Wednesday, June 17, 2026

புத்தரின் இறை துகள்கள்

 புத்தரின் இறை துகள்கள்

இன்பகரமான, துன்பகரமான அல்லது இரண்டுமற்ற நடுநிலையான அல்லது குழப்பமற்ற உணர்வுகளின் ஒரு கலவையையே சுத்தம் என்கிறோம். வெளியுலகப் பொருள்களான உருவம், ஒலி, வாசனை, ருசி, தொடும் அழுத்தம், எண்ணம் ஆகியவை, நம் ஆறு புலன்களையும்  முறையே, கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, உடல், உள்ளம் ஆகியவற்றை தாக்கும்போது, இயற்கையின் விதிகளின்படி இந்த உணர்வுகள் எழுகின்றன. உணர்வுகளை நீர்க்குமிழிகளுக்கு ஒப்பிடுகிறார் புத்தர். 

நுரை ஒன்றுசேர்ந்து ஒரு பொருளாகத் தோன்றுகிறது. ஆனால் நீர்க்குமிழிகள் தனித்தனியாகத் தோன்றி மறைகின்றன. அவற்றைப் போலவே உணர்வுகளும் தனித்தனியாகத் தோன்றுகின்றன, மறைகின்றன.

இந்த இயல்புகளும் குணங்களுமாகிய சக்திகள் வெவ்வேறு வகைகளிலும், வெவ்வேறு அளவுகளிலும், வெவ்வேறு விகிதாச் சாரங்களிலும் மாறிமாறி இணைவதால் நுண்துகள் என்பவை "பகுக்க முடியாத மூலக்கூறுகள்" என்று பொருள்படும். இவை எப்பொழுதும் துடித்துக் கொண்டும் அதிர்ந்து கொண்டும் இருப்பவை, தொடர்ந்து எழுவதும் மறைவதுமாக இருப்பவை, ஒன்றையொன்று எதிர்த்து ஊடுருவி செயல் விளைவுகளை உண்டு பண்ணுபவை என்று கூறப்படுகின்றன. பிற்பாடு தோன்றிய திபெத்திய பௌத்தத்தின் காலச்சக்கர நூல்களில் இவை "சூன்யத்துகள்கள்" அல்லது "ஆகாசத்துக்கள்கள்" என்று கூறப்படுகின்றன. சூன்யத் துகள்களின் கூட்டுச் சேர்க்கைகளால் உண்டானவையே உலகிலுள்ள அனைத்தும் என்பது புத்தரின் கருத்து.

பிராணத்துகள்கள் என்றும் விண்துகள்கள்  என்றும் தற்காலத்தில் விளங்கி கொள்ளப்படுகின்றன. இந்த சூன்யத் துகள்கள் ஒன்றோடு ஒன்று கூடியும் ஊடுருவியும் இயங்கும் போது அவற்றிலிருந்து அணுக்களும், பேரணுக்களும், பேரணுக்கள் பல கூடி மூலங்களும்  அவற்றிலிருந்து பேரியக்க மண்டலங்கள். முழுவதும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் கோள்கள், நாம் காணும் பொருள்கள். தோற்றங்கள் யாவும்- உண்டாகி வந்துள்ளன.