Saturday, August 19, 2023

பரம்பொருள்

 ஒரு வருடம் கழித்து வீட்டில் வைத்திருந்த மண் தொட்டியில்  இருந்த கொடியில் ....முதன் முறையாக மலர்கள் மலர்ந்துள்ளது..... கடந்த முறை வீட்டிலிருந்து நாக்பூர் செல்லும் முன்னர் .... சீக்கிரம் கொடியில் பூக்கள் மலர வேண்டும்...... இல்லை யென்றால் செடியை வெட்டி தூர எறிந்து விடுவேன்.....மேலேயும் கீழேயும் பரந்து விரிந்து கிடந்தால் மட்டும் கொள்ளாமோ?  காத்து கிடக்கும் எங்களுக்கு நீ என்ன கொடுத்தாய்..... என்று அதன் கிளையைப் பிடித்து கடுமையாக வஞ்சி விட்டு  வந்தேன்.......இன்று வீட்டின் கொடியில் பூக்கள் முதன் முதலாக  மலர்ந்துள்ளது....என்று  அதை போட்டோ எடுத்து மனைவி அனுப்பியிருந்தார்.... படத்தை பார்த்தவுடனேயே புரிந்தது.....மனம் மலர்ந்தவுடன் பூக்கள் மலர்ந்து விட்டது.... என்ன வில்லதனம் இது. ஜெகமே வியாப்பித்திருக்கும் இந்த காற்றைப் புசித்து சகல ஜீவராசிகளும் உயிர் கொள்கின்றன. அதே முறையில் நாமும்  அந்த சூட்சும காற்றை பிரித்து புசிக்க ஆரம்பித்து விட்ட பிறகு .... நம் வேண்டுகோளை அவைகள்  எளிதாக ஏற்றுக் கொள்கின்றன...... பிரம்மத்தை கண்டவன்..... பரம்பொருளோடு ஒன்றியிருப்பவன்   கோரிக்கையை  ஏற்று கொண்டு விட்டது ... இயற்கை புலன்களோடு ஒன்றியிருக்கிறது.... . மனம் மலர்ந்து உதிர்ந்து மீண்டும் மலர்தலையே குறிப்பிடுகின்றன.....

உலகில் நாம் காணும் அனைத்தும் ஒரேவொன்றின் சாரம்சம் தான்.... உடலை சரி செய்துக் கொள்ள வேண்டி  கர்மாக்கள் உடல் நோயால் மனமைதியின்மையால் ஏற்ப்பட்ட உணர்வுகளை தொடர்ந்து சரி செய்த வண்ணமே இருக்கின்றன..... நடப்பவை யாவுமே கண்ணில் ஏற்படும் மாயை...அப்பியாசம் செய்பவர் உடம்பில் அசையும் அந்த காற்றை ஆற்றலை சக்தியை கவனிக்காமல் சுழற்ச்சியை கவனிக்கிறார்......அதனால் அது தடைப்படுவது அறியாமல் சிரமப்படுகிறார் .... அந்த ஆற்றல் நரம்புகளின் வழியாக ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் போது ஏற்படும் அந்த தடை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டதும் உள்ளுக்குள் ஏற்பட்ட காயங்களே...... அதன் ஊர்ந்துச் சென்ற ஒட்டம் இறுதி முடிவு அடையும் வரை மனமும் உடலும் போராடி தான் செல்கிறது.....

2 comments:

Vethathiri Maharishi - Anuradha Selvakumar said...

வாழ்க வளமுடன்

Vedha said...

Supreme

After one year the vine in the earthen pot kept at home....flowers bloomed for the first time.....last time before going to Nagpur from home....the vine must bloom soon....or else I will cut the plant and throw it away. ….can it only be spread out above and below? What have you given us who are waiting.... I grabbed its branch and came back with a strong smile....... Today the flowers have bloomed for the first time on the vine of the house.... My wife had taken a picture and sent it.... I understood as soon as I saw the picture. .....When the mind blooms, the flowers bloom.... What a villain this is. All living beings come alive by eating this air which pervades the universe. In the same manner, after we have started to separate and eat that suksuma air.... they easily accept our request.... one who sees Brahman..... one who is united with the Supreme has accepted the request... united with the natural senses.... . They refer to the blossoming of the mind and its blossoming again.

All that we see in the world is the essence of the same.... Karmas are the color of constantly fixing the emotions caused by physical illness due to restlessness in the body.... Everything that happens is an illusion in the eyes... The person doing Abhyasam ignores the energy and circulation of the wind that moves in the body. He observes......so he struggles without knowing that it is blocked....the obstacle that occurs when that energy is crawling through the veins is the self-inflicted and internal wounds....until its creeping graft reaches its final end and the mind. The body is struggling and goes on….