Monday, July 27, 2015

Vaasi Yogam /Vasi Yoga -6

Vaasi Yogam /Vasi Yoga -6

சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்
சோதிவந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு
ஆதிசக் கரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே
Mahayogi Sivavakiyar

The above verses were written by Mahayogi Sivavakiyar and its published in the source of net and various publications. This has continuation of the vaasi yoga practices and insists in these verses have some of the hidden practices of vaasi yoga and the techniques.
Everyone thinks themselves so abundantly provided with, those who are the most difficult to satisfy in everything else. Some misunderstand the verses and all are mistaken the belief is rather that the judging is a right and distinguish the fact from the error has been committed.
For example the above verses describe how the breath the sense, the soul is the major controller of the physical and internal body to achieve the meditation and the yogic practices of “thuriya theetham” referred as a breath. But of recent in net and books it has been concluded as the practices of younger meditations.  
The greatest minds, yogic minds always capable of the highest excellences are open likewise to the greatest deviation. My mad mind; never perfect on generality of thoughts, clearness, fullfillness due to the imperfection on the study of the thoughts when it’s raised on the higher level of consciousness. I may useless when its control on the souls as its controls the entire universes.
The verses described below on the vaasi yogic practices by Sivavakiyar. The first five describes the importance of vaasi yoga and the relations of the god and the internal destinations. Mahayogis of Tamilnadu describes a part of vaasi yoga practices in all their verses on medicines and yogas.
The breath/prana is described here as lord shiva. The mantra “OM” is united and described here as the extreme end of the knowledge. The rotation of breath, swerving of breath brings to the stream line of the operation and level of travelling on the internal body is well described here. The practice of vaasi yoga and the practices behind is the fundamental and the level of meditations starts with. If the vaasi yoga practice has been fitted it disconnects the entire birth system and its sequences and the karma will be dissolved. It’s an accent as to drink, to eat, to drive, to concentrate, to breathe as indirectly fixed to vaasi yoga practices as parts.

முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
அச்சதுரம் உம்முளே அடங்கிவாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம்நமசி வாயமே

ஒட்டுவைத்து கட்டிநீ உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கர்த்தனங்கு வாழுமோ
எட்டுமெட்டு மெட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டுமிட்ட அவ்விலே வைத்துணர்ந்து பாருமே

உண்மையான தொன்ற தொன்றை உற்றுநோக்கி உம்முளே வண்மையான வாசியுண்டு வாழ்த்தியேத்த வல்லிரேல் தண்மைபெற் றிருக்கலாம் தவமும்வந்து நேரிடும் கன்மதன்மம் ஆகுமீசர் காட்சிதானும் காணுமே

எய்துநின்னை அன்பினால் இறைஞ்சியேத்த வல்லிரேல்
எய்துமுண்மை தன்னலே இறப்பிறப்பு அகற்றிடும்
மையிலங்கு கண்ணியங்கன் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறுமது திண்ணமே

திண்ணமென்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல்அன் புளன்புருகி அறிந்து நோக்க லாயிடும்
மண்ணமதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணி எங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பனே
Mahayogi Sivavakiyar
                                     
Method and practice of vaasi yoga by Mahayogi Sivavakiyar
Vaasi practices have been cultivated by most distinguished people in the universe.
The solid superstructures have identified on the nerves of the humans and its foundations of patterned conditions in this vaasi yoga practices. Mahayogis practices different types of vaasi yoga depends on the strength of the human physical and internal body.
In the same way, since in action it frequently happens that no delay of results is permissible? Mostly I feel the truths that appeared to me of some importance of which some other people were generally ignorant, as it appears in my comments on some posts few years back.
Here as instance the verses of the first poem says the closing of the mouth and nose; the breath pass through the line which brings the streamline of the connection where it has been connected as source to the universe. And secondly the closing of all the doors and open the upper doors which go through and reach the plain of knowledge where it glows. Thirdly, cross over the universe when opened the upper doors and return with the essences from the core of external galaxy make the meditator in ecstasy. Fourth fifth, and sixth says about yogi principle and concepts and how they were characterized when they crossover the universe.
Here resolved to exercise my own judgment in re examining verses whenever it makes me mad to get confuses either I should be duly qualified in this verses to understood. Sometimes, its rooted out from mind all errors when continuing the practices of the meditations or with the nearness of great master’s touch. Usually I imitate the master’s way of approach in teaching, delay the facts and divert the people to bring in to original way of truths. So they mostly think I diverting or didn’t say the truth.  
It’s happened usually to all disciples like myself when tends to learn the sastras from the well versed masters. But they never tell lies. They may give partly. Other verses give the practices of the line of breath section and its appearances through internally. Most of the times made a variety of observations and through it with some experiences.

ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகார ணத்திலே
நாக்குமூக்கை யுள்மடித்து நாதநாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லீரேல்
பார்க்கப்பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே

வல்லவாசல் ஒன்பது மருத்தடைத்த வாசலும்
சொல்லும் வாசல்ஓரைந்துஞ் சொல்லவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே

விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே

தானிருந்து மூலஅங்கி தணலெழுப்பு வாயுவால்
தேனிருந்து வரைதிறந்து தித்தியொன்று ஒத்தவே
வானிருந்த மதியமூன்று மண்டலம் புகுந்தபின்
ஊனிருந்த தளவுகொண்ட  யோகிநல்ல யோகியே

மச்சகத்துளே இவர்ந்து மாயைபேசும் வாயுவை
அச்சகத் துளேயிருந்து அறிவுணர்த்திக் கொள்விரேல்
அச்சகத் துயேயிருந்து அறிவுணர்த்திக் கொண்டபின்
இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே

மவுன அஞ் செழுத்திலே வாசியேறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனுநானு மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே

உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருள் தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே

சிட்டர்ஓது வேதமும் சிறந்தஆக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்ற மெய்ம்மை நுால்களும்
கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்

அறிந்துநோக்கி உம்முளே அயன்தியானம் உம்முளே
இருந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரு உம்முளே
Mahayogi Sivavakiyar


The final verses describes about the Vedas, agamas, notes and books, stories and all well old built and make ups will be dumped in to waste yard, when the breath identified as to reach god. Understand of oneness and the internal meditations to cross over the death when the top most doors have been trained to open internally. The distinction between the god and the breath of the soul has been explained in a simple way when the vaasi yoga practices have been followed by yogis.


1 comment:

Vethathiri Maharishi - Anuradha Selvakumar said...

வாழ்க வளமுடன்🙂🙏