Wednesday, December 28, 2011

ஓளவையார் குறள் (OVVAIYAAR KURAL)


ஓளவையார் குறள்

“கற்கிலும் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு”

உயர் ஞான தரிசனம் என்ற வரிசையில் ஔவையார் பாடிய இறுதி குறள் இது.
யோகத்தின் படிகளை முகத்தில் அறைந்தாற் போல் மிக எளிமையாக பாடப்பட்ட “ஔவையார் குறள்” ஞானத்தின் மிக முக்கிய புதையலாகவும் மற்றும் சரம் எனப்படும் சர பார்க்கும் கலையும் இவற்றில் மறைந்திருப்பதால் இந்த குறள்கள் இன்றளவும் யோகிகளால் போற்றப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது.

ஓளைவையார் ஜனனம் ஓர் மகா அற்புதம் என்று சித்தர்கள் போற்றுகின்றனர். அம்மையாரின் குறளில் ஞான யோகங்களிள் அடங்கியிருக்கும் மிக அரிதான இரகசியங்கள் படிப்பவர்க்கு புரியக்கூடிய அளவிற்குத் தெளிவாக இருக்கின்றன.

ஞான நுல்களை தொடர்ந்து வாசிப்பதிலும் கேட்பதிலும் ஞான எண்ணம் உதித்து ஞான கர்மத்தையும் செய்வானேயானால் அதன் பயனாக இறைவனைக் கண்டு மோட்சத்தை அடைவான் என்று வேதங்கள் ஒங்கி ஒலிக்கிறது. இதையே தவ பெருமான் ஔவையார் மேலே காணப்பட்ட குறளில் மிக எளிமையாக உரைக்கிறார்.

யோகிகள் யோகத்தின் ரகஸியங்களை இல்லறத்தில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள வேண்டி வேத சாரங்களை திரட்டி உபநிடதமாக வழங்கியது போல் இராமயண சாரத்தை வாசிட்டமாகவும் பாரத சாரத்தைப் பகவத் கீதையாகவும் வழங்கினார்கள். இவையினுள் மிக சூட்சுமமாக யோக முறைகள் மறைக்கப்பட்டன. தகுதியுள்ளோர் அதன் ரசத்தை மட்டும் தனியாக பிரித்து உண்ண அறிந்திருந்தார்கள். காயத்திரி மந்திரம் பகவத் கீதையுனுள் மறைந்திருந்தது. சித்தர்கள் மறைபொருளாக யோகத்தை வைத்தார்கள். களவாட முடியாத பொருளில் மிக அரிதான பொக்கிஷம் யோக அப்பியாசங்களே. உலகத்தின் பாவ புண்ணியமென்னும் இரண்டு வினைகள் மனித பிறப்பிற்கு எல்லையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. சித்தர்கள் சுரம் சரம் என இருவகைப்பட்டு நாத மூலமாகவும் வாயுக்கள் மூலமாகவும் அறிய வேண்டி நுற்பாக்களை இயற்றிவைத்தார்கள்.

ஓங்கார சொருபமான அகார உகார மகாரமே காயத்திரி சாவித்திரி சரஸ்வதியாகிய திரிசத்திகளாகும். பரமே பிரணவமாக இருக்கிறது. பரம்மம் புர்வமும் பரமுமற்றது. தை ஞான ஸ்வருபியாகவும் காண்பவனே கண்களை உடையவன் என்று அனைத்து வேத சாஸ்திரங்களும் ஓங்கி ஓலிக்கிறது.

ஆகாயத்தில் சூரிய சந்திரர்களை இறையருள் ஏற்படுத்தியது போல பஞ்சபூதத்தாலாகிய சரீரத்திலும் சூட்சுமமாக சூரிய சந்திரர்களாகவே நின்று இருட்டு வெளிச்சங்களை உண்டாக்கி ஞான நித்திரையில் லயித்து பிரம்மானந்தத்தில் சொக்கியிருக்கவும் செய்து விடுகிறது.

வேழமுகத்து என்ற நுலில் மிக சூட்சுமமான அப்பியாசத்தை “சத்தத்தினுள்ளே சதா சிவங்காட்டி” என்றே சொல்லப்பட்டிருக்கிறது. வலம்புரியாகிய வலது காதின் மூலமாகவே யோக அப்பியாசத்தைக் உணர ஞான நுல்கள் சொல்லியிருக்கின்றன. நாதமும் அதன் தாக்கமும் யோகம் கூட கூட சமாதியினுள் கொண்டு போய் சேர்த்து விடும்.
வசிட்டர் இராமபிரானுக்கு புகட்டிய யோக முறைகள் மகாமுனி காகபுசுண்டரிடம் பாடம் கற்றுணர்ந்தது.

“இரேசகம் புரகம் கும்பகம்” இவற்றை வசிட்ட முனிவர்க்கு மகாமுனி காக புசுண்டர் விளக்கி உணர்த்தியதே யோகத்தின் உச்சநிலை என்று எல்லா நுல்களும் இன்று வரை ஆணித்திரமாக வெளிப்படுத்தியுள்ளன. காக புசுண்டர் யோகத்தின் கடைசி நிலையை “புசுண்டர் யோக கீதம்” என்ற நுலில் சொல்லப்பட்ட வார்த்தைகள் வாசிப்பவரை மயக்க முற செய்து விடும். பிறவி தொடரை அறுத்து விட கூடிய யோக நிலையை காக புசுண்டர் அறிவுறுத்தும் பொழுது படித்து முடிக்கும் முன்னரே நிஷ்டைக்கு தயாராகி விட வேண்டும். மிக நேர்த்தியாக கோற்கப்பட்ட யோக நிலைகள் அவைகள்.

சாங்கியம் கிரியை கிரியா யோகம் கர்ம யோகம் என்ற இந்த நான்கும் ஞான சாதனைகளுக்காக ஏற்ப்பட்ட தொழிலைப் பற்றி சொல்வதாகும். சரீரத்துக்குள் தவ ஒளி கலந்திருப்பது எள்ளில் எண்ணெய் இருப்பது போல அதன் தன்மையை உணராமலேயே வாழ்நாள் முழுவதும் வயிற்று பிழைப்புக்காக வேலை செய்து கொண்டுயிருக்கிறோம். என்னையும் சேர்த்தே. உபயோகமற்றவன் என்று என்னை பல குருமார்கள் ஏசினதே சாட்சி.

வேலை பளு காரணமாகவும் நேரமின்மையுமே எழுதாமைக்கு காரணம். புது வருடம் இறை ஆசியை எல்லோருக்கும் வழங்கட்டும். 

No comments: