Monday, March 23, 2026

உடலும் மனமும்


உடலிலிருந்து வெளியேறுவது எல்லாம் நம் உடல் நலத்திற்கு உகந்தது இல்லை என்று கூறி வைத்திருக்கிறார்கள்.... 2021 இல் ஏப்ரல் மாதமாக இருக்கக் கூடும்... யாத்கீர் மாவட்டம் ... வறண்ட காட்டில்  சிறுநீர் கழித்தேன்... காடுகளில் வேலை நடக்கும் போது ... வேறிடமேது .... ஊர்வன தெண்டில் மற்றும் சிறு மிருகங்கள் உடனே கழித்த இடத்திற்கு  வந்தன.... காரணம் நீர் வாசம்.... பாம்புகள் வந்து விட கூடாது என்று நினைத்துக் கொண்டேன்...  மாலையில் வேலை முடித்து அதே வழியில் திரும்பும் போது... கழித்த இடத்தில் கறுப்பு காட்டெறும்புகள் சுற்றி இருந்தன.... எனக்கு நீரிழவு இருக்கிறது....  அதனால் எறும்புகள் வந்திருக்கலாம்.... நீருக்கும் வாசம் உண்டு.... நீர் நிலைகளுக்கும் வாசம் உண்டு.... காடுகளில் வெளிக்கி போக மாட்டேன்.... அது ஆபத்தை விளைவிக்கும்.... காடுகளில் பணியாற்றுபவர்க்கு இது தெரிந்திருக்கலாம்....  திறந்த வெளி சுற்றளவில் ஈரப்பதம் இருக்காது.... உடலின் வியர்வை உடனே ஈரப்பதமாகி காற்றில் கரைந்து மிருகங்களை வரவழைத்து விடும்... அதனால் ஆபத்து அதிகம்....  சில வருடம் முன்பு விஷம் கலந்த மருந்தை சாப்பிட நேர்ந்தது.... அந்த விஷம் என் வலது காலில் .ஓட்டை போட்டு ... தினம் கழிவு அந்த காலின் துளை வழியே வெளியே வடிந்து ...பின்பு ஒரு மாதம் கழித்து நின்று மெதுவாக கருப்பாக சதை மாறி மூடி அடைத்துக் கொண்டது... உடல் தேவையில்லாததை வெளியேற்ற பார்க்கும் என்று வைத்தியர் சொன்னார்.... உடம்பில் விஷம் இருந்தால் வால் மிளகை நீரில் கொதிக்க வைத்து ... நீரை அருந்தலாம் என்று சொன்னார்... வில்வ இலையையும் பருகலாம் .... வெண்ணெய் சாப்பிட வேண்டும் ...என்று வைத்திய முறைகள் நிறைய உள்ளன.

கிரகங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை.... பரிகாரம் பிரயாசித்தம் எதுவும் மக்களுக்கு உபயோகமில்லை..... அவரவர் பலாபலனை அவரவர் அனுபவிக்க வேண்டி வரும் .. மிச்ச மீதியை பிள்ளைகள் அனுபவிக்கும்... ...  அதனால் தவிர்க்க இயலாமல் கட்டாயம் கருதி சிலர்க்கு ஜோதிடம் சொல்வேன்.... மற்றபடி ஊரெல்லாம் டுபாக்கூர் ஜோதிடர்கள் சொல்வது  பற்றி நமக்கேன் கவலை... சந்து பொந்தெல்லாம் புது கோவில்கள் உருவாகியிருக்கின்றன.... பழமையான கோவில்கள் பொலிவிலக்கின்றன .... மனத்தை மட்டுமே பார்த்துப் பழக  வேண்டும் .... பொறி அடங்கினாலொழிய சித்தம் வாய்க்காது.... மூன்று வேளையும் சாப்பிட்டால் முக்காலமும் ஆண்கள் பெண்கள் கனவில் வருவர்.... முரட்டு தீனி சாப்பிட்டால் காதல்கள் வலுப் பெரும்.... பக்தி மான் வேஷம் போட்டால் கொஞ்ச காலம் நன்றாக இருப்பதுப் போல தெரியும்.... நல்லபடியாக செல்லாது.. காலம் பதில் கொண்டு வரும்.... தான் தோன்றித்தனமாக யோசித்து அதை சரிவர நிவர்த்தி செய்யாமல் இருப்பதற்கு தண்டனை கட்டாயம் உண்டு.... சனிப் பெயர்ச்சி ஆரம்பித்தது இரண்டு மாதம் முன்பே... பலன் கொடுக்க ஆரம்பித்து விட்டதை நாம் பார்க்கிறோம்.... நான் பைக்கில் இருந்து கீழே விழுந்தேன்... காலில் அடி... சிலர்க்கு உடல்நிலை மோசமாகி கொண்டே போகிறது.... நமக்கு எல்லாம் தெரியும் என்கிற அரைகுறை ஆட்கள் சொல்வதை என்றும் நம்பாதீர்கள்... அதற்கு தாமரை பதிப்பகத்தில் புத்தகம் வாங்கி படிக்கலாம் ... ஞானம் என்பது எப்படி வருகிறது என்று படி படியாக தான் ஒருவர் அறிய முடியும்... அதற்கு புத்தியை நல்லவிதமாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும்....ஆரம்ப படியில் கற்றுக் கொண்ட இடத்திலேயே நின்று தொங்கினால் பயனில்லை.... பிறகு மனமும் முதர்ச்சியடையாமல் அறிவும் தெளியாமல் வீணாக போய்க் கொண்டிருக்கும்  பலரை பார்த்திருக்கிறேன் ....அவர்களை அப்படியே விட்டு விட வேண்டும்.... அவரவருடைய கர்மா...போய் சேரட்டும்... கருணை கொண்டு மனத்தால் நாம் உதவிடும் போது அதைப் பெற்றுக் கொண்டு நம்மைச் சாடுவர்.... கொஞ்ச கொஞ்சமாக அவர்கள் அறியாமலேயே ஆன்மீக போர்வையிலேயே  அழிந்துப் போவர்

🌿தில்லைராஜ்

Wednesday, March 18, 2026

எங்கா

 எங்கா

எட்டாம் வகுப்பு படிக்கும் வருடத்தில் மூன்று திபெத்தியர்கள் எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார்கள்... மூன்று நாட்களில் மனக் குவிப்பது, தவம் செய்வது, தூக்கம் என்பதை ஒவ்வொரு மாணவர்க்கும் கற்று கொடுத்தார்கள்... முதல் நாள் வீட்டிலிருந்து ஒரு கர்சீப்பும், ஒரு பூ ஒரு பென்சில் கொண்டு வருமாறு சொல்லியிருந்தார்கள்  ... சிறவர்கள் எல்லாம் வரிசையில் நின்றிருந்தோம்... என் முறை வந்தது.... ரோஸ் பூவும், பழைய கர்சீப் ஒன்றும் கொடுத்தேன்.... பென்சிலை வாங்கி அந்த கர்ச்சீப்பில் என் பெயரைக் கேட்டு எதையோ எழுதினார்கள்... என் கைகளை எடுத்து தன் கையில் வைத்து கொண்டார் ஒருவர் ... மற்றொருவர் அருகே வந்து என் காதில் காற்று மாதிரி எதையோ ஊதி.... எங்கா என்ற வார்த்தையை ..இரண்டு மூன்று முறை  சொன்னார்கள்.... ஒரு பெண்ணும் அவர்களுடன் அமர்ந்து அதைப் போன்றே எல்லார்க்கும் சொல்லி கொடுத்தார்.... இது மந்திரம்... இதை யாரிடமும் நீங்கள் சொல்ல கூடாது என்று கண்டிப்புடன் சொன்னார்கள்... தனி தனியாக சொல்லி கொடுத்து அமர சொன்னார்கள்.... சில நிமிடங்கள் கண்ணை மூடிக்கொண்டு மந்திரத்தை உச்சரிக்குமாறு  சொன்னார்கள்.... ஐந்தாவது முறை சொல்லும் போதே கண்கள் மேலேறி சொறுகிக் கொண்டது.... செம தூக்கம்னு என்று நினைக்கிறேன் ... மத்தியானம் சாப்பிட்ட சாம்பார் சோறாக இருக்கும் போல...

எழுப்பி விட்டார்கள்... உட்கார்ந்துக் கொண்டே எப்படி தூங்கியிருக்கிறேன்... வீட்டிற்கு சென்று அம்மாவை கடிந்து கொண்டேன்... சோத்தை சாப்பிட்டு பள்ளியில் ஒரே கிறக்கமாகி விட்டது.. .இரண்டாம் நாள் மதியம் வகுப்பிற்கு அவர்கள் மூவரும் வந்திருந்தார்கள்.... கண்ணை மூடி மனசுக்குள் எங்கா என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறு எல்லோரையும் சொன்னார்கள்... முன்தினம் போன்றே ஐந்தாவது நிமிஷத்தில் கண்ணை சொக்கி தூக்கம் பற்றிக் கொண்டது.... ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் பார்த்து கொண்டோம்... சிரித்துக் கொண்டோம்.... தூக்கம் வந்தால் தூங்குமாறு சொன்னார்கள்... எனக்கு சொல்லாமலேயே கண்ணை சுழற்றி தூக்கம் பற்றி கொண்டது.... எல்லோரையும் விழிக்குமாறு சொன்னார்கள்... யார் யார்க்கு என்ன கனவு வந்தது என்று கேட்டார்கள்.... எனக்கு நடந்து செல்கிற பெண்கள் கனவில் வந்ததால் சொல்லிக்கிற மாதிரி இல்லை.... சொல்லாமல் மறைத்து விட்டேன்... மூன்றாம் நாள் மதியம் எங்கள் வகுப்பிற்கு வந்தார்கள்.....கண்ணை மூடிக்கொண்டு தவம் செய்ய சொன்னார்கள்... ஒருவர் அருகில் வந்து நெற்றி பொட்டில் எதையோ செய்தார்... திடீரென்று நெற்றி பொட்டில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.... கனலாக எரிந்தது போல தெரிந்தது... உடம்பெல்லாம் பரவி விரிந்து .... ஜன்னல் வழியே நான் வெளியே சென்று .... அழகான மாணவிகள் செல்வது எல்லாம் தெரிந்தது.... கண்ணை திறந்து பார்த்தேன்... மூவரும் எல்லா மாணவர் நெற்றியிலும் விரல் வைத்துக் கொண்டே சென்றார்கள்..

திரும்ப கண்கள் தானாக மூடிக் கொண்டன... மீண்டும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால் யாருமில்லை... எழுப்பினார்கள் ... யார் யார்க்கு என்ன கனவு வந்தது என்று கேட்டார்கள்... ஏதேதோ மாணவர்கள் சொன்னார்கள்... அவர்கள் சொல்வதை மூன்று திபெத்தியர்களும் கவனமாக கேட்டு கொண்டனர்...என்னிடம் ...இன்று நீ தூங்கவில்லை ... எங்கு சென்றிருந்தாய் என்று கேட்டார்கள்... முதல் மாடியிலிருந்து எப்படி கீழே வந்து ரோட்டில் செல்லும் ஆட்களை பார்க்க முடியும் என்று அப்போது தான் யோசனை வந்தது ... வெளியில் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டாம் ... தனியாக இருக்கும் போது மட்டும் செய்யவும்... வெளியில் சென்றால் திரும்பி விட வேண்டும் என்றார்கள்... எனக்கு பக்கென்றது... அவர்கள் போன பிறகு பக்கத்து நண்பன் என்னிடம் .. என்ன மந்திரம் சொன்னார்கள் என்று கேட்டான்... சொல்ல மாட்டேன் என்றேன்... அவன் தன் மந்திரம்... "எங்கா" என்றான்... எனக்கும் அதே தாண்டா என்றேன்... பின்னர் வகுப்பு முழுவதும் ஒருவரை ஒருவர் கேட்க்கும் போது எல்லார்க்கும் எங்கா என்றே சொல்லி சென்றிருக்கிறார்கள். பின்னர் சில மாதங்கள் எப்போதாவது எங்கா எங்கா என்று சொல்லி பார்ப்பேன்... தூக்கமான தூக்கம் வரும்...

அவர்கள் தங்கள் சக்தியை அதிகரித்து அந்த வார்த்தையை உபயோகிக்கும் போது இழையில் இணைந்து விடுகிறோம்... அது ஒரு வார்த்தை ... உள்ளிருந்து உள்ளுக்கு செல்வதால் கண்களுக்கு பின்னாடி உள்ள உயிரானது வெளியில் கிளம்பி ஜன்னல்வழியே சென்று ரோட்டில் சென்று கொண்டிருப்பவர் எதிர்பட்டிருக்கலாம்... அந்த பெண்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள்... நான் நினைவில் சென்று அங்கு நிற்கிறேன்... அவர்கள் கனவில் வந்தவர்களா ... அல்லது நான் விழித்து இருக்கிறேனா என்று பல காலம் கழித்து யோசித்தேன்... ஆழ்ந்த தூக்கத்தில் இது நடப்பதுண்டு .... நான் குறட்டை விடுவது பாசமயங்களில் எனக்கு கேட்கும்... பேசிக் கொண்டிருப்பவரிடமோ பார்த்து கொண்டு இருப்பவரிடமிருந்து விலகாது.... மனம் அங்கு நிற்கிறது.... நான் இருப்பதாக நினைத்து கொண்டிருந்தேன் ....மனம் வேறாக பார்த்துக் கொண்டு இருக்கிறது...

கடந்த காலத்திற்கோ அல்லது  எதிர்காலத்திற்கோ நாம் சென்று திரும்பும் காலம் என்ற ஒன்று  இல்லை. நினைவு ஆற்றல் அதன் முழுமை அல்லது ஒரு  பகுதியாக கூட அங்கிருப்பதில்லை. நாம் இப்போது கடந்த காலத்தைப் பற்றி நினைத்து கொண்டிருக்க முடியும்.  எப்போதாவது மட்டுமே நாம் கடந்து வந்த இடத்திற்கு சென்றிருக்கிறோமா என்பது தெரியவில்லை... நாம் அறியாமலேயே அந்த விளக்கு திபெத்தியர்களால் ஏற்றப்பட்டு தொடர்ந்து என் வாழ்க்கையில் வந்து கொண்டிருப்பதை நான் அறியாமலேயே இருந்தேன்... காலம் நம்மை கடந்து செல்வதிலிருக்கும் போது எதிர்காலத்திற்கு  காலத்தின்  கோடொன்று தொடர்பாக ஊடே நகர்கிறது. இப்போது அது எவ்வளவு காலம்  நம்மோடு தொடர்ந்து நீடிக்கும். யங்கா என்ற வார்த்தை எதை கொண்டு வந்தது.... இப்போது இந்த இரண்டு இடங்களுக்கு இடையில் நாம் இருப்பதே இல்லை.   மனதின் வரம்பு நிர்ணயிக்க படாததால் அதன் மூலம் நாம் பார்த்த காட்சி, அனுபவித்த காட்சி ஒரே நேரத்தில் காண கிடைப்பதில்லை... அது எக்காலமாக நாம் அக்கணத்தில் இருந்தோம் என்பதை கொண்டு காட்சி படுத்துகிறோம் .... மனம் எப்போதும்  பிரதிபலித்து கொண்டே செல்கிறது.... எல்லாம் உடம்பினுள் இருந்தே வருகிறது... டப்பியில் அடைத்து வைத்து வருடங்கள் கழித்து திறக்கும் போது அதே உணர்வெழிச்சியுடன் அந்த காட்சி கிடைக்கிறது.... இது காலத்தின் பல பரிமாணம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம் ...

சீனர்களின் அக்கு பிரஷர் கலையை கற்க நேர்ந்தது.... அந்த வார்த்தை இரண்டு காலங்களுக்கு நடுவே கொண்டு செல்லும் என்பதை பல காலம் தேடலில் இருக்கிறது.... நாம் எங்கும் தோன்றுவதில்லை .. பிரதிபலிப்பதில்லை,  நடுவில் நின்று காலத்தை பார்த்து கடந்து கொண்டே இருக்கிறோம்... தவமியற்றும் போது திபத்தியர்கள் மனத்திற்குள் தோன்றாமலிருந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது... அவர்களும் வந்து விட்டால் நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கிய காலம் இன்னும் பிடிக்கும்....

Tuesday, February 24, 2026

மகாலிங்க மலை தென்காசி

 

20 வருசம் முன் இந்த மலைக்குப் போயிருக்கிறேன்.... தென்காசிக்கு கிழக்கில் இருக்கிறது... அப்ப படிகள் பாதையெல்லாம் கிடையாது.... முட்களும் புதர்களும் பாறைகள் இடையில் அடர்ந்து கிடந்தது... மலை உச்சியில் மிக வயதான, நடக்க முடியாத கிழவர் ஒருவர் பாறையின் மீது அமர்ந்திருந்தார்...  எப்படி மேலே ஏறி வந்தீர்கள் என்று கேட்டதற்கு... பதில் சொல்லவில்லை.... கையில் கம்பு ஒன்று வைத்திருந்தார்... என் கையில் இருந்த நீர் பாட்டிலையும் ... சிறிது பணமும் கொடுத்தேன்.... அதற்குப் பிறகு இப்ப தான் இந்த மகாலிங்க மலை வீடியோ பார்த்த பிறகு ... மக்கள் எதற்காக அங்கே போகிறார்கள் என்று தெரியவில்லை.... இறை வழிபாடு என்பது வேற சித்தர் வழிபாடு வேற என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்... சித்தர்களை வழிப் பாட்டு முறையால் அடைய இயலாது... அந்த பாறை மேல் சக்கரை பொங்கல் இருக்கு... எடுத்து சாப்பிடு என்றார் அந்த கிழவர்... சிறிய வாழை இலையில் பொங்கல் ஆவி பறக்க அங்க வைக்கப்பட்டு இருந்தது.... இதுப் போன்ற சித்துக்கள் செய்பவர்களை வாழ்க்கை முழுக்க பார்த்து வருகிறேன்.... தென்காசி பெரிய கோவிலைச் சுற்றி நிறைய சித்தர்கள் சமாதி அடைந்துள்ளனர்...  பழைய பேருந்து நிலையத்தில் பக்கத்தில் கூட ஒருவர் சமாதி உள்ளது.... இந்த முறை அவரை கடக்கும் போது என்ன இப்படி கண்டமேனிக்கு சமாதி அடைந்திருக்கிறீர்களே என்று நினைத்துக் கொண்டேன்.... வாசி யோகம் செய்து வரும் காலத்தில்...இது போன்ற சித்துக்களை குருநாதர்... அவரை பார்க்க வரும் மக்களை பயமுறுத்த இப்படி சித்துக்கள் செய்வதை கண்டிருக்கிறேன்.... பள்ளியில் படித்துக் கொண்டிருந்த  மகனை  அழைத்து சென்ற போது அவனுக்கு எந்த சாக்லெட் பிடிக்கும் என்று மஞ்சள் பை ஒன்றில் கையை விட்டு  எடுத்துக் கொடுத்தார்.... இவையெல்லாம் அடர்த்தியான அணுக்கள் கூட்டை சிதைத்து அதை நீர் நிலைக்கு திருப்பி உருமாற்றி கொடுப்பது... என் மனைவி இதெப்படி சாத்தியம் என்று என்னிடம் கேட்டார்.... இயற்கையை கை கொள்ள வேண்டும்.. அதற்கு இருபது வருடமாவது ஆகும்... இந்த மனித உடம்பு உணவுகளால் நிரம்பி உள்ளபடியால் அதை கொஞ்சம் கொஞ்சமாக காற்றால் நிரப்பி வரும் போது ஒரு காலத்தில் அது இயக்கமற்ற நிலைக்கு சென்று அமர்ந்து விடும்...  அன்று மலைக்கு  மூன்று பேர் நாங்கள் சென்றிருந்தோம்... அதில் இருவர் பாதை மாறி சென்று விட்டார்கள்... ஒருவர் கேரளாவை சேர்ந்த புகழ் பெற்ற மாந்திரீகர்.... மற்றவர் வேறு பக்கம் சென்று விட்டார்... காலமும் நேரமும் அழைத்தாலொழிய நம் இஷ்டபடி நமக்கு எதுவும் வாய்க்காது ... அது இறை கைகளில் கூட இல்லை...இப்படியே மூட பழக்கங்களை பழகிக் கொண்டே போனால் மனத்திற்குள் எப்படி ஒடுங்குவது .... ஓர்மைக்கு ஒருவனாக தான் பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும் .... மனதிற்குள் ஒடுங்கியிருக்க பழகி விட்டால் உடைகளே பாரமாய் ஆகி விடாதா.... மனத்தை பயமுறுத்தி கலைத்து கொண்டே இருந்தால் தேடுபவன் தன்னுள் ஒளியை காண்பதை தவிர்த்து புறத்தில் சுமையை தூக்கி அலைபவனாகிறான்.... பிராப்தம் இருப்பவனே கடந்து சென்று தன்னுள் வீற்றிருக்கிறான்.  அதற்குப் பிறகு யாரையும் பொருட்டாக நினைப்பதேயில்லை.... தேவைப்படுவதேயில்லை.யோகம் கற்பிக்கும் பல ஆசிரியர்கள் தவறாக விவரிக்கிறார்கள்... அப்படியொன்று உடம்பினுள் இல்லை... குண்டலினி என்ற ஒன்றே இல்லை.... சக்கரங்கள் என்பது கூட இல்லை... தவம் இயற்றுபவர் அதை உணர்ந்து வரும் போது  கண்கள் வழியாக தான் பார்ப்பதை புரிந்து கொள்கிறார்.... வருடங்கள் கடந்த பின் அப்பியாசம் வெளியே நிற்கும் ஆளை காட்டுகிறது... வெளியில் இருப்பவர் உடம்பை கயிறு கொண்டு கட்டிவிட்டு பார்ப்பார்... மாடுமேய்ப்பவர் கயிறு கொண்டு மாட்டை கட்டி அதை கைகளில் வைத்து கொண்டு மேய்வதை பார்ப்பதைப் போல தான்... நிமிடங்களில் உயிரை எழுப்பி வெளியே பரப்பி  இயக்கமற்ற ஆற்றலுடன் தொடர்பு கொள்கிறார்... இது பல காலம் அப்பியாசம் செய்து அடக்கி கட்டுக்குள் வைத்திருப்பது.... இயற்கையின் கதவு திறந்து வழிவிடாது.... பல காலம் போராடி தான் பெறுகிறார்கள்.... உடம்பிற்குள் காண பழகியவர் பின்னர் வெளிய பார்க்க பழகி அனுபவத்திற்கு வருகிறார்.... அப்போது உயிர் என்பதை வெளியே காண ஆரம்பித்து விடுகிறார்.... இது போதும்... எழுதுபவனுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை ... இதை  எழுதுபவர் வெளியே இருந்து தான் எழுதுகிறார்....

Tuesday, February 17, 2026

சமாதி

 ரமணர், வேதாத்திரி மகரிஷி என்று பலர் நான் யார் என்ற தலைப்பில் பேசியிருக்கிறார்கள்... . எதை நோக்கி பேசுகிறார்கள்  என்று தெரியவில்லை.... நான் யார் என்பதே அங்கில்லை என்கிறார் ஜே.கே... புத்தரை படித்து கொண்டு வரும் போது... அது சாதாரண மானதாக இல்லை என்று புலப்படுகிறது.... தேவைப்படாமலேயே இருந்து விடு என்கிறது... எங்கிருப்பது என்பது வெளியில் இருக்கும் எதோ ஒன்றை கண்டுபிடிப்பதல்ல .... உள்ளுக்குள் விழித்து இருக்கும் ஒன்றை உணர்வது... நான் யார் என்ற ஒன்றுமேயில்லை..... எப்போதும் உள்ளுக்குள் இருப்பது.. அது கண்கள் வழியாக மட்டும் பார்ப்பது என்று நினைக்க கூடாது... உடம்பெல்லாம் ஈர்த்து கிரகிக்க கூடிய ஆற்றலுடையது...மனம் தனியே வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் அதற்குப் பிறகு மீண்டு வராது.... மனக்குவிப்பு ஏற்பட்ட காலத்தில் இதை எழுதுபவன் அறிந்திருந்தான்... யாராவது ஆன்மீகம் சம்பந்தமாக கேள்விகள் கேட்டால் மறுக்காமல் எதாவது பதிலளி என்று அவனுக்கு புகட்டியிருக்கிறார்கள்.... வெறும் அறம் பாடி கொண்டிராதே ... அது தூக்கத்தை சாப்பிட்டு விடும் என்றதாகிவிடுகிறது... எழுதுபவனுக்கு சம்மந்தமேயில்லை.... நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.  பிரபஞ்சத்தில் அவனும் ஒரு அங்கம் அவ்வளவு தான்... தனியே இயங்குகிறான் ...  எழுதுபவன் இயக்கமற்றவனாகி விடும் போது அவனை கிரகித்து எழுதுகிறான் .... இங்கு வெறும் நடந்து முடிந்த வையே எழுதப்படுகிறது... எழுதும் போது கணத்து கணம்  மறந்து போய் மீண்டு திரும்பி வருகிறான்...  அவன் அகங்காரம்... ஆணவம் கொண்டு தான் உலகைப் பார்க்க பழகியிருக்கிறான்... மறக்க பழக .. ஞாபகத்தில் இட்டுக் கொள்ளாதிருக்க.. வழக்கப்படுத்தி கொண்டமையால் தன்னிச்சையாக எல்லாம் இயங்குவதை அறிந்து ஏது மற்றவனாகிறான்... எழுதுபவன் அதை உள்வாங்கி  வெளியில் பதித்து வைத்துக் கொண்டு பறவைகளுக்கு இறை இடுவதைப்போல கொஞ்ச கொஞ்சமாக தூவுகிறான்... பசியே எடுப்பதில்லை... அமர்ந்தால் மீளவே மாட்டான்... சமாதி செய்ய இடம் பார்த்து திரிகிறான்... பார்த்து வைத்த இடம் மழை வந்ததால் வெள்ளம் குள கரையை தாண்டி வந்ததை பார்த்து... தான் உள்ளே அமர்ந்து விட்டால் அதை தாண்டி நீர் வந்து நிற்குமே ... என்று கட்டும் மேஸ்திரியிடம் கேட்டான்.... அதை யோசிப்பது எழுதுபவனுக்கு தெரிகிறது... இந்த உலகில் வாழும் பொழுதே ஒழுங்கிற்குள் நின்று முழுமடைய தலே சிறந்தது  ... அதற்காக தான் தொடர்ந்து சொல்லி வருவது  என்று அண்மையில் ஆசான் சொன்னது நினைவு கொள்கிறான்... உடல்நல குறைவு ஏற்படும் போதெல்லாம் என்னால் முடியலை என்று கீழே விழப்  போகும் நேரத்தில் மாயரூபி எழுந்து வந்து தன்னை தாங்கி பிடித்து மெதுவாக படுக்க வைத்ததை  அறிகிறான்... கண்களை திறக்காமலேயே பார்க்கிறான்...... அந்த கைகளில் குழந்தை போல சாய்ந்து கொண்டான்...