Saturday, November 18, 2023

பரம்பொருள் 4

 பெங்களூர் போத்தீஸ் துணி கடை இருக்கும் மெயின் ரோட்டின் நடுவில் டிராபிக் காரணமாக ஆட்டோ டிரைவர் எங்களை  இங்கேயே இறங்கி கொள்ளுங்கள்... அங்கிருந்து  நடந்துப் போகுமாறு சொன்னார்...... மகள் விசேஷத்திற்கு பட்டு சேலை எடுக்க வேண்டி போத்திஸ் துணிக்கடை போனால்... அதைச் சுற்றி  எங்கும் கூட்டமான கூட்டம் ..... தீபாவளி பண்டிகை வேறு....நானும் மனைவியும்  பிளாட்பாரம்  மீது ஏறி நடந்து போய் கொண்டு இருந்தப் போது ....எதிரே இரண்டு பக்கமும் இரண்டு குழந்தைகளையும் பிடித்து கொண்டு நடுத்தர வயது பெண் ஒருவர் தன் கைகளில் போத்திஸ் துணி கடையின் ஒரு கட்டை பையை தூக்கியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்.... அவர் நடந்து வந்து கொண்டிருந்தபோதே  அவர் மகன் சட்டென்று  நின்று ... தான் கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை திறந்து அதிலிருந்து சிறிது குடி நீரை அங்கிருந்த கேட்டின் வாயிலில் வைத்திருந்த  அரை கவளம் நீர் நிரம்பியிருந்த ....மண் கவள சட்டியில்  வாட்டர் பாட்டிலில் இருந்து நீரை அதில் ஊற்றி நிரப்பினான் ....அந்த தாய் அவனை இழுத்துப் பிடித்து திட்டி கொண்டே எங்களை கடந்துச் சென்றார் . .... நாய்கள் தண்ணீர் குடிக்கும் அம்மா என்று அந்த சிறிய பையன்  கன்னடத்தில் விவாதம் செய்துக் கொண்டே எங்களைக் கடந்துச் சென்றான்  ...அவனைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக இருந்தது... அந்த தண்ணீர் கவளம்  நாய்கள் நீர் குடிப்பதற்காக தான் வைக்கப் பட்டிருக்கிறது என்று அவனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது? .... மாய ரூபி அவனருகில் வந்து நீர் நிரம்பி வழிந்த கவளத்தை குனிந்துப் பார்த்ததை மாயாவி பார்த்துக் கொண்டே வந்தான்..... நீர் நிரம்பின அளவை மாய ரூபி அளவெடுத்து பார்ப்பதுப் போல தண்ணீரை தொட்டு தொட்டு பார்த்தது.....அந்த பையனுக்கு இந்த வயதிலேயே இப்படியெல்லாம் உதவி செய்யனும்னு தோன்றுகிறதே.... இப்படி இவன் இருந்தால் எதிர்காலத்தில் உங்களை மாதிரி பைத்தியமாகி விடுவான் என்று என்னை மனைவி சாடினாள்.... எப்படி இது போன்ற எண்ணங்கள் அவனுக்கு உதித்தது என்று கேட்டாள்..... அது அவன் பிறவி குணம்.....பிறவியெடுத்து வருவதே அதற்கு தானே .... உயிர்களை பார்க்கத் தானோ என்று திரும்பி அவர்கள் போவதை பார்த்தேன் ...அவன் அதில் நீர் ஊற்றும் போதே ...மண்கவளம் அருகில் நின்றிருந்த மாயரூபி உடல் குலுக்கி தலையை முன்னும் பின்னும் முதுகை  வளைத்து  மகிழ்சியாக சிரித்தது .... கண்டடைந்து விட்டதை அறிந்த சந்தோஷத்திலா ? .... அந்த தாய் அவனைப் பிடித்து இழுக்கும் போது அவன் கைகளில் இருந்து வாட்டர் பாட்டிலிலிருந்த நீர் சிதறி பிளாட்பாரம் மீதும் தெளித்தது..... அந்த கேட்டின் வாயிலில் நின்று உள்ளே பார்த்தால் .... அது ஒரு பாழடைந்த பழைய கோவில் :உள்ளே சிறிய  கதவு தாழ்பாள் போட்டிருந்தது ....சிலை என் கண்களில் தென்படவில்லை .... உள்ளே இருட்டாக இருந்தது..... அதை தாண்டி சிறிது தூரத்தில் போத்திஸ் துணி கடை தெரிந்தது..... உள்ளிருக்கும் கடவுள் இந்த சிறிய பையனிடம்  மட்டுமே தண்ணீர் ஊற்ற சொன்னதா? கோடிக்கணக்கில் மக்கள் அதை கடந்து சென்றிருப்பார்கள்..... யார்க்கும் அப்படி தோன்றவில்லையே ..... சிலர்க்கே அந்த வாய்ப்பு அளிக்கப் படுகிறது...... பிரபஞ்சம் முழுமைக்கும் தேவையானதை அதுவே எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்கிறது.... தோப்பிலிருந்தாலும் அந்த சிறிய பையன் தனி மரம் தானே என்று நினைத்துக் கொண்டே... போத்திஸ் துணி கடை வாயிலை வந்தடைந்தோம்....

3 comments:

Vedha said...
This comment has been removed by the author.
Vedha said...

Illusionist - 4

In the middle of the main road where there is a pothis shop in bangalore, the auto driver told us to get down here due to traffic. Diwali festival was different....my wife and I were walking on the platform....a middle-aged woman holding two children on either side was walking with a bag from Bodhis cloth store in her hands....he While walking, his son suddenly stopped...He opened the water bottle he had in his hand and drank some water from it. He filled the water bottle from the water bottle in the earthen pot and filled it with water. ....that little boy passed us arguing in kannada that dogs drink water mom...I was happy to see him...how did he know that the water trough was kept only for dogs to drink water? ....Mayavi kept watching as Maya Ruby came near the boy and bent down to look at the overflowing water bowl..... Maya Ruby touched the water as if measuring the water level.....It seems that such a boy should be helped at this age.... My wife scolded me saying that if he is like this, he will become crazy like you in future.... She asked how he got such thoughts.... It is his nature..... Being born is what it is for....I turned to see the living beings and saw them going...while he was pouring water into it...Mayarupi who was standing near the mangavalam shook her body and bent her head back and forth and smiled happily....is it happiness knowing that she has found it? ....While the mother was pulling him the water from the water bottle spilled from his hands and splashed on the platform….Standing at the gate and looking inside….it was a dilapidated old temple: inside the small door was latched….the statue was not visible to my eyes. ....….it was a dilapidated old temple: inside the small door was latched….the statue was not visible to my eyes. .... It was dark inside….. Beyond that, Pothis cloth shop was visible….. Did the inner god only ask this little boy to pour water? Millions of people would have passed through it…..never felt like it…..only a few are given that opportunity….the whole universe takes what it needs wherever it is….even in the grove thinking that little boy is the only tree. ... We reached the gate of Bodhis cloth shop....

Vethathiri Maharishi - Anuradha Selvakumar said...

வாழ்க வளமுடன்