இது படர்ந்த நிலை.... ஒரே நேரத்தில் இரண்டு காலத்திலும் பிரவேசிப்பது ..... காலத்தை தன்னையறியாமல் வளைப்பது.... பிரியமானவர்களை அந்த வலையில் தான் பார்க்க முடியும் என்று தெரிந்திருப்பது..... அவர்கள் நம்மிடம் பேசுவது எல்லாம் அவர்கள் அறியாமல் இருப்பது.... அந்த வளைவில் நின்று வலையில் இருப்பதை அவர்களும் காணும் போது நமக்கு நினைவில் மட்டுமே வருவது.... இதை தற்போது பல பரிமாணங்களில் அறிவியலால் விளக்க முயற்சிப்பது ...... அது அப்படியெல்லாம் பிரவேசிக்க முடியாது என்பது நமக்கு தெரியும்.. அந்த வலைக்கு காலமில்லை . பூமத்திய ரேகை கொண்டு பார்க்க போக முடியாது.... அது காலத்தில் நிற்காமல் செல்வதால்...நமக்கு காலமிருக்கிறது ... அந்த காலத்தை சேகரித்து எடுத்துக் கொண்டு சென்றால் அங்கே கண்கூசும் அந்த ஒளியில் தடவிக் கொண்டே சென்று அவள் கொடுத்த அந்த கடிதத்தை அங்கேயே மறந்து வைத்து விட்ட காலத்தை விலக்கி அந்த தாளில் தப்பும் தவறுமாக எழுதப்பட்ட ஆங்கிலத்தை மீண்டும் படித்தேன்... அப்போது அவள் தாயாரிடம் தலை வாரி கொண்டிருந்தாள்... அது அப்போது இல்லை..... இது பிரச்சனை ..அந்த கணக்கு நோட்டில் இருந்து கிழிக்கப்பட்ட காகித தாளில் எழுதப்பட்ட வார்த்தைகள் கொண்டதை என் சட்டை பையினுள் வைக்க பார்க்கிறேன் . தெரியவில்லை நீயும் எண்ணெய் வைத்துக் கொள் என்று என் கைகளில் எண்ணெய் ஊற்றினாள் நான் கைகளில் ஏந்தி தலைக்கு தேய்க்கப் போனேன். எனக்கு தலையில் முடி இல்லை என்பதால் கால் தொடைகளில் தேய்த்தேன்.... அங்கு எண்ணெய் இருந்தது.... நினைவில் இருக்கிறேன் .இது தூக்கமே இல்லை ....அங்கு வலையில் காணும் பொழுது அந்த இடங்கள் மாற்றம் பெற்றிருந்தன .... மனம் தடுமாறின நிறைய மரங்கள் அறுக்கப்பட்டிருந்தது... அதே புல்வெளியில் நடந்து சென்று அந்த பெரிய மரத்தையுடைய வேர் வெளியில் தெரிந்திருந்தது அதை தாண்டி சென்று உடைந்திருந்த சிமிண்ட் படிக்கட்டில் ஏறி மேலே சென்று கதவை தட்டி நின்றிருந்த போது இதயம் வேகமாக அடித்து கொண்டது.... கதவை திறந்து என்னை பார்த்து உள்ளே வந்து உட்கார சொல்லி விட்டு போய்விட்டாள்... நான் கை கடிகாரத்தில் மணி பார்த்தேன்.... அது புதியதாக வாங்கின வாட்ச்...காண்பவன் காணப்படுகிறான் .
1 comment:
This is an expanded state... entering two time periods at the same time... unknowingly bending time itself... knowing that loved ones can only be seen in that net...
Everything they speak to us, they do without knowing... When standing in that bend and they also see what is in the net, it only comes to our memory... Trying to explain this now in many dimensions through science... We know it cannot enter like that... That net has no time. You cannot go looking for it with the equator... Because it moves without standing in time... We have time... If we collect that time and take it with us, and go on stroking it in that dazzling light there, and removing the time where I had forgotten and left behind the letter she gave, and I read again the broken English written on that paper...
At that time she was getting her hair combed by her mother... That was not then... This is the problem... I try to put that paper, which had words written on a sheet torn from that accounts notebook, into my shirt pocket. I don't know, "you also apply oil," she poured oil into my hands, I held it in my hands and went to apply it to my head. Since I have no hair on my head, I rubbed it on my thighs... There was oil there... I remember being in memory. This is not sleep at all... When seeing in the net there, those places had changed... My mind wavered, many trees had been cut... Walking through the same grass field and the root of that big tree was visible outside, crossing it and climbing the broken cement steps and going up and knocking on the door and standing, my heart was beating fast... She opened the door, looked at me, told me to come inside and sit, and left... I looked at the time on my wristwatch... It was a newly bought watch... The seer is being seen.
Post a Comment