Saturday, June 10, 2023

மனமும் தவமும்

 தினமும் காலை அலுவலகம் செல்லும் நேரத்தில் அந்த பெண்மணி ரோட்டோரத்தில் நடந்து வந்து கொண்டிருப்பார்.... பைக்கில் கடக்கும் போது சொல்லிவைத்தார் போல  அவரை தினமும் பார்ப்பேன்...... தானாக பேசிக் கொண்டோ அல்லது ஆழமான சிந்தனையில் அவர் ஆழ்ந்து நடந்து வந்து கொண்டிருப்பதுப் போலவே தோன்றும் 

இவர்கள் குரலற்றவர்கள் ..... தனக்குத் தானே பேசிக்கொண்டிருப்பதை இந்தியாவில் பல கிராமங்களில் இவர்களைப் போன்று பலரை பார்த்திருக்கிறேன்...... ஜீப்பை நிறுத்தி விட்டெறங்கி  பிஸ்கட்களை சாப்பிட  கொடுத்திருக்கிறேன்.....என் முகத்தைப் பார்ப்பார்கள் ..... சிரித்து கொண்டே  என்னை ..... இவன் மனநலம் கொண்டவனில்லையோ என்பது போல பார்ப்பார்கள்......மனம் காட்டுவதை அவர்கள் உண்மை என்றே நம்பி கொண்டிருக் கிறார்கள். ..... மனத்தின் தன்னிலையை அவைகள் சிதைக்கின்றன , அதன் பிரதிபலிப்புகள் சாதாரண மனிதர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை என்று நினைத்துக் கொள்வேன்.....

என்னுடன் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பலரை இதைப் போல தன்னிலையில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்....... யாரோடு பேசுகிறார் என்று அவர்க்கும் தெரியாது... காரணம் பல ஆண்டுகள் காடுகளில்  என்னைப் போன்று தனிமையில் கழித்தவர்கள்..... மனம் உறுதி கொண்டவரே எங்களைப் போல் தனிமையில் பணிபுரிய முடியும்.....இல்லையென்றால் மனசிதைவுடைந்திருப்பதை       அபூர்வமான சமயங்களில்  அவர்களிடம் கண்டிருக்கிறேன்..... ஒரு முறை என்னுடன் டெண்டில் தங்கியிருந்தவர் மகன் பள்ளியில் விளையாடும் போது கண்களில் அடிப்பட்டுவிட்டது என்பதை அறிந்து அன்றிரவு முழுக்க அவர் தூங்காமல் இறைவனை தொழுதபடி இருந்தார்..... கனமான அந்த உணர்வுகள் ஏற்பட ஏற்பட மனவுறுதி வளர்ந்து கொண்டேயிருக்கும்.....

மொபைல் அழைத்து முடிந்து மீண்டும் அடித்தது ......சமைத்துக் கொண்டிருந்தவன் திரும்பி .....இரு வந்து கொண்டு இருக்கிறேன் என்று சொன்னேன் .... ஆடி போனேன் நான்.....தன்னிருத்தவன் மனம் வெளியில் இருந்தது அப்போது .....

யாரிடமும் பேச முடியாமல் போனதாலேயே இப்படி பேசி விட்டிருக்கிறேன்......இரண்டு வருடம் முன்பு இங்கு மாற்றலாகி வந்த போது ....எல்லோரிடமும் கன்னடத்தில் பதிலளித்து பின்பு மன்னிப்பு கேட்டு கொண்டு ஹிந்தியில் பேசுவேன்......தர்மசங்கடமான நிலை அது ......

சென்னையில் வாடகை வீட்டில் வசித்தபோது ..... காலையில் வீட்டின் மற்றொரு வாயிற்படியில் முருகேசன் பச்சை கலர் லுங்கி அணிந்து சட்டையில்லாமல் உட்கார்ந்து தனக்கு தானே பேசி கொண்டிருப்பார்...... சாப்பிட பக்கத்தில் உள்ள நாடார் அம்மா வீட்டின் திண்ணையில் அமர்ந்து சாப்பிடுவார்......அப்போது அமைதியாகி விடுவார். ---- பூ கட்டி விற்கும் அக்கா அந்த வீட்டு திண்ணையில் காலை முதலே பூமாலை கட்டி கொண்டிருப்பார்கள்..... பின்னர் மதியம் அமர்ந்து பேசுவார். அவர் சட்டை அணிந்து நான் கடைசிவரை பார்த்ததில்லை.....

முருகேசன் எப்படி இருப்பான் தெரியுமா.. ... என்று அம்மா  வருத்தப்படுவார். அவன விட்டு பெண்டாட்டி போயிடுச்சு......அதான் இப்படி ஆயிட்டான் .....சில சமயம் இந்த காப்பிய குடி முருகேசா என்று அம்மா குடுக்கும் போது ----குடுக்கா  என்று வாங்கி குடித்துக் கொள்வார் முருகேசன்..... அவரைப் பார்த்து யாரும் பயப்பட்ட மாதிரி நான் கண்டதேயில்லை... பள்ளி கல்லூரி நான் முடித்து வந்த பின்பும் முருகேசன் அப்படியே தான்  இருந்தார்......படியிலிருந்து எழுந்திருச்சிக்க முருகேசா.... நாங்கள் விளையாட வேண்டும் என்று  சிறுவர்கள் சொல்லும் போது மறுக்காமல் எழுந்து போயிடுவார் .....

பல கிராமங்களில் முருகேசன் போன்ற  பலரை நான் கண்டிருக்கிறேன்......அவர்கள் நாள் முழுக்க மனம் பேசுவதை மட்டுமே கேட்டு கொண்டிருக்கிறார்கள்.... அதை கேட்காமல் அவர்களால் இருக்க முடியவதில்லை"---- அல்லது கடந்ததை  எண்ணியே திரும்ப திரும்ப மனத்திரையில் ஒட்டி பார்த்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன் ......மனமற்ற உருவமற்ற அந்த குரலை கேட்டு கொண்டேயிருக்கிறார்கள்........

200 மீ நீளம் உள்ள  எங்கள் ரோடு...... அதை முருகேசன் அந்த ரோட்டில் வலது இடது என்று மாறி மாறி நடந்து என்னை கடந்து செல்ல அரை மணி நேரம் பிடிக்கும் ..... சில சமயம் நான் சிரிக்கும் போது என்னை பார்த்து சிரிக்கிறமாதிரி கண்கள் விரிந்து பார்ப்பது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.....

ஆரம்பகால தவம் செய்யும் போது மனத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பாட மெடுத்தார்கள் ....... அவைகள் குப்பைகள் ......ஒரு நாள்  காலையில் தூங்கி எழுந்து கட்டிலிலேயே அமர்ந்திருந்தேன் . ....மனம் எந்த சலனம் இன்றி அமைதியாக என்னுடன் அமர்ந்திருந்தது ..... உலகமே அமைதியாக இருந்தது .....அந்த உணர்வு அப்படியே நீண்ட நேரம் இருந்தது.....தொடர்ந்து அடுத்த நாளும் சென்றது.....

இப்ப ஒரு மாதமாக மனம் இரவெல்லாம் ஓயாமல் பேசி கொண்டே இருந்தது.....தூங்கின மாதிரியே தெரியலை எனக்கு.... களைப்பும் இல்லை ..... பின்னர் ஓயாமல் சினிமா பாட்டு பாடியபடி  இருந்தது..... ஐந்து பாட்டை ஒரே நேரத்தில் பாடியபடி இருக்கும்..... காரணம்.... பேச எனக்கு  யாரும் வீட்டிலில்லை---- தூங்கி மாதமிருக்கும்.....

சித்தர்கள் பலர் தனக்கு தானே பதிலளிப்பதை பார்த்திருக்கிறேன்.... ஆனால் அவர்கள் இயக்கமற்ற நிலையில் இருப்பதும் கண்கள் மேலே சொறுகி விழித்திருப்பதும் எங்கும் இல்லாத பாதையில் நின்று கொண்டு இருந்தார்கள்.... அவர்களை  தொடர்பு கொள்ள வடிவம் எடுக்க வேண்டிய அவசியமின்றி இருந்தது....ஒவ்வொரு மனிதர் குள்ளும் அந்த மனம் மிக கனமான சங்கிலி கொண்டு நுட்பமாக  பிணைக்கப்பட்டிருக்கிறது...... அவ்வளவு எளிதில்லை அதைக் கைக்கொள்ள.....

என் மூளைக்குள் இருக்கும் அந்த காட்சிகள் இறக்கி திரையில் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை......மனம் வெளிவந்து சொன்னது .....நான் வெளியில் தான் இருக்கிறேன் ....நீ தான் என்னுள் இருக்கிறாய் என்றது ....இருக்காதா பின்னே..... தன்னந் தனியாக உறங்கும் போது இரவில் ஒரு முறை எழுந்து ....கைக்கூப்பி ....அறம் பாடாமல் அமைதி காக்க மனமே என்றேன்.....பக்கத்தில்  கரும் பச்சை நிறத்தில் உருவங்கள் என் படுக்கை பக்கத்தில் நின்றிருந்தன. ...... அவர்கள் முகங்களை பார்ப்பதை தவிர்த்து படுத்துக் கொண்டேன்.... அதன் பிறகு இரவு சிறுநீர் கழிக்க எப்போது  எழுந்திருக்கும் போது - - - லைட் போடாமல் இருளிலேயே  சென்று வர பழகிக் கொண்டேன்..... இருளும் இருட்டும் அவர்களுக்கு மட்டும்  வெளிச்சமாகவே இருக்கின்றன. ....தேவதைகள் கூட இருளிலேயே இருக்கின்றன..... லைட்டை அணைத்துவிட்டு இருளில் தன்னிருப்பை அவர்கள் காண்பித்து கொடுக்கிறார்கள்.....அண்மையில் சிருங்கேரி மடம் சென்று ஆதி சங்கராச்சியார் சமாதி முன்பு  நின்றிருந்த போது மின்சாரம் அணைந்து போய் நான் கும்மிருட்டில் நின்றிருந்தேன்   🌿