூலம் அறிந்து கொள்கிறோம்,
அவருக்கு அப்பெயர் சுவாமி சிவானந்தர்
அவர்களால் வழங்கப்பட்டது என்று சொல்லபடுகிறது. அவருக்கு பிரசவ சமயத்திலும் உடனிருந்தவர்கள்
சுவாமியால் நேரடியாக அனுப்பபட்ட வித்தியார்த்திகள் என்று கேள்விபடுகிறோம். இவர் தன்னுடைய
கணவர் பிரம்மஸ்ரீ சீனிவாசன் அவர்களுக்கு 2002வருடம் சமாதி வைத்தார் என்று ஆவணங்கள் தெரிவிக்கிறது.
2014 வருடம் இவர் ஜீவசமாதி
அடைந்தார்.
கடந்த வாரம் தவறுதலாக jcb யால் சமாதி திறக்கப்பெற்று, மீண்டும் மூடப்பட்டது. வெள்ளை நிறமாக இருந்த அவருடைய
தலைமுடி தற்போது கருப்பாய் மாற்றமடைந்திருப்பதையும் அவருடைய உடல் எவ்வொரு மாற்றமில்லாமல்
இருப்பதையும் பார்த்து சித்த வித்தையின் மகிமையை வித்தியார்த்திகள் உணர்ந்து கொள்ள
வேண்டிய நிகழ்வாகவும், அதை உணரவேண்டியும் இவ்வாறு வெளிப்பட்டிருக்கலாம். இது நிரூபிக்கபடுவதற்கு எத்தேவையும்
ஏற்படவில்லை, அவசியபடுவதில்லை. அறிந்தவற்றை திடமாக சொல்லவே இந்த சமாதி நிகழ்ச்சிகள் என்றறியபடுகிறது,
அதற்கே வெளிபட்டிருக்கவேண்டும்.
யூகிக்க வேறேன்ன இருக்கிறது. ஆராயவொன்றுமில்லை, தத்துவார்த்தமாக அப்படிப் பிரித்துக் பார்க்கவும்,
விவாதிக்கவும் முடியாது.
1 comment:
வாழ்க வளமுடன்🙂🙏
Post a Comment