Friday, October 9, 2015

யோகத்தின் விரிந்த நிலையும் அதன் ஒழுங்கமைப்பும்

யோகத்தின் விரிந்த நிலையும் அதன் ஒழுங்கமைப்பும்

பலர் யோகங்களைப் பற்றி தங்களுக்கு அறிந்தவையையே முதன்மைபடுத்தி வருகிறார்கள். அதைப்போல் வாசி யோகத்தைப் பற்றி பலர் பலவிதமாக தங்கள் கருத்துக்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். சித்தர்கள் கலையான வாசியோகம் மறைபொருளாகவே உணர்த்தப்படுகிறது. தவமியற்ற தவமியற்ற சாதகனுக்கு அதன் சூட்சுமங்கள் செயலுக்கு வந்து விடும். மிகப்பெறும் பொறுமை இங்கே தேவைப்படுகிறது.

வாசியோகத்தை பற்றி இதுவரை முறையாக பயிலாதவர்கள் அது என்ன வகையான யோகமுறை என்று அறிந்திராமலும். மற்றும் அதை பயிற்சி செய்துப் பார்க்காமலும் தங்கள் கருத்துக்களை முகநுாலிலும் மற்றும் வலை தளத்தில் ஏற்றி வருகிறார்கள்.

வாசியோகம் பல வகைகளில் பல காலங்களில் இயற்றப்படுகிறது. முறையாக பயின்றவர் அதன் சக்தியை அடக்கியாள்வார்கள். நேரமும் காலமும் அதற்கு மிகப் பெரிய பலம் இதனை குருவிடம் கண்டிருக்கிறேன். வாசியோகம் ஒரு சிலரால் மட்டுமே முறையாக தெளிந்த ஞான முடையவர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. சித்தர் கலையான இந்த யோகம் பல முறைகளில் கையாளபடுகிறது. எதுவாகிலும். முறையான முதல் தவத்தில் அது காண்பித்துக் கொடுக்கப்படுகிறது. முதல் தவம் தவறானால் முற்றிலும் கோணம் எனக்கேற்ப. அடுத்த படிகள் சாதகனால் மட்டும் கடக்கப்படுகிறது. பின்னர் வருடங்கள் கூட கூட சாதகன் புவியிர்ப்பு விசை விட்டு வெளியேறி பறந்து விடுகிறான். தாங்கள் கூறும் வார்த்தைகள் சிதறி அங்குமிங்கும் பரவி அதனிடத்தில் ஒன்றி விடுகிறது. கிரகங்கள் அசையும் வகைக்கேற்ப சிதறியவகைகள் ஒன்றுக்கூடி பிம்பத்தை உருவாக்கிக் கொடுத்துவிடுகிறது.

இன்று அமெரிக்காவில் இருக்கும் தமிழர் ஒருவர் எந்த வகையான தவத்தை இயற்றினாலும் தவமியற்றுவது சக்தியை கூட்டிக் கொள்வதற்கு என்ற வகையில் எழுதியிருந்தார். இது தவறான கருத்து. அவர் அடிப்படையான உண்மையான யோகத்தை பயிலாததாலும் அதன் முடிவு என்ன வென்பதை உணராததாலும் அவ்வகையான கருத்தை சொல்லியிருக்கலாம்.

Sage scientist தவவிஞ்ஞானி என்ற சொல் இப்பொழுது எல்லா யோக மையங்களிலும் உயர்த்தி ஒலிக்கப்படுகிறது. காரணம் காலம் கடந்து போய்விட்ட காரணத்தாலும் சொல்லிக்கொடுத்த தவங்கள் இறுதிக்குள்ளான பயனைக் கொண்டு வரவில்லை என்பதாலும் இவ்வாறு புதியதாக தவவிஞ்ஞானி என்ற சொல் முன்னிருத்தப்படுகிறது. வெளிப்படையான காரணம் தவங்கள் முறையான அடுக்குகளில் பின்பற்றபடவில்லை.

இயக்கமற்ற நிலையில் பயனிக்கும் யோகி எவ்வாறு இயக்கநிலையில் வேலை செய்யும் விஞ்ஞானி அளவிற்கு தங்களை  கொண்டு வர முடியும். அவ்வாறு வநதால் இருப்பு நிலை இரகசியங்களைப் பாதுகாத்து விடும். யோகி சமாதிநிலைக்குப் போகாமல் இறக்க நேரிடலம். இயற்கை தங்களை ஆராயவிடுவதில்லை. ஆகையால் இது தவறான வாதம். பெரியோர்  இதை  அறி்ந்து  கொள்வீர்களாக.

முறையான தவங்கள் ஒருவரது சுயத்தை அழித்து விடும். வாழ்க்கையை புரட்டிப்போட்டு்விடும். வாழ்க்கையின் எல்லைவரை கொண்டுச் செல்லும் இயல்புடையது. யோகம் நம்மை உடைத்துயெறிந்து விடும். விளிம்பு நிலைக்குக் கொண்டுப் போய் பயமுறுத்தும். படி படியாக தவம் கூடும் வருடங்களில் சாதகன் தன்னையிழந்து மிரண்டு போய்விடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். தாங்கள் தங்கள் கட்டுக்குள் இலைல்லை என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் தன்னை இயற்கையிடம் இழப்பதை தவிர வேறு மாற்று வழியே  அவனுக்கு  இருப்பதில்லை.

வாசியோகம் சாதகனை மயக்கமுற செய்து விடும். அண்டசரசாரங்களை கட்டி ஆள்பவன் ஆகிறான் அவன். காலம் செல்ல அதன் அரண்கள் உடைத்தெறியும் போது தாங்கள் நினைப்பதை இயற்கை கேட்டு அதன் வழியில் தங்களுக்கு வழி விடுகிறது என்பதை உணர்ந்தே வருகிறான். மனபிரமையில் ழூழ்கிவிடுகிறான். இயற்கை தனக்கு கீழ்படியும் போது பயந்தேயிருக்கிறான்.
அவ்வாறு வருடங்களை யோகி சிறிது சிறிதாக இழந்து விடுகிறான். திரும்பிப் பார்க்கையில் தாங்கள் எல்லாம் இழந்து விட்டதாகவே உணர்கிறான். ஆகையால் யோகிகள் அன்பானவர்களைத் தவிர மற்றவரை  துாக்கியெறிந்து  விடுகிறார்கள்.

உண்மையான தவம் ஆளை சிதைத்தவிடும். சரியான வாசியோகம் செய்கிறவர்கள். தனித்தேயிருக்கிறார்கள். அவர்களுடைய மிகப்பெரிய பலம் என்பது தங்களை சுற்றி உள்ளது தங்கள் கட்டுக்குள் உள்ளது என்பதை உள்ளதை உணர்ந்த பின்பு அமைதியாக இருக்கவேண்டியுள்ளது என்பதே.

அன்பர்களே இதை எழுதுவது தாங்கள் உண்மையை உணர்ந்து அதன் வழியை வடித்தெடுத்து உண்மை யோகத்தை கற்று உணர வேண்டியே எழுத நேர்ந்தது. இதனுடன் என் புகைப்படத்தை இனைத்ததன் காரணம் செயல் யோகம் அதன் வடிவெடுத்தவுடன் அதன் உருவத்தை இயற்கை நிலைக்கே தள்ளிச்சென்று சாத்திவிடும் என்பதை புகைப்படத்தை பார்த்து உணர்ந்துக்கொள்ளலாம். இறுதியாய் அதன் பாகங்களை மட்டும் நம்மால் எடுக்க முடியுமென்பதை தவம் இயற்றுபவர் உணர்ந்துக் கொள்வார் என்ற காரணமும் மாகும்.

அன்பர்களே தாங்கள் கேட்டுக் கொண்ட படி இம்முறை தமிழில் எழுதியிருக்கிறேன்.3 comments:

br said...

Dear Ayya: i have been diagnosed for cancer lymphoma one week back. If its not a burden do you have any advise on treatment or suggestions considering your wisdom and knowledge. I couldnt reach you in your email - i had sent a hang out invite but understandable not accepted yet. Im worried about chemotherapy and radiations and possible cure options.

if this comment is a botheration - my apologies and please delete. out of helplessness asking considering a curious reader to your blogs on vasi yoga and ancient secrets

sorry for trouble
b

ragu vera said...

Sir
Recently it happened to read your blog about oil lamp meditation. when i see oil lamp anywhere whether it is temple or home or any other place it seems green color to me (the whole flame). It is happening from 3 years before(2013). i don't know why? But I have never done any lamp meditation or something like that. Suddenly from a day all the flame seems green to me. Think it is some eye problem. When ask my friends they say it may be optical illusion. So please clarify me if you know something about the green vision. Thanks

Rasu Madurai said...

தமிழில் பதிவிடுவதால் ஊன்றி புரிந்துகொள்ள முடிகிறது ஐயனே
தங்கள் பணி சிறக்க ஐயன் அருளட்டும்

ஓதியடிமை