Monday, January 10, 2022

இருப்பு 4

கடுமையான சாதகம் செய்து முடித்த சாதகனால்  மட்டுமே இதை எளிதாக  நடத்தி விட முடியும் என்று சமநிலைக்கு ஒப்புணர்ந்த ஒருவன் அதை எப்போதும் ரகசியமாய் வைத்திருப்பான்....

மஜ்ஜிம நிகாயம் 5 ஆம் பாகம் படித்துக்கொண்டிருக்கிற இந்த மூன்றாவது நாளிலும் திடீரென்று காலையில்  தொடர்  இடி சத்தம் கேட்ட கொஞ்ச நேரத்தில்  மழை பொழிய ஆரம்பித்தது....பழக்கமில்லாத இந்த குளிரினால் ஜீரண சக்தி குறைபாடு ஏற்படுகிறது....தட்பவெப்ப நிலை உடம்பிற்கு ஒத்து கொள்ள வேண்டும்.....நேற்றிரவு செய்து மீதமிருந்திருந்த புலாவை சூடு செய்து சாப்பிட்டேன்.....துணியெல்லாம் காயவில்லை......

காலையில்  விழிப்பு ஏற்பட்டவுடன்  தவம் செய்து முடித்தேன்....யோகம் செய்யாதே என்று உடம்பு ஒத்துழைக்காமலிருக்க மனம் பல வகையில் வழி செய்யும் ....காலத்தை எப்படி யாரால் கைக்கொள்ள முடியும் என்பதை யோகப்பியாசம் செய்கிறவர் அறிந்துக்கொண்டாலொழிய அது கை கூடாது.... 19 வருட முன் நான் எந்த புரிதலில் இருந்தேனோ அத்தகைய சூழலில் இன்றைய யோகப்பயிற்சி செய்யும் பலர்  இருக்கிறார்கள்......

நல்ல நேரம், ஓரை , பட்சி என்று அதன் மீது உண்மையென்று ஈர்ப்பு கொள்கிறார்கள்.... கலையை கடந்து தானே காலத்திடம்  செல்ல முடியும். பட்சிகள் இயக்கத்திற்கும் இடைவெளி ஏற்படுகிறது.....உடம்பிலிருந்து அண்டசராசரம் எத்தகைய தொடர்பு நிலையில் இயக்கம் கொள்கிறது என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது ...பூட்டியிருக்கும் கதவிற்க்கு முன் போய் நின்று கொண்டு இருட்டில் தடுமாறி சாவியை எடுத்து பூட்டை திறக்க முயற்ச்சிப்பதுப் போல இருக்கிறது......அது  திறந்திருந்தப் போதும் அந்த இருட்டை அடைந்ததால் அந்த .தவு பூட்டி தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு தலையால் முட்டி கொண்டே இருக்கிறோம்.... படம் இங்கே எப்போதும் கருந்திரையில் தான் ஒடிக்கொண்டிருக்கிறது. அதே கருந்திரையில் தான் நாம் நினைக்கும் படத்தை ஒரு முறை ஒட்டி பார்த்து விட்டால் பிற்பாடு அதன் வழியில்  பின்னோக்கிப் போய் கரைந்து சேர்ந்துக் கொள்ளும்.....

இங்கே நாம் தான் இருக்கிறோம்...நாமே செய்தியை அனுப்பினோம்.... அது உருவாக்கி வைத்துக்கொண்டுயிருக்கிற  படம் அதன் இஷ்டத்திற்கு திரையில் ஒடுவதை நாம் காலத்தில் இருந்து கொண்டு  பார்க்கிறோம்....இயக்கமற்ற நிலையில் மட்டுமே செய்தியை ஒட விடும் போது அது உள்வாங்கி வைத்துக்கொள்கிறது ....இயக்க நிலையில் உருவாக்கப்படும் அந்த படம் வெறும் பிலிம் சுருளாக சக்தியற்றதாகி போய்விடுவதால் அதன் சாரம் குறைந்து விடும்....

எங்கள் அபார்ட்மெண்ட் கேட் வாசல் எப்படியிருக்கும் என்ற பிம்பத்தை நேற்று என்னால் மனத்தில் கொண்டு வர முடியவில்லை.... சென்னையில் பெற்றோருடன் வசித்த அந்த காலனி கேட்டும் அதை சுற்றியுள்ள வீடுகளும் மிக தெளிவாக தெரிந்தன.....மனிதனால் மூளையைக் கொண்டு எதையும் உள்நோக்கி பார்க்க முடியாது என்பதற்கு இதுப்போன்ற மாற்று காட்சிகள் நமக்கு உணர்த்துகிறது.....

சிறு தெய்வங்கள் ஒரு எல்லைகோடுவரைச் சென்று நின்று கொள்கின்றன.. அதற்கும் எல்லையுண்டு என்பது தான் நாம் புரிந்து கொள்வது  .....அத்தெய்வங்கள் சென்று வரும் காலம் கூட குறைவாகவோ கூடுதலாகவோ இருக்கிறது.....அதனதன் அடிப்படையில்  மனிதனும் இருக்கிறான்.

தவமியற்றினால் கர்மம் கரையாது என்று புத்தர் தன் போதனை  ஒன்றில்  சொல்கிறார். பிறகு எப்படி தான் அதை கொண்டு  நிறைவு செய்கிறார்கள்

 

1 comment:

Vethathiri Maharishi - Anuradha Selvakumar said...

வாழ்க வளமுடன்��