Sunday, October 12, 2025

மந்திரங்கள்

 இத்தகைய மந்திர ஜெப முறைகளால் மக்கள் இதில் உழன்று மூழ்கி மரணித்து விடுகிறார்கள்... இதை அடைவது என்பது சாதகனின் முழு அர்பணிப்பும் உடல் சார்ந்த சோர்வு மட்டுமே மீதம் இருக்கிறது... அடைந்தவன் இதை தள்ளி வைத்து அதை அடுத்து  கடந்து மேலே சென்று விடுகிறான்... பரவெளி வசப்பட்டு விடுகிறது.... சாதாரண மக்கள் அறியாமல் இதை எதோ பெரிய வாழ்க்கை தேவைகளை கொண்டு வரும் என்று... இதன் உண்மை அறியாது ... மந்திர ஜெபம் செய்து மணி உருட்டி எந்திரம் மேல் அமர்ந்து பூசை என்ற ஒன்றை புறவெளியில் செய்து  மடிகிறார்கள்... பேசா மந்திரம் என்பது மறைத்து வைக்கப் பட்டதாகவே இருக்கிறது .. நடைமுறையில் இல்லாமல் போனதால் அகவெளியில் கொண்டு சென்று இருப்புக்குள் சேர்த்து வைத்து விடுகிறார்கள்.  அறியாத மக்கள் பஜனை பரிகாரம் கோவில் என்று அலைக்கழித்து பயனுமின்றி மனசோர்ந்து அலைக்கழிக்க படுகிறார்கள்..  தவறாக வழிநடத்தி செல்கிறார்கள். என்று சொல்வதுண்டு.... மக்கள்  கவனமாக இதை அணுகி மனம் உணர்ந்து வெளிவந்து விட முயற்சிக்க வேண்டும் ...